முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
மக்கள் விரோத நீதிமன்றங்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 134
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 15 செப்டம்பர் 2010 12:30

Madras-High-Court

 

 The American people must be made the masters and not the servants of even the highest court in the land.

Theodore Roosevelt

 அமெரிக்க மக்கள் இந்நாட்டின் உச்ச பட்ச நீதிமன்றத்திற்குக் கூட எஜமானர்களே தவிர, சேவகர்கள் அல்ல. இதுதான் தியோடர் ரூஸ்வெல்ட் 1912ல் சொல்லியது.

 ஆனால் இன்றைய நீதிமன்றங்கள் மக்களுக்காக செயல்படுகின்றனவா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மக்கள் ஆட்சி என்று பெயருக்கு வைத்துக் கொண்டு, பெரும்பாலும், மக்கள் விரோத தீர்ப்புகளையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன.

 இன்று பரபரப்பாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கும் ஒரு தீர்ப்பை குறித்துதான் இந்தப் பதிவு.

 தமிழக அரசு பள்ளிக் கட்டணத்தை சீரமைக்க நியமித்துள்ள கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை குறித்து ஆராயும் முன், இவ்வழக்கு பற்றிய பின்புலத்தை பார்ப்போம்.

 

12

 

அரசு அதிகாரிகள் மாமூல் வாங்குவதில் ஒரு முறை உண்டு. போக்குவரத்து ஆணையராக ஒருவர் நியமிக்கப் படுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.   அவர் வந்தவுடன், ஓசூர் போக்குவரத்து செக்போஸ்டில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளரை மாற்றி, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ஒரு டம்மி போஸ்டில் போடுவார்.   ஓசூல் செக்போஸ்டில் ஒரு நாள் வசூல் 4 முதல் 7 லட்சம் வரை.   உடனே மாற்றப் பட்ட அந்த அலுவலர், அடித்துப் பிடித்துக் கொண்டு போக்குவரத்து ஆணையரை சந்தித்து தன்னை மாற்றாமல் இருப்பதற்கு ஒரு பெரிய தொகையை வழங்குவார். வழங்கியதும் அந்த மாறுதல் ஆணை ரத்து செய்யப் படும்.

 இது போலத்தான் தமிழக அரசு கொண்டு வந்த பள்ளிக் கட்டண ஒழுங்கு முறை சட்டம் 2009.   சட்டம் கொண்டு வந்து அச்சட்டத்தின் படி, கோவிந்தராஜன் கமிட்டி தனது பரிந்துரைகளை அளித்திருந்தாலும், இன்று வரை அது அமல்படுத்தப் படவில்லை என்பது தான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.

 இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் இருப்பதற்கு, ஒரு பெரிய தொகையை ஆளும் வர்க்கத்தை சேர்ந்த கவித்துவமான அதிகார மையம் பெற்றிருப்பதாகவும், அதை வசூல் செய்து தந்தது உளவுத் துறையின் உயர் அதிகாரி என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 எதற்காக இந்த சட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்ததோ தெரியவில்லை, ஆனால் இச்சட்டத்தின் படி அமைக்கப் பட்ட நீதியரசர் கோவிந்தராஜன், தனது பணியை செவ்வனே செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி ஒரு விரிவான கேள்வி தொகுப்பை தயார் செய்து தமிழகத்தில் உள்ள 10934 பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. இவற்றுள் 10233 பள்ளிகள் பதில் அனுப்பியுள்ளன. அந்தக் கேள்விகள் என்னவென்றால், ஒரு பள்ளியில் எத்தனை மாணவர்கள், எத்தனை வகுப்புகள், ஆசிரியர்கள் எத்தனை, அதில் பட்டதாரி ஆசிரியர்கள் எத்தனை, பள்ளியில் உள்ள வசதிகள் என்னென்ன, ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு என்று பல்வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித் தொகுப்பு அது.

 இந்தத் தொகுப்புக்கு பதில் அளிக்கையில் பள்ளிகளுக்கு ஏராளமாக தயக்கம் இருந்திருக்கிறது. இதில் உண்மையான தகவல்களை அளித்தால், வருமான வரித் துறையிடம் சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டுமோ என்று பல பள்ளிகள் பொய்யான தகவல்களை அளித்திருக்கின்றன.

 அதாவது, ஆசிரியருக்கு மாதம் 10,000 ஊதியம் வழங்கினால், அதை 5000 என்று குறைத்து தகவல் தருவது. இந்த பள்ளிகள் அனுப்பிய தகவல்களை வைத்தே நீதியரசர் கோவிந்தராஜன் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 11,000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 9000, நடுநிலைப் பள்ளிகளுக்கு 8000 மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கு 5000 என்றும் கட்டணத்தை நிர்ணயம் செய்தார்.

 ஆனால் இந்தப் பள்ளிகள் எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்குமே தெரியும். திருநெல்வேலி கடையநல்லூரில் ஒரு பள்ளி ஆண்டுக்கு 1.25 லட்சம் கட்டணமாக வசூலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன

 தமிழக அரசு கொண்டு வந்த பள்ளிக் கட்டண ஒழுங்கு முறை சட்டத்தின் படி அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியை எதிர்த்து மெட்ரிகுலேஷன் மாபியா சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.

 அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியும், நீதியரசர் கே.கே.சசீதரனும் 9 ஏப்ரல் 2010 அன்று ஒரு தீர்ப்பை வழங்கினர். அத்தீர்ப்பில்

 “… it can be said that the scheme of the present Act is in consonance with the law laid down by the Apex Court, and it by and large strikes a balance between the autonomy of the institutions and measures to be taken to prevent commercialization of education. There are sufficient guidelines in the statute for either approving or fixing the fees. The procedure prescribed provides for appropriate opportunity to the managements. The Committee is headed by a retired High Court Judge. The minority educational institutions have also to maintain non-exploitative terms as held in P.A.Inamdar’s case. The impugned Act, therefore, cannot be said to be in any way in violation of Articles 19(1)(g) and 26 or 30 of the Constitution of India.

 இந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மெட்ரிகுலேஷன் மாபியா உச்ச நீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம், அந்த அப்பீலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே தள்ளுபடி செய்தது.

 இதையடுத்து நீதியரசர் கோவிந்தராஜன் தனது பரிந்துரையை வழங்கினார்.   அரசும் அந்தப் பரிந்துரைகளின் படியே கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

 இந்தச் சூழலில் தான் மெட்ரிகுலேஷன் மாபியா மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறது.

 இப்போது இவர்கள் தாக்கல் செய்த வழக்கு, கோவிந்தராஜன் கமிட்டி நடைமுறைகளை சரிவர பின்பற்ற வில்லை என்பதுதான்.   இதனால், இந்தப் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டும் என்று கோரினர்.

 இந்த மனு நீதியரசர் தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உத்தரவிட்டார் நீதிபதி, இடைக்காலத் தடை வழங்கக் கோரும் மனு வாசுகி என்ற மற்றொரு நீதியரசர் முன்பு விசாரணைக்கு வந்தது.

 மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரன், அரவிந்த் தத்தார், முத்துக்குமாரசாமி, சிலம்பண்ணா, வி.டி.கோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.   இந்த வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை பீஸ் வாங்குபவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 இந்த மனு விசாரணைக்கு நடந்து கொண்டிருந்த போது, பாதிக்கப் படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பாக தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரின்ஸ் என்பவருக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடுகிறார்.

 அந்த வழக்கறிஞரைப் பார்த்து நீதியரசர் வாசுகி உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. ?, உங்கள் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம் ? கோவிந்தராஜன் கமிட்டி அமைப்பதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று சராமாரியான சட்ட நுணுக்கம் பொருந்திய கேள்விகளைக் கேட்டார்.

 

01tvko_Chattambi_Sw_172825f

கொல்லத்தில் வித்யாதீர சட்டாம்பி சுவாமிகளின் 157வது ஜெயந்தி தொடர்பான மாநாட்டை துவக்கி வைத்துப் பேசும் நீதியரசர் வாசுகி

பிரின்ஸின் வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் உறுதி செய்த ஒரு சட்டம் தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்கவே முடியாது, மேலும், பாதிக்கப் பட்ட பள்ளிகள் தனித்தனியாகத் தான் வழக்கு தொடுக்க முடியுமே தவிர, சங்கம் அமைத்து பொத்தாம் பொதுவாக வழக்கு தொடுக்க முடியாது, மேலும் ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்த முடிவுகள் தொடர்பான வழக்கை டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டும், ஒரு நீதிபதி விசாரிக்க முடியாது, பாதிக்கப் பட்ட பெற்றோர்கள் சார்பாக தான் வந்திருப்பதால், பாதிக்கப் பட்டவர்களின் வாதத்தை இந்த நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பிக்கும் முன்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறினார்.

 அன்று விசாரணை ஒத்தி வைக்கப் பட்டு மறுநாள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி எடுத்த முடிவுகள் தொடர்பாக டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற சுற்றறிக்கை ஒன்று இருக்கிறதாமே, என்று நீதியரசர் வாசுகி கேட்டார்.

 அப்போது மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் டிவிஷன் பென்ச்சுக்கு வழக்கை மாற்றுவது குறித்து ஆட்சேபணை இல்லை ஆனால், மாற்றுவதற்கு முன்பு இடைக்காலத் தடை கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரினர்.

 வழக்கின் தீர்ப்பை நீதியரசர் வாசுகி ஒத்தி வைத்தார்.   நேற்று இவ்வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் வாசுகி, இந்த வழக்கையும், பிரின்ஸ் என்பவர் தன்னை மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனுவையும் டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

 அதே நேரத்தில் நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

 பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல, அரசு வழக்கறிஞர், தனது வாதங்களை வலுவான முறையில் எடுத்து வைக்கவேயில்லை.   இந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அவர் வைக்கவேயில்லை.   மழுப்பலாக, பள்ளிகள் கமிட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது போன்ற சொத்தையான வாதங்களையே வைத்தார்.

 கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் பூர்வாங்கமானவை, இறுதியானவை அல்ல. அந்தப் பரிந்துரைகள் பள்ளிகளுக்கு உரிய வாய்ப்பு வழங்காமல், இயற்கை நீதிக்கு முரணாக எடுக்கப் பட்ட முடிவு. கோவிந்தராஜன் கமிட்டியில் மொத்தம் 6 உறுப்பினர்கள் தான், அந்த கமிட்டியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இல்லை, அதனால் கமிட்டியால் பள்ளிகள் அளித்த கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் சரிபார்த்திருக்க முடியாது, கமிட்டியின் பரிந்துரைகளில், பள்ளிகள் பரிந்துரைத்த கட்டணத்தை ஏன் ஏற்கவில்லை என்பதற்கான விளக்கம் இல்லை.

 அதனால் கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கும், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கும் தடை விதிக்கப் படுகிறது என்று நீதியரசர் வாசுகி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

 இப்போது சவுக்கு எழுப்பும் கேள்விகள் …

 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பென்ச்சும், உச்சநீதிமன்றமும், கோவிந்தராஜன் கமிட்டி நியமிக்கப் பட்டது சரி என்று தீர்ப்பளித்த பிறகு, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளின் மீதான குறைகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா ? உயர்நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா ?

 ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய பரிந்துரைகளின் மீதான வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்கலாமா ? அல்லது டிவிஷன் பென்ச் தான் விசாரிக்க வேண்டுமா ?

விசாரிக்க அதிகாரம் இல்லாததால் டிவிஷன் பென்ச்சுக்கு வழக்கை மாற்றும் ஒற்றை நீதிபதிக்கு, இடைக்கால தடை விதிக்க மட்டும் அதிகாரம் உள்ளதா ? 

கோவிந்தராஜன் கமிட்டியில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இல்லாத காரணத்தால் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், ஆரம்பக் கல்வி இயக்குநர், பொதுப் பணித் துறையின் இணை தலைமை பொறியாளர் மற்றும் பள்ளிக் கல்வியின் கூடுதல் அரசுச் செயலர் அடங்கிய ஒரு குழு அளித்த பரிந்துரைகள் செல்லாததாகி விடுமா ?

 இந்தக் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டதால், மெட்ரிக்குலேஷன் மாபியா அடிக்கப் போகும் கொள்ளைக்கு பலியாகும் பெற்றோர்களுக்கு என்ன நிவாரணம் ?

 கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் இயற்கை நீதிக்கு முரணானவை என்றால் பெற்றோர்களின் போராட்டங்களை கணக்கில் கொள்ளாமல் வழங்கப் பட்டுள்ள இந்த நீதிமன்றத்தின் தடை உத்தரவு இயற்கை நீதிக்கு உகந்ததா ?

 கோவிந்தராஜன் கமிட்டியின் வழிமுறைகளில் தவறு இருந்தால், பாதிக்கப் பட்ட பள்ளி நிர்வாகங்கள் அந்தக் கமிட்டியைத் தானே அணுக வேண்டும்.   அதற்கு பள்ளிக் கட்டண சீரமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் போது, உயர் நீதிமன்றம் எப்படி இதை விசாரிக்க முடியும் ?

 இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானவையா, அல்லது பணம் படைத்த மாபியாக்களுக்கானவையா ?

 பாதிக்கப் பட்ட பெற்றோர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இடைக்காலத் தடை விதிக்கும் முன்பு தனது வாதத்தை கேட்க வேண்டும் என்று எடுத்துரைத்ததை புறந் தள்ளி விட்டு, அந்த மனுவை டிவிஷன் பென்ச்சுக்கு மாற்றி விட்டு, கமிட்டி பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை வழங்கும் அளவுக்கு அவசரம் என்ன ?

 லாப நோக்கோடு கல்வி வியாபாரமாவதை தடுக்க அரசுக்கு உரிமை உண்டு என்று பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கையில், Procedural violation என்பதை காரணம் காட்டி, கல்விக் கட்டண சீரமைப்புக்கு தடை விதிக்கும் அளவுக்கு அவசரம் என்ன ?

 கல்விக் கட்டணம் குறைவாக இருந்தால், கூடுதல் கட்டணத்தை எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் வசூல் செய்து கொள்ள வழிவகைகள் இருக்கியிலும், செலுத்தப் பட்ட கூடுதல் கட்டணங்களை பள்ளிகளிடமிருந்து திரும்பப் பெற பெற்றோர்களுக்கு எந்த வழியும் இல்லாத நிலையில், மெட்ரிகுலேஷன் மாபியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க வேண்டிய தேவை என்ன ?

 இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்காது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் பதிலாக வரும்.

 ஆனால் அதையும் சந்திக்க சவுக்கு தயாராகவே இருக்கிறது.   அரசோ, சட்டமோ, நீதிமன்றங்களோ…. அனைத்தையும் விட சவுக்குக்கு, மக்களே பிரதானம்.

 மக்களுக்கு விரோதமாக தீர்ப்புகளை வழங்கும் இந்த நீதிமன்றங்கள் மக்கள் விரோத நீதிமன்றங்களே.

 

Comments  

 
0 #101 rrrrrrr 2013-04-18 12:27
Nobody is bothering about parents headache...if there are two children middle class people how can they tolerate this much of amount to pay for education. The Hon'ble Court must provide justice....but they itself is not understanding or bothering about their country people and their problems.....and providing very good(bad) Judgments to help the people hats off......... :sigh:
Quote
 
 
0 #100 Amal 2013-04-12 06:36
ஆதிமுக ஆட்கல் கல்வி நிலயம் நடத்தவில்லயா? ஓரே குட்டை.
Quote
 
 
0 #99 Amal 2013-04-12 06:35
முந்தய ஆட்சியைவிட இந்த ஆட்சியில் கல்வி கட்ட்ணம் மிகுந்த அளவில் உயர்த்தப்பட்டுல ்லது. அதை யாருமே பதிவு செய்யவில்லயே. அம்மா ஆட்சியில் எது வேன்டுமானால் செய்யலம். இப்படி ஆட்சியலகர்களை கேட்காதனால் வந்த விளைவுகலை சென்ட்ர ஆட்சியில் கன்டோம் சோ மதிரியான மேதாவிகல் காணோமே திருவாய்மலர. ஜால்ரா
Quote
 
 
0 #98 G. Selvam 2013-04-04 13:51
it's very nice, our supreme court already decided regarding this issues and gave a verdict but the interim order passed by the justice amounts to contempt of supreme court judgements. our supreme court gave an verdict under art 21A that every educational instituion whether matric or cbse to offer free education to the financialy weaker sections of the people but our state govt or the educational institution didnot come forward to implement said order.educational institution are now become a finance company. :sad: Adv. Selvam, Tirunelveli.
Quote
 
 
0 #97 emmanuel 2013-03-26 20:57
விசாரிக்கவே உரிமை இல்லை என்றால் - அதன் மேல் எந்த நடவடிக்கை எடுக்கவும் உரிமை இல்லை என்றுதானே பொருள்?

சர்டெரெட் அச்சொஉன்டன்ட் இல்லை என்றால் கணக்கை சரி பார்க்க முடியாது. எனவே தடை என்றால்... நிதிபதி மட்டும் எப்படி சரி அல்லது சரி இல்லை என்ற முடிவுக்கு வருவார்? அவர் என்ன சர்டெரெட் அச்சொஉன்டன்ட்-ஆ?
Quote
 
 
+1 #96 harekrishna 2013-01-09 12:29
how many courts are functioning in tamil nadu, in all these courts there are posts of OA, masalchi. they are for assisting the concerned officers. but the real idea of having such posts is only to spy the concerned officers and inform the PDJ or the CJM as may be. wnen a new Pdj or cjm join duty in a district, the oa and masalchi will be transferred.
next:
there is a PDJ in Krishnagiri, named Chinnappan. his is a Vasool Raja BABL. his friend is having a pety shop around the bus stand, and all the dealings are concluded only there. on 5-1-13, he acquitted a murder case accused, and the deal was Rs. 50 Lakhs for the PDJ, Rs.5 lakhs for the PP and like. this can be verified by any one. savukku should investigate about Chinnappan. he was suspended when he was PDJ Tiruvallur for leaving the office in advance. but he was given extentiion, all with the blessing of The ACJ.
Quote
 
 
0 #95 radhakrishnan 2012-12-22 18:38
In Government service also there is also a common saying that "tell me the person,I shall tell you the rule"

All should be made accountable for wrong doing.
Quote
 
 
+1 #94 manoj MADHAN 2012-09-26 18:39
over all india is loosing good students who are poor and unable to pay fees.. soon the system will pay way for only rich family to study and poor family to be a slaves.. good improvement by govt... india is developing country? no it is declining country..
Quote
 
 
0 #93 Chandiramathi 2012-08-22 14:53
Don't worry savukku,
Intelligence people will always find the ways and means to kick the arseholses of the cheats.
Once upon a time, I too thought it is very difficult to bring down the cost of education. Now, the international academic scenario is not in favour of the current system of education. It is a very stern effort taken by the former biophycical chemistry professor from Jamal Mohamed College, Trichy for the grounds of demanding information from the UGC India. Tamilnadu knows that the way sivashanmugam was sacked. But, his own philosophy is threatening the very existence of eductional institutions. May be in one or two years, we will see that all the educational in institutions not only in Tamilnadu, but in the whole India will loose their identity.
Those who want to know about the present philosophical scenario, please look into: http://knowledgeserver.wordpress.com

Another trajedy is that in India, this website is blogged!!!!! God only know the reason
Quote
 
 
-1 #92 arockiya 2012-06-05 13:10
சவுக்கு சார், இந்த சன் ஃப்லிம் நீக்கம் பற்றி ஒரு பின்னூட்டம் எழுதுங்கள். அதனால் பலன் அதிகமா, நஷ்டம் அதிகமா, இந்தியாவில் இதனால் மட்டும் குற்றங்கள் குறைந்திடுமா? உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறோ ம்.
Quote
 
 
+1 #91 neerarulkumaran 2012-05-09 10:45
Alas! we layman are unable to understand the jurisdiction of single judge who stayed a retired judge commission report which was upheld in the supreme court but one thing we know money can enter everywhere even to remote planet.
Quote
 
 
0 #90 arokiaraj 2011-08-10 14:14
supreme court ex judge is the good example for this article,the fucking central goverment is always need injustice, the united nations also there r black goats, so each and every places there are like , so ECNR implemented last 2006, each year 18 million peoples are moving to abroad for 1 person 1000 rupes means 100 cores lossing money approxmately,14 loaksabha meeting they announce ECNR 2006 And then they made adds for emmigiration through only UPA partie channals for advatising, because emmigiration department must spend 5 croes per year, SHAMELESS FUCKING SONIA RAGUL PRIYANKA NEED GANDHI NAME, WHO IS THE FATHER OF INDIRA,RAJEEIVE , BHADU THANGHABHADU SAYS ANNAI THAT MEENS MOTHER IS SONIA MEANS WHO IS THE FATHER, BY THE NAME OF ANNA KARANA TAKEN 60% OF TAMIL NADHU, BY THE NAME OF GANDHI SONIA IS TRY TO FUCK TOTAL INDIA WITH IN 2013. TRY TO OPEN CIA INDIA WEB SITE THERE U CAN FIND WITH IN 2015 CIA WANTS TO SPLIT ALL STATES,
Quote
 
 
+2 #89 velavan 2011-07-27 12:21
திரு.சவுக்கு அவர்களே சினிமா நடிகைகளும் பொது சேவையும் என்ற் தலைப்பில் தாங்கள் ஏதாவது எழுதக்கூடாத?
Quote
 
 
+4 #88 nagaraaj 2011-06-12 12:08
savukku is always doing right things to the people
Quote
 
 
+4 #87 yeman 2011-04-12 18:30
NOT ONLY IN HIGH COURT BUT ALSO IN LOWER COURTS VERY VERY POOR CORRUPTED FELLOW ARE PLACED AS JUDGES...

I AM REALLY WORRIED... THEY DON'T KNOW BASIC LAWS?
COMMUNAL INTIMACY... POOR KNOWLEDGE ... HIGHER AUTHORITIES INTERVENTION..... ETC..ETC...



I NOW REQUEST AMERICA OR ANY OTHER COUNTRY... KINDLY RULE AS....
Quote
 
 
+1 #86 V.SABARIMUTHU 2011-03-09 11:38
The courts in India,as a rule,deliver judgments in bad faith. This is explained in www.howeveythinghappenedinindia.blogspot.com
Quote
 
 
+5 #85 sai 2011-03-04 19:22
I like your brave. i love savukku
Quote
 
 
+2 #84 CHANAKYA 2011-03-03 09:53
Dear Readers,
Regarding this issue, the case already was processed by Supreme Court bench, if any hurdles rises means then the entire case issue is first dealt by SC only. but here, Without any division bench, HC judge treated the case urgent and dismandled. Ashame of this. Judge. Vasuki, Why u gave this kind of judgement. pls kindly consider the public. u r eligible to spend 2lacs/year for ur child or grand child. but the persons who r all comes under below poverty line will not. try to follow the truth. Our national Slogan itself saying "Truth alone Truimph" by sitting in a honorable place dont misuse ur divineness..
Quote
 
 
+3 #83 antothomson 2011-02-16 20:27
persons must be shot dead , who where doing this action :cry:
Quote
 
 
+1 #82 Paruthi 2011-01-22 14:36
Good Job Savuku.

Everyone one knows, hows much the JV got in this case. But as you rightly said, no one can raise the voice.
Atleast we have a honest CJI at supreme court now.
Quote
 
 
+1 #81 varadhan 2011-01-09 18:25
Well done. Keep it up. but, you must be financially good. them only you can run this type of sites.
Quote
 
 
+2 #80 kk 2010-12-22 17:45
Lets compare the boarding schools fees run by minority institution in nilgiris district.
GOOD SHEPARD SCHOOL Rs.4 lacs/ year
LAWRENCE SCHOOL Rs.3 lacs
St.JUDES SCHOOL Rs.2 lacs
St.JOSEPH SCHOOL Rs.2 lacs
KOTAGIRI PUBLIC Rs.1.5 lacs
HILDAS PUBLIC Rs.2 lacs
These fees are for students studying in 4th std. Are they really spending this much to the students ? .
Quote
 
 
+2 #79 Sathish Ramasamy 2010-12-20 06:03
very bold article. This will make people to think and know the truth behind these kind of judgement.
Quote
 
 
0 #78 m.sriraman 2010-12-08 22:08
the new committee while deciding the representation of private school for revision of fee should also hear the parent and teachers of concerned schools and the committee should also visit by constituting a committee consists of parents and teachers to see the basic amenities provided in the school for the student and teachers such as toilet ,water facility,salary of teachers and non teaching staff.
Quote
 
 
+2 #77 arivalagan 2010-12-01 22:28
very good, it picture out how karunanidhi using commitee for money making fraud karunanidhi and his family
Quote
 
 
+1 #76 SNR 2010-10-12 16:16
Govindarajan - Committee did a "Scheme" like "House Tax". This only increase the "Lanjam".
கண்மனிகள் வாங்கும் லஞ்சம் இன்னும் பெருக ஏற்படுத்தப்பட்ட ிருக்கும் ஒரு வாய்ப்பு. அது ஒரு நீதிபதியின் பேரால் நடக்கிறது. அவருக்கு இதுவெல்லாம் தெரியாது.
இஞ்சினீயரிங் கல்லூரி போல ஒரே மாதிரி கட்டணம் ஏன் நிர்ணயிக்க முடியவில்லை. நிர்ணய்யித்த பிறகு - நமது நாட்டில் - ஒரு வசதி கூட்டவோ அல்லது குறைக்கவோ எவ்வளவு லஞ்சம் வாங்கப்படும்... ஒரு நடைமுறை வேண்டும்... ஆனால் அது இருப்பதை விட மோசமானதாக இருக்ககூடாதல்லவ ா.
Quote
 
 
+1 #75 soori 2010-10-10 13:13
அன்பான நண்பர்களுக்கு
இந்த பதிவில் ஒரு விளக்கம மற்றும் ஒரு கருத்து
1 . இந்த பள்ளி கட்டண விவகாரத்தில் 2008 -09 இறுதியில் கோவை SBOA பள்ளியால் கொண்டுவரப்பட்ட ஐம்பது சதவீத கட்டண உயர்வும் அதை தொடர்ந்து அந்த பள்ளியின் நிர்வாகத்துக்கு எதிராக போராடி இன்றைய தீர்ப்பு வரையிலான எல்லா நடவடிக்கைகளுக்க ும் முதுகெலும்பாக உழைத்திருக்கும் இந்தப்பள்ளியின் ஆதரவின்றி தனித்து பதிவு செயப்பட்டுள்ள SBOA பெற்றோர் கழகம் குறித்த செய்தி இந்த தருணத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது என் கருத்து.
2 . இந்த விவகாரத்தில் அரசும் அதன் தலைமை பீடத்தில் உள்ள மஞ்சதுண்டும் அவரின் அடிவருடிகளும் , ரத்த பந்தங்களும் நடத்தும் காடு தர்பாரின் உண்மை முகத்தை கிழித்துக்காட்ட ும் சவுக்குக்கு நன்றி

அன்பான
சூரி
Quote
 
 
+1 #74 ஹரிஹரன் 2010-10-01 11:03
உங்கள் பதிவுகள் புதிய வெளிச்சத்தை தருகிறது. சில திருத்தங்கள்..

1. நீளமான பதிவை சுருக்கவேண்டும் .
2. புகைப்படங்களின் அளவு பெரிது அல்லது தவிர்க்கப்படவேண ்டும்.
Quote
 
 
+5 #73 பொதுஜன 2010-09-26 22:08
நாடாளுமன்றத்தை தகர்க்க வந்த
நாசகார சக்திகளுக்கு ராஜ உபசாரம்
மும்பையை சிதறடித்த, மூர்க்க
குணம் கொண்டவனுக்கு ராஜ உபசாரம்

விஷ வாயு மூலம் போபாலில் கூட்டமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்
கோவை மாநகரில் கொத்து கொத்தாய்
கொன்றவருக்கு ராஜ உபசாரம்

இந்திரா மறைந்தவுடன், சீக்கியரை
கூட்டமாய் கொன்றவனுக்கு அமைச்சர் பதவி
இலங்கைத்தீவில் தமிழர்களை கொடூரமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்

தலித் இளைஞரை சென்னையில் கொன்ற
டக்ளசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
தமிழக முன்னாள் அமைச்சரை
கொன்றவருக்கு மத்திய மந்திரி பதவி

சொல்லிக்கொண்டே போகலாம் இதுபோல்
பல பல நீதி தவறிய உதாரணங்களை
திட்டமிட்டு மக்களை கொன்றவர்களை
திட்டமிட்டே நீதிபதிகள் காப்பாற்றினர்
Quote
 
 
-2 #72 பொதுஜனம் 2010-09-26 22:08
மனசாட்சி இல்லாத நீதிபதிகளை கேட்டால்
"போதிய சாட்சி" இல்லை என்றே கூறுவார்கள்
கொடுமை யாதெனில், கோவை பஸ் எரிப்பு
குற்றவாளிகளுக்க ு தூக்கு விதித்திருப்பது தான்

மாணவிகளின் இறப்புக்கு காரணமானவர்கள்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்! சந்தேகம் இல்லை.
பேருந்தை கொளுத்தியது யாரையும் கொல்வதற்கு அல்ல
தலைமையின் "கைதுக்கு" தங்கள் எதிர்ப்பை காட்டவே

பேருந்தை கொளுத்தியதற்கு தூக்கு என்றால்
இந்திய மக்கள்தொகையில் கணிசமான அளவு
குறைந்திருக்கும ், பல அரசியல் தலைவர்களும்,
பல பேருந்துகளும் கூட குறைந்திருக்கும

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பதினாறில் எட்டுபேர்
கறைபடிந்தவர்கள் என ஒரு முன்னாள் நீதிபதியே
கூறும் இந்நாளில், பேருந்தை எரித்தவர்களுக்க
தூக்கு விதித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ?

எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து வழங்கப்பட்ட
எதிர்மறைத் தீர்ப்பில் மூன்று உயிர்கள் பலியாக வேண்டுமா?
சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! சிந்தியுங்கள்
நாளை நமக்கும் இதுபோல் தீர்ப்பு வரலாம்
Quote
 
 
+2 #71 Er.L.C.NATHAN 2010-09-20 17:01
MIKAVUM THUNICHCHALAANA PATHIVU.PAARAATTUKKAL!! !
Quote
 
 
-6 #70 anban 2010-09-20 17:00
"கோவிந்தராஜன் கமிட்டியின் வழிமுறைகளில் தவறு இருந்தால், பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் அந்தக் கமிட்டியைத்தானே அணுக வேண்டும்." என்று சவுக்கு வாதிடுகிறது.

6000 பள்ளிகள் மேல்முறையீடு மேல்முறையீடு செய்தால், இப்போது பரிசீலிக்க முடியாது ஓர் ஆண்டு ஆகும் என்று சொல்கிறது கோவிந்தராஜன் கமிட்டி. ஆனால் தான் பரிசீலனை இல்லாமல் அறிவித்த கட்டணத்தைத்தான் வாங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத் துகிறது அந்தக் கமிட்டி. இதுதான் சவுக்குக்கு தெரிந்த நியாயம் போலும்.

பின்தங்கிய குடும்பத்து பிள்ளைகளும் உயர்தரமான கல்வி பெற உதவி வருவது மெட்ரிக் பள்ளிகள்தான். உங்கள் விருப்பு வெறுப்புகளை தனிப்பட்ட மனிதர்கள் மீது காட்டிவிட்டுப்ப ோங்கள். 27 லட்சம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தோடும ், ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் வாழ்க்கையோடும் விளையாட வேண்டாம்.

எதிர்கால தலைமுறையை பாழாக்கும் வேலையை இத்தோடு நிறுத்துங்கள்.
இப்படிக்கு
அன்பன்
Quote
 
 
-1 #69 anban 2010-09-20 16:58
நீங்கள் வைத்திருக்கும் சவுக்கினை, தமிழ் நாட்டில் இருந்துவரும் ஓரளவு தரமான கல்வி முறையான மெட்ரிக் கல்வி முறைக்கு எதிராக சொடுக்கியிருக்க ிறீர்கள்.

11000 தனியார் பள்ளிகளில், தரம் இல்லாமல் அநியாய கட்டணம் வாங்கும் பள்ளிகள் மிக மிக குறைவே. அங்கெல்லாம் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது சரியே. ஆனால் கோவிந்தராஜன் கமிட்டி ஒரு குழந்தைக்கு ஓர் ஆண்டுக்கு முன்னூறு ரூபாய் என்பதுபோன்ற நடைமுறை சாத்தியமற்ற கட்டணத்தை அறிவித்தது.

அரசு பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு 18000 ரூபாய் செலவிடுகையில், தனியார் பள்ளிகளில் முன்னூறு ரூபாய் மட்டுமே வாங்க உத்தரவிடுவது எப்படி நியாயமாகும்?

இப்படிக்கு
அன்பன்
Quote
 
 
+1 #68 charles 2010-09-19 19:01
kalviyai kevalamaaki naaikale unkkalal school kurintha kattanathil nadatha mudiyalayalana mooodittu pongada aiyokiya payalukala : ::
Quote
 
 
+2 #67 Krish_77 2010-09-18 22:51
Check this week's kumudam - some Tallman writing about Radhakrishnan and Rajendran - with photos of london visit
Quote
 
 
+1 #66 babu 2010-09-18 06:06
On 17.09.2010 TOI news " Ex-law minister Shanti Bhushan submit the list of 16 ex-CJIs in sealed cover to SC. Says 8 were definitely corrupt", 6 definitely honest" and "definite opinion can't be expressed about other 2". Bhushan sought to raise for the judiciary the cost of any punishment to him by saying that he was ready to face any consequences.
Quote
 
 
+1 #65 GopinathK 2010-09-18 01:51
Great work savukku...just because of your kind of people..the young generation like me is getting inspiration to come to politics saakadai to correct it...many tamil youth people in US are really inspired because of you...keep going...we are here for you always...

thanks
Gopi
Quote
 
 
+5 #64 Ravishankar 2010-09-18 01:49
அதிகார வர்க்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் உங்கள் பணிக்கு பாராட்டுகள். சென்னை காவல்துறையின் புதிய கட்டப்பஞ்சாயத்த ு ஒன்றை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன ். சென்ற மாதம் ஈழத்தமிழரான தொலைக்காட்சி அதிபர் ஒருவரை சென்னைக் காவல் துறையும் அருள் எழிலன், அருள் செழியன் என்ற இரு பத்திரிகையாளர்க ளும் கடத்திவைத்து 15 இலட்ச ரூபாய்களை மிரட்டிப் பறித்திருக்கிறா ர்கள். இந்தக் கடத்தல் குறித்து கடத்தியவரே துணிச்சலாகக் கொடுத்திருக்கு ம் வாக்குமூலம் இது:
http://inioru.com/?p=16752
கடத்தப்பட்டவரின ் வாக்குமூலம் இது:
http://thesamnet.co.uk/?p=22213
இந்த விடயங்களுக்கு பின்னாலிருக்கும ் உண்மைகளை சவுக்கு வெளியே கொண்டுவந்து காவல்துறையையும் அந்தப் பத்திரிகையாளரைய ும் அம்பலப்படுத்த வேண்டும்.
Quote
 
 
+2 #63 e.samy 2010-09-17 17:15
very good savukku.keep it up.
Quote
 
 
+1 #62 Senthil.S 2010-09-17 11:47
Dear Savukuu,
Great !! Now a days judegement decided outside of court only and favour of who is having money.In india nobody consider about poor and middle class people. This attitiude going very serious and danger situation Until people get awareness or co opeartion. All crimanls are now a days politician or members of parliment. How can we expect good rule from them?

Senthil.S
Quote
 
 
+1 #61 Ganesan 2010-09-17 08:06
What to do? We keep this issue until get next one. So We need a Big change in the top.Today 80% of judicial System also corrupted.We people should teach a lesson in the coming election.I do not think that will happen.But We have express our views and keep people in the line. We have to wait until get time, the time has to come.
Change won't Happen itself, We need to work. So SAVUKKU is doing good job.
Quote
 
 
+2 #60 Sakthi 2010-09-17 01:49
Sir,
Be careful, Mr.K and co can do anything with the amount of money they have. So, romba romba careful a irunga sir....... ungal sevai naatuku thevai.....
Quote
 
 
+2 #59 kathiresan 2010-09-16 19:11
மக்களை பற்றி யாருமே கவலை படுவதில்லை
Quote
 
 
+1 #58 MEITHEDI 2010-09-16 16:40
THANKS FOR YOUR INFORMATIONS,

FEED TO PUBLIC,AGITATIO N SOONLY.
Quote
 
 
+4 #57 குரு 2010-09-16 16:32
//ஆனால் அதையும் சந்திக்க சவுக்கு தயாராகவே இருக்கிறது. அரசோ, சட்டமோ, நீதிமன்றங்களோ…. அனைத்தையும் விட சவுக்குக்கு, மக்களே பிரதானம்.//


தங்கள் துணிவிற்க்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துகள்.
Quote
 
 
+3 #56 paramu 2010-09-16 15:40
சவுக்குக்கு வாழ்த்துக்கள்,,
உண்மையை பேசவே பெரிய துணிச்சல் வேண்டி இருக்கு இப்போதெல்லாம், இந்த விமர்சனம் இருக்கே இதுதான் உண்மையான துணிச்சல், "நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத சொற்கள்"
முண்டாசுக கவியை நினைவுபடுத்தும் சொற்கள், யாராயிருந்தா என்ன சாய்வு மனப்பான்மையுடன் என்ன தீர்ப்பு வேண்டி கிடக்கு,, குழந்தைங்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரின் வேதனை தெரியாதவர்கள்!! !!
Quote
 
 
+2 #55 அதி 2010-09-16 13:40
வணக்கம்,
இந்த விடயத்தில், மக்களின் மனநிலைக்கு ஒரு சிறிய உதாரணம், கடந்தவாரத்தில் போச்சம்பள்ளியில ் ஒரு பள்ளி வளாகத்தில் நடந்த ஒரு விபத்தின் காரணமாக பள்ளி மற்றும் தாளாளர் மீது ஏற்பட்ட தாக்குதல். நீதிமன்றம் தனது கடமையை சரிவர விருப்பு வெறுப்பின்றி செய்ய தவரும் பட்சத்தில் சட்டத்தைப் பற்றி மக்கள் கவலைப்பட போவதில்லை.
நன்றி.
Quote
 
 
+1 #54 basha 2010-09-16 12:32
please continue your service on behalf of innocent people.
Quote
 
 
+1 #53 செழிபா 2010-09-16 12:23
வணக்கம் தோழர் சவுக்கு,

உங்களின் பதிவுகளை தொடர்ச்சியாக படித்துவருபவன் நான். இதுவரை பின்னூட்டமொன்று ம் இட்டதில்லை, இது ஒரு அவசரம் கருதி. நானும் ஒரு வலை தளம் நடத்திவருகிறேன் . கீழ்காணும் முகவரியில் என்னை தொடர்பு கொள்ள முடியுமா?

தோழமையுடன்
செழிபா
மின்னஞ்சல்: nallurmuzhakkam @gmail.com
வலைதளம்: http://nallurmuzhakkam .wordpress.com/
Quote
 
 
+2 #52 VMMaran 2010-09-16 11:58
Quoting வேதாளம்:
"எவ்ளோ அடிச்சாலும் நாங்க தாங்குவோம்டா..."
மக்களிடம் இந்த அரசியல் வியாதிகளையும்.நீதிமன்றங்களையு ம் பார்த்து ஒரு வித சலிப்பு மனப்பான்மை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
ஆனால் ஒரு நல்ல வழிகாட்டி மக்களுக்கு கிடைத்தால் விரைவில் ஒரு யுக புரட்சி சாத்தியம்.


எந்த மக்களுக்கு? இந்தியர்களுக்கா ? சும்மா விளையாடாதீங்க! இல்லையென்றால் நீங்க ஒரு கம்யூனிஷ்டு தோழராகவோ அல்லது ஒரு அப்பாவியாகவோ இருக்க வேண்டும்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 31 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2692
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week35332
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month248151
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12770270