முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 50
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 29 ஜூன் 2011 16:26

 

சவுக்கு யாரைப் பார்த்து இப்படி கேட்கிறது என்று வியக்காதீர்கள். நக்கீரன் இதழை நடத்துபவர்களை பார்த்துதான் இப்படி கேட்கிறது.

 

இன்று வெளி வந்துள்ள நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. "மீண்டும் எரியும் தினகரன் வழக்கு" என்று.   "அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்க்கப் பட்ட ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஜெ.அரசு. மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் 2007ல் தாக்கப் பட்டு, தீவைக்கப் பட்டு 3 உயிர்கள் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐயும் மாநில அரசும் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.   திமுகவில் யாருக்கு செல்வாக்கு என்று தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பால் அழகிரி ஆதரவாளர்கள் வெகுண்டனர். அட்டாக் பாண்டி தலைமையிலான 16 பேர் டீம் தாக்குதலில் இறங்கியதில் வினோத், கோபி, முத்து ராமலிங்கம் ஆகிய 3 ஊழியர்கள் பலியாயினர். அப்போதைய திமுக அரசு இதை சிபிஐ யிடம் ஒப்படைத்தது. அட்டாக் பாண்டிக்கும் அவருடனான 16 பேருக்கும் நேரடித் தொடர்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.” என்று தொடர்கிறது அந்தக் கட்டுரை.

 

இந்தச் செய்தியை வெளியிட உங்களுக்கு துளி கூட வெட்கமாக இல்லையா என்று நக்கீரனைப் பார்த்து கேட்க விரும்புகிறது. ஏன் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்க விரும்புகிறது என்று நினைப்பவர்கள், இந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று, இது தொடர்பாக சவுக்கில் வெளி வந்த இந்தக் கட்டுரையை படிக்கவும். படித்து விட்டு நீங்களே சொல்லுங்கள். 


ப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.   உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….

 

நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

 

இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம்.   அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

 

நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார்.   சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.

IMG_9359

இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.

 

அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.   சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.   இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

 

குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ?   மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.

dinakaran

தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ?

 

“ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்..   அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது.   வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.

dinakaran_1

குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார்.   அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.

 

எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.   சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

 

இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

1

சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.

 

இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.

IMG_9358

இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ்.   ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான்.   அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது.   ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்….   அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம்.   (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.

 

குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.   ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.

 

அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான்.   இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம்.   முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

kamaraj-060411

 

kamaraj-06048

 

kamaraj--c-060411

 

மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்…..   அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர்.   “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

 

எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ?

 

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

DSC_5655

குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.

இப்போது சொல்லுங்கள்.  இதை எழுத நக்கீரனுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்ட கேள்வி சரிதானே ?

 

Comments  

 
0 #33 vIJAY_81 2012-10-25 15:21
Nakkeran is worst magazine.
Quote
 
 
+1 #32 Hiranopax 2011-07-12 14:54
Sir,
Though your posts are eye opening. Your language seems disturbing. Please use moderate language to express your opinions...

Continue ur great work
Quote
 
 
+1 #31 maduraikaran 2011-07-06 03:13
நக்கீரனின் தற்போதைய சர்க்குலேசன் என்ன என்பதை வாசகர்களுக்கு தெரிவித்தால் அவர்களின் வெற்று வேட்டுத்தனம் அனைவருக்கும் தெரியும். தயவுசெய்து அதை தெரியப்படுத்தவு ம் நன்றி
Quote
 
 
0 #30 R.SABARINATHAN 2011-07-05 18:01
NADUNILAI THAVARUM ANAITHU PRESS GALAI PATRIYUM SAVUKKU SAADA VENDUM ENBATHAE ENGAL ETHIRPARPPU.(DINAMALAR,DINA MANI)
Quote
 
 
+1 #29 உண்மை விளம்பி 2011-07-05 09:05
நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை என்றால் காக்கா மீசை கோப்பால், குருமாராஜ் போன்றோர் எல்லாம் மாமா பசங்கள்....இந்த பொழப்பு பொழக்கிறதுக்கு இவனுங்க கன்னட பிரசாத்கிட்ட ஏதாவது வேல பாக்கலாம்....(இதனால் கன்னட பிரசாத் தனக்கு எதாவாது அவமானம் என்று கருதினால் தயவு செய்து மன்னிக்கவும்)
Quote
 
 
0 #28 siva n 2011-07-04 20:44
சவுக்கு,நீன்கல் ய எப்போதும் [திமுக] வை மட்ட் குரையாக சொல்கிரிரகல் மட்ட்ர கசெகலை செயும் தவருகல் தெரெயத,இல்லை உஙலுகு பயம நான் எநிந்தைனயதலதை 6 மாதஙலகெஅ படிகெரன்,அன்ட்ர ு முதல் இன்ட்ரு வரை ஒருவரை பட்ரி குரிபக
Quote
 
 
+5 #27 ஆர்.தியாகு 2011-07-04 15:48
நக்கீரன் என்றால் குற்றவாளிகள் கூடாரம்.
இவனையெல்லாம் தூக்கில் தொங்கவிட்டு செருப்பால் அடிக்க வேண்டும்.. இவன் ரெட்டி இனத்தை சேர்ந்தவன்.. தாய்மொழி இவனுக்கு தெலுங்கு.
Quote
 
 
+1 #26 prabakaran 2011-07-02 21:21
pichu uthareetteenga savvuku
Quote
 
 
+3 #25 க.விமலன் 2011-07-02 13:42
இப்படிப்பட்ட அயோக்கியனுக்கு வைத்திருக்கும் பெயர் நியாயமான ஒரு பெருந்தலைவரின் பெயர் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவும் ஒரு பொழைப்பா... தூ...தூ......
Quote
 
 
+6 #24 mathivathini 2011-07-02 11:53
நக்கீரன் பத்திரிக்கையை பற்றி மட்டுமொ எழுதும் சவுக்கு தினமல்லர், தினகரன், தினமணி என கொஞ்சம் இந்த பத்திரிக்கைகள பக்கமும் தன் கவனத்தை திருப்பவும்.
Quote
 
 
0 #23 Rk 2011-07-01 17:39
[ஃஉஒடெ நமெ="னிர்மல"]இட்'ச் வெர்ய் நிசெ டொ ஹெஅர் தெ ட்ருஎ பிச்டுரெ இன் பொலிடிச்ச்.... புட் இ நொஉல்ட் சுக்கெச்ட் டொ உசெ சொஃப்ட் லஙுஅகெ டொ பொஇன்ட் ஒஉட் தெ சொர்ருப்டிஒன்ச் அன்ட் அப்ட் தெ சொன்செர்னெட் பொலிடிசிஅன்ச்.

ரெக்ச்
நிர்மல[/ஃஉஒடெ]ம்

ஹி நிர்மல, ஏது ஸவுக்கு இப்படிதன் அடிக்கும்.
Quote
 
 
+2 #22 Anbu 2011-07-01 15:47
nakiiran methane veen vatham eni thevaiyatrathu,
Quote
 
 
-2 #21 nirmala 2011-07-01 12:21
it's very nice to hear the true picture in politics.... but i would suggest to use soft language to point out the corruptions and abt the concerned politicians.

regs
nirmala
Quote
 
 
+6 #20 elango2010 2011-07-01 11:10
நக்கீரன் ..
தமிழ் பத்திரிகை உலகின் அவமான சின்னம் .
தர்மம் நிறைந்த தொழிலை தரகு தொழ்லில் மாற்றியது .
பணத்திற்காக எதை வேண்டுமானுலும் எழுதலாம் என்று நிலையை கொண்டு வந்தது ,
கோபால் ----இவரது challange என்ற நூலை படித்து பிரம்மித்து போய் இருந்தேன் .
இபோது அதற்காக வெட்க படுகிறான்....இனி மேல் இந்த நவீன மாமாக்களின் (modern pimps ) நக்கீரன் தொட கூட மாட்டேன் ...
Quote
 
 
-2 #19 ramaswamykannan 2011-07-01 11:05
தமில் தலைவரை pathy pesaa entha naykalukku enna thaairiyam entha polaapuku naakiran pondaiya kooty vidalam goody goodyyaa kasu kidaikum
Quote
 
 
+2 #18 so.ra.ilaiyavan 2011-07-01 02:12
vanakkam sir.. Most corrupted Vice chancelar at Trichy Bharathidasan University but all press (including nakkeeran)jaalt ra to she....that lady meena.. kalviyai seeralikkum peedai meenavai ampalappaduthun gal.... I am ready to give evidence and source,,,,
Quote
 
 
+5 #17 Dhanasekaran. 2011-06-30 17:35
நக்கீரன் பத்திரிக்கை தான் மஞ்சள் பத்திரிக்கை ஆகி நீண்ட வருடம் ஆகி விட்டது.
மேலும் ...............மேலும் ..........குருமராஜ், கோபால் ..இவர்களை பற்றி சவுக்கு சொல்லி அவர்களுக்கு பெயர்
தான் ஏறிக்கொண்டே போகிறது. இனிமேல் இந்த துஷ்டர்களை பற்றி செய்தி வெளியிட வேண்டாம்.
Quote
 
 
+7 #16 Vikram 2011-06-30 14:25
[ஃஉஒடெ நமெ="கேரிகுட்டி"]அம்மா கவர்மென்டுல நடக்குற விசயம் பத்தி நிறைய சொல்லலானமே...[/ஃஉஒடெ]

அம்மா என்ன ஐயா மாதிரியா! சவுக்குக்கு சுளுக்கு எடுத்துடுவாங்க!
Quote
 
 
+9 #15 Vijay123 2011-06-30 14:04
//ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள ் அயோக்கியர்களே…. !//
வைகோ கூட பிரபாகரன் இறக்கவில்லை என்று தானே கூறிக்கொன்டிருந ்தார்?
Quote
 
 
+10 #14 jagan t 2011-06-30 12:49
தமிழக மக்களால் திமுக ஒதுக்கப்பட்டது போல், அதன் காலை 'நக்கி' பிழைத்த நக்கீ - யும் ஒதுக்கியாச்சு. விட்டுத்தள்ளுங் க - இந்த நேரத்துல வேற நல்ல காரியத்தை செய்யலாம்.
Quote
 
 
+3 #13 ss 2011-06-30 11:10
Quoting Kamaraj pachilai:
The news published about ADMK collection in this week NAKEERAN issue is wrong. I posted this comment by pressure. Sorry savukku.


காமராஜ்,, நீஙக என்ன சொல்ல வர்ரிஙக , எனக்கு எதும் புரியல.. நான் நக்கிரன் படிகரது இல்ல...
Quote
 
 
+3 #12 ss 2011-06-30 11:08
Quoting Kamaraj pachilai:
The news published about ADMK collection in this week NAKEERAN issue is wrong. I posted this comment by pressure. Sorry savukku.




காமராஜ்,, நீஙக என்ன சொல்ல வர்ரிஙக , எனக்கு எதும் புரியல
Quote
 
 
+2 #11 jp 2011-06-30 10:20
குருமராஜ் செல் நம்பர் தரவும். வாவனை திட்ட வென்டும் .
Quote
 
 
+8 #10 keerikutti 2011-06-30 10:19
அம்மா கவர்மென்டுல நடக்குற விசயம் பத்தி நிறைய சொல்லலானமே...
Quote
 
 
+9 #9 mughil 2011-06-30 10:15
(அகிலன்)இந்த நாய்கலை என்ன செல்றதுனே தெரியல தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்றூ வாய்கூசாமல் செல்கிரான் ஆனால் நான் செல்கிரேன் ஏதோ உணர்ச்சி வசப்படடு செல்லவில்லை உண்மையாக தான் செல்கிறேன் எங்கள் தலைவர் சாகவில்லை வருவார்............
Quote
 
 
+8 #8 Anonymous 2011-06-30 08:20
Savukku, Why are you not publishing the June 26th Marina Candle light photos ?
Quote
 
 
+5 #7 anony 2011-06-30 08:05
எது நக்கீரன் சர்குலேஷனை 40000ல் இருந்து 40ஆ மாத்துறவரைக்கும ் சவுக்கு விடாது போல இருக்கே? அம்மாவை பத்தி எதிர்மறையா செய்தி சேகரிக்க ஒரு டீம் களம் இறங்கினதா சொன்னீங்க... ஆனா நடக்குறத பாத்தா அப்படி தெரியலியே? இது சவுக்கோட போங்கு ஆட்டம்.
Quote
 
 
0 #6 thaakkali 2011-06-30 07:45
8) :-* :oops: :eek: :P :sigh: :roll:
Quote
 
 
+13 #5 Kamaraj pachilai 2011-06-29 17:33
The news published about ADMK collection in this week NAKEERAN issue is wrong. I posted this comment by pressure. Sorry savukku.
Quote
 
 
+9 #4 paandiyan 2011-06-29 17:26
One info is missing here. Karunanithi accept for CBI enquiry beucase already agreement made it form central government ie. CBI officer should be a Karunanidhi Choice. thats they way this case was handled. Savukku should expose that part as well..
Quote
 
 
+23 #3 jaya 2011-06-29 17:20
பொன்னான நேரத்தை இந்த பச்சிலை புடுங்கி பற்றி எழுதுவதில் வீண் அடிக்காதீர்கள். இவன் யார் என்று எல்லோருக்கும் தெரியும்...அதனால் உங்கள் நேரத்தை இன்னும் முக்கிய விஷயங்கள் பற்றி எழுத எடுத்துக்கொள்ளு ங்கள்.
Quote
 
 
+5 #2 கண்ணன்,சென்னை 2011-06-29 17:11
சூப்பர்
Quote
 
 
+32 #1 Suresh Raja 2011-06-29 16:51
ஏற்கனவே குருமாவுக்கு சட்டை கிழிஞ்சு போய் கெடக்கு..... இப்போ சவுக்கு பேண்டையும் கிழிச்சிருச்சு... நான் ஜட்டியையும் கிழிச்சா ரொம்ப அசிங்கமா போயிடும்.... இந்த காவளி பய இந்த பொழப்புக்கு, தெரு தெருவா பிச்சை எடுக்கலாம். ஸ்பெக்ட்ரம் வழக்குல சிபிஐ கைது, திகார் கழி,அப்புறம் ரிலீஸ் ஆகி அத தான் பண்ணனும் (பிச்சை). ஆனா எங்கிட்ட வந்து காசு கேட்டா காரித் துப்புவேன். :-* :-* :-* :-*
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12313
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week56313
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month278573
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13194940