முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சூது கவ்வும் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 38
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 23 மே 2013 11:14

29529_132364633445226_2686355_n

மகாலட்சுமி. இவர் ஒரு முக்கிய பிரமுகர்.  மிகவும் முக்கிய பிரமுகர்.  இப்படி இவர் தன்னைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்.  இவரை வெறும் மகாலட்சுமி என்று அழைத்தால் இவருக்குக் கோபம் வந்து விடும்.  ‘சன் டிவி மகாலட்சுமி’ என்று அழைத்தால் இவர் முகத்தில் வரும் பாருங்கள் பூரிப்பு… அப்படி ஒரு பூரிப்பு.    சன்டிவியின் முதலாளி கலாநிதி மாறன் கூட தன்னை அப்படி அழைத்துக் கொள்வதில்லை.  ஆனால் மகாலட்சுமி, தன்னை சன்டிவி மகாலட்சுமி என்று விருப்பத்தோடு அழைக்கச் சொல்லுவார்.

இந்த மகாலட்சுமி பிகாம் படித்த பட்டதாரி.   பி.காம் படித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது, திருமணம் செய்யலாமே என்று தோன்றுகிறது. திருமணம் செய்வதற்கென்று யாராவது வெட்டத் தயாராக ஆடு கிடைக்கிறதா என்று தேடுகையில் ஒரு ஆடு சிக்குகிறது.  அவர் ஒரு மென்பொறியாளராக பணியாற்றுகிறார். அவர் குடும்பம் பாரம்பரியம் மிக்க செழிப்பான குடும்பம்.  அவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். 1997ல் மகாலட்சுமி திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் செய்து கொண்ட பிறகு, கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.  திருமணமான பிறகு, மகாலட்சுமி, எம்.காம், மற்றும் சட்டம் படிக்கிறார்.  எம்.காம் படிக்கத் தொடங்கியபோதே, மகாலட்சுமிக்கு, அவர் தோற்றத்தின் காரணமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வேலை தொலைக்காட்சிகளில் கிடைக்கிறது.  இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அவர் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வேலைகளைச் செய்து வருகையில், நிலா டிவி என்று ஒரு புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது.  தற்போது ஜெயா டிவியின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ரபி பெர்நார்ட் தொடங்கிய டிவி அது.  அந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளாராக வாய்ப்பு கிடைக்கிறது.  ஆனால் அந்தத் தொலைக்காட்சி தொடக்கத்திலேயே மூடப்படுகிறது.

இதையடுத்து மகாலட்சுமி ஜெயா டிவிக்கு இடம் பெயர்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவர் பிரபலமடைந்து இவரை வெளியில் பார்ப்பவர்கள் அடையாளம் கண்டு “மேடம்… நீங்க டிவியில வருவீங்கதானே… ?” என்று கேட்கவும், இவருக்கு பிரபலங்களுக்கே உரிய அகந்தை வருகிறது.  நாளடைவில் இந்த போதைக்கு அடிமையாகி, அதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.  வீட்டிலேயே பெரும்பாலான நேரம் இல்லாமல், பிறந்த குழந்தையைக் கூட சரிவர கவனிக்காமல், எப்போது பார்த்தாலும் ஷுட்டிங், ஷுட்டிங் என்று கிளம்பிச் செல்கிறார். கூட்டுக்குடும்பத்தில், மகாலட்சுமியின் இந்த போக்குகள் பிரச்சினையை கிளப்புகின்றன.  ஒரு கட்டத்தில் மகாலட்சுமியின் மாமியார் மகாலட்சுமியை கண்டிக்க, மகாலட்சுமி தூக்கு மாட்டிக் கொள்ள, மகாலட்சுமி காப்பாற்றப்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பஞ்சாயத்து, மகாலட்சுமியின் அம்மா ஜான்சி ராணியிடம் செல்கிறது. ஜான்சி ராணியோ, என் மகள் பிரபலமாவதைப் பொறுக்காமல் இப்படி அநியாயமாக கொடுமை செய்கிறார்கள் என்று புலம்புகிறார்.   மகாலட்சுமியின் கணவரோ, மனைவியையும் கண்டிக்க முடியாமல், பெற்றோரையும் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.  இறுதியாக வேறு வழியே இல்லாமல், தனிக்குடித்தனம் செல்கிறார்கள். தனிக்குடித்தனம், மகாலட்சுமியின் தாய் ஜான்சி ராணி வீட்டின் அருகிலேயே அமைகிறது.  குழந்தையை தாய் பார்த்துக் கொள்ள, மீண்டும் மகாலட்சுமி ஷுட்டிங்கில் கவனம் செலுத்துகிறார்.

இதற்கிடையே மகாலட்சுமி சட்டம் படித்து முடிக்கவும், வழக்கறிஞராகவும் தன் பணியைத் தொடங்குகிறார்.  வி.பி.ராஜு என்ற வழக்கறிஞரிடம் ஜுனியராக சேர்ந்து பணியாற்றுகிறார். நீதிமன்றம் சென்று வழக்கறிஞராக தொழில் செய்யத் தொடங்கியதும் மகாலட்சுமியின் அகந்தை மேலும் அதிகமாகிறது.  தன்னை ஒரு மிகப் பெரிய மூத்த வழக்கறிஞராகக் கருதிக் கொண்டதோடு ஒரு சிறந்த சட்ட நிபுணராகவும் நினைத்துக் கொள்கிறார்.  மீடியாவில் பணியாற்றுபவர்கள், சில சட்டச் சிக்கல்களுக்கு மகாலட்சுமியிடம் சந்தேகம் கேட்டதும், நமக்குத் தெரியாத சட்டம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். தனது வழக்கறிஞர் தொழில் பற்றி எப்படிப்பட்ட பில்டப் செய்வார் மகாலட்சுமி என்றால், வீட்டுக்கு வந்ததும், வீட்டில் உள்ளவர்களிடம், “இன்னைக்கு நான் வாதாடுனதப் பாத்து, ஜட்ஜ் உடனே கைத்தட்டிட்டார்….. எல்லாரும் என்னைப் பாராட்டுனாங்க“ என்று கூசாமல் புளுகுவார்.  வீட்டில் உள்ளவர்களுக்கு, நீதிமன்றத்தில் மகாலட்சுமி கழுவி ஊற்றப்பட்டது எப்படித் தெரியப்போகிறது ? கேஸ் கட்டை எடுத்து மகாலட்சுமி முகத்தில் வேண்டுமானால் தட்டியிருப்பார்.  இந்த விபரம் மகாலட்சுமியை சுற்றி இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும் ? அவர்களும் வாயைப் பிளந்து கொண்டு ஆ வெனக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் மகாலட்சுமி வழக்கறிஞராக செய்ததெல்லாம் திருட்டுத்தனம்.  விவாகரத்து வழக்குகளில் மகாலட்சுமி பெண்ணுக்கு வழக்கறிஞர் என்றால் மற்றொரு வழக்கறிஞர் கணவருக்கு வழக்கறிஞர்.  மகாலட்சுமியும், கணவரது வழக்கறிஞரும் பேசி வைத்துக் கொண்டு கூட்டணி அமைத்து, கணவர் மற்றும் மனைவியின் பிரச்சினைகள் தீராத வகையில் சிக்கல் செய்தபடி, எவ்வளவு பணம் கறக்க முடியுமோ, அவ்வளவு பணம் கறப்பார்கள். இதுதான் மகாலட்சுமி நீதிமன்றத்தில் வாதாடும் லட்சணம்.  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், குடும்ப நீதிமன்றத்துக்கு வரும் கணவன் மனைவிகளை அலைக்கழித்து, பணம் பறிக்கும் எந்த வழக்கறிஞருக்கும் மகாலட்சுமி கொஞ்சமும் சளைத்தவர் அல்ல.

மகாலட்சுமியின் கணவருக்கு துபாயில் வேலை கிடைக்கிறது.  துபாய்க்குச் செல்லும் முன், ஒரு வீட்டை வாங்குகிறார்.  வீட்டுக் கடன் வாங்குவதில் கையெழுத்து போடுவது உள்ளிட்டவற்றில் சிக்கல் வந்தால் என்ன செய்வது என்று, மகாலட்சுமியின் தாய், ஜான்சி ராணி பெயரில் அந்த வீட்டை வாங்கிவிட்டு, துபாய் குறுக்குச் சந்துக்கு சென்று விடுகிறார்.  இதனிடையே, நீதிமன்றத்தில், மகாலட்சுமிக்கு ஒரு ஆண் வழக்கறிஞரோடு ‘நெருக்கமான’ நட்பு ஏற்படுகிறது.  அந்த ஆண் வழக்கறிஞரும் ஏற்கனவே திருமணமானவர்.  எப்போதாவது ஊருக்குத் திரும்ப வரும் மகாலட்சுமியின் கணவருக்கு அரசல் புரசலாக இந்த விபரம் தெரிய வருகிறது.  ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவே மகாலட்சுமி “ஆமாம் நான் அவரை வச்சுருக்கேன்” என்ற ரேஞ்சில் பேச ஆரம்பித்து விடுகிறார்.  மனம் வெறுத்த மகாலட்சுமியின் கணவர், உன் சங்காத்தமே வேண்டாம் என்று பரஸ்பர விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டு, மீண்டும் துபாய் குறுக்குச் சந்துக்கே சென்று விடுகிறார்.  விடுதலை கிடைத்து விட்ட மட்டற்ற மகிழ்ச்சியில் தனக்கு நெருக்கமான அந்த வழக்கறிஞரையும் விவாகரத்து வாங்கச் சொல்கிறார். தன் குடும்பம் மட்டும் கெட்டுப்போவதோடு விடுவது முறையான செயலா என்ன ?  மகாலட்சுமியின் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக அந்த வழக்கறிஞரும் விவாகரத்து செய்கிறார்.

இதற்குப் பிறகு என்ன… மகிழ்ச்சியான மகாலட்சுமியும் அவர் தாயாரும், அவர் கணவர் வாங்கிக் கொடுத்த வீட்டை விற்கிறார்கள்.  விற்று விட்டு புது வீடு வாங்குகிறார்கள். அதற்குப் பிறகு மகாலட்சுமியை யார் கேட்பது… ?  இஷ்டத்துக்கு மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.  இப்படியே இருந்து விட்டால் போதுமா ?  மகாலட்சுமிக்கு சதீஷ் என்று ஒரு தம்பி இருக்கிறாரே… அவருக்கு திருமணம் செய்ய வேண்டுமல்லவா ?  திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்திலிருந்து சதீஷுக்கு பெண் எடுக்கிறார்கள்.  என்ன நடந்ததோ தெரியவல்லை… திருமணமான ஒரே வாரத்தில் சதீஷ் திருமணம் முறிகிறது.

PICT0086_1

சூது குடும்பம்

இதனிடையே மகாலட்சுமி சன் டிவியில் சேர்ந்து விடுகிறார். ஒரு புறம் வழக்கறிஞர் தொழில். மறுபுறம், சன் டிவியில் ஆலோசனை நேரம் மற்றும் செய்தி வாசிப்பாளர் பணி.  மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது மகாலட்சுமியின் வாழ்க்கை.  சன் டிவியில் மகாலட்சுமிக்கு காட்ஃபாதராக உருவாகிறார் சன் டிவி ராஜா.

மகனும் வளர்ந்து பெரியவனாகிக் கொண்டிருக்கிறான்.  ஒரு சனிக்கிழமை தவறாமல் மல்ட்டிப்ளெக்ஸ்களில் சினிமா. வீட்டில் அம்மா, தம்பி மற்றும் நண்பர்களோடு சீட்டாட்டம்.  பகலில் இளித்த வாய் க்ளையன்டுகளை மொட்டையடிப்பது.

இப்படிச் சீராக போய்க்கொண்டிருந்த சன்டிவி மகாலட்சுமி வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் சன் டிவி ராஜாவின் கைது.  அகிலா என்ற பெண் அளித்த பாலியல் புகாரில் சன் டிவி ராஜா கைது செய்யப்படுகிறார்.  மகாலட்சுமிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி…. சன் டிவி போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் எடிட்டராக உள்ளவரையே கைது செய்வதென்றால் என்ன அநியாயம் ?  அதுவும் விவாகரத்து வழக்கில் தன்னுடைய க்ளையன்டாக இருக்கும் ஒரு நபர் அளித்த புகாரில் ராஜா கைது செய்யப்படுவதென்றால் மகாலட்சுமிக்கு அதை விட ஒரு அவமானம் எப்படி இருக்க முடியும் ?

உடனடியாக களத்தில் இறங்குகிறார் மகாலட்சுமி.  ராஜா மீது புகார் கொடுத்த அகிலாவை அழைக்கிறார்.  ”இங்கப் பாரும்மா.. ராஜா சார் மேல குடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கோ… உனக்கு டைவேர்ஸ் வாங்கித் தந்துட்றேன்.  வாங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா நிலைமை விபரீதமா போயிடும். அப்புறம் நீதான் கஷ்டப்படணும்” என்று கூறுகிறார்.  மகாலட்சுமியின் சூழ்சசி அறியாத அகிலா, அதெல்லாம் முடியாது மேடம்.  இதுவும், அதுவும் வேற வேற.  ரெண்டையும் கன்ப்யூஸ் பண்ணாதீங்க என்று தெளிவாகக் கூறி விடுகிறார்.

19 மார்ச் அன்று ராஜா கைது செய்யப்படுகிறார். 22 மார்ச் அன்று அகிலாவின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட உள்ளது.  அகிலாவின் கணவர், விவாகரத்து வழக்கில் ஆஜராகமலேயே இருந்ததால், அகிலாவுக்கு விவாரத்து வழங்கும் மனநிலையில் இருக்கிறது நீதிமன்றம்.

சன் டிவி ராஜா மீதான புகாரை வாபஸ் அகிலா வாங்க மறுத்ததால், குழந்தைகளை வைத்திருக்கும் அகிலாவின் கணவர் மற்றும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் விவாகரத்து வழக்கில் ஆஜராகத் தவறினால், குழந்தைகள் அகிலா வசம் போய் விடும். நான் அகிலாவின் வழக்கறிஞராக இருப்பதால், அகிலாவின் திட்டங்கள் அனைத்தையும் அறிவேன்.  உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பார்க்கவே முடியாது என்றதும், அலறி அடித்துக் கொண்டு 22 அன்று நீதிமன்றத்துக்கு வருகிறார் அகிலாவின் கணவர்.  22 அன்று காலை மகாலட்சுமி நீதிமன்றத்துக்கு வருவான் என்ற காத்துக் கொண்டிருந்த அகிலாவுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

காலை 9.30 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.  நான் உங்கள் வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.  எனக்கு மீதம் சேர வேண்டிய ஃபீஸ் தொகை 5 ஆயிரத்தை உடனடியாக தந்து விடவும் என்று. அகிலாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.  ஒரு வழக்கறிஞர், தன்னுடைய கட்சிக்காரரின் நலன்களை எல்லா விதத்திலும் பாதுகாக்க வேண்டும். இது வழக்கறிஞர் தொழிலின் அடிப்படை விதி. கட்சிக்காரர் என்பவர், வழக்கறிஞர்களுக்கு கடவுள் போல.  ஆனால் நீதிபதியே எழுந்து நின்று கைதட்டும் அளவுக்கு வாதாடும் மகாலட்சுமிக்கு இந்த அடிப்படை கூட தெரியாமல் போய் விட்டது.  ஏற்கனவே, சன் டிவி ராஜா மீது புகார் கொடுத்து விட்டு, பல்வேறு தரப்புகளில் இருந்து வரும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்த அகிலாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இப்படி அகிலாவுக்கு பெரும் துரோகத்தை இழைத்ததோடு மகாலட்சுமி நிற்கவில்லை.  சன் டிவி ராஜாவை காப்பாற்ற என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். ராஜா கைது செய்யப்பட்டு சிறை சென்றதும், சன் டிவி அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களை ராஜா சார்பாக அணி திரட்டினார்.  அகிலா மோசமான நடத்தை உள்ள பெண். ராஜா சார் பத்தரை மாற்றுத் தங்கம்.  அவர் குடும்பத்தில் அவசரமாக பணம் தேவைப்பட்டால் கூட, ராஜா சாரை அழைத்துச் சென்ற முத்தூட் பைனான்சில் உரசி பணம் பெறுவார்கள். அந்த அளவுக்கு சிறந்த மனிதர்.  ராஜா மீது பெண் விவகாரத்தில் குற்றம் சாட்டுவதே தவறு.  ராஜா ஒரு கூவாத சேவல்.  இதற்காக வாலிப வயோதிக அன்பர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே வைத்தியரான சேலம் சிவராஜ் சித்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்…. அவரைப் போய் இப்படி பொய்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது, தெய்வங்களுக்கே அடுக்காது என்று சன்டிவி அலுவலகம் முழுக்க பரப்புரையில் ஈடுபடுகிறார்.  சன்டிவியில் உள்ள மற்ற முட்டாள்கள், “அய்யய்யோ.. அப்போ ராஜா சாரை தப்பாத்தான் கைது பண்ணிட்டாங்களா…“ என்று பதறிப்போய், ராஜா மீது புகார் கொடுத்த அகிலாவின் மீது புகார் எழுதுகிறார்கள்.

அகிலா போன்ற மோசமான நடத்தை உள்ள பெண்ணைப் பார்க்க முடியாது.  அகிலாவுக்கு ஒழுங்காக செய்தி வாசிக்கவே தெரியாது.  அகிலா செய்தி சரியாக வாசிக்காததால், சரியாக உச்சரிக்காததால், சன் செய்திகளைப் பார்த்த பலர் இதய பெலகீனம் அடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தனித்தனியாகவும், கூட்டாகவும், சன் டிவி வைஸ் ப்ரெசிடென்டுக்கு கடிதம் எழுதித் தருகின்றனர்.  இப்படி தனித்தனியாக புகார் அளித்தவர்கள் (1) கிருத்திகா காந்தி (2) எஸ்.அருணா (3) வி.சாய் லட்சுமி (4) ஏஞ்சல் சுகன்யா (5) ஜெ.ரஃபியா பேகம் (6) வி.பசுமதி (7) டி.திவ்யா  கூட்டாக அளித்த புகார்களின் கையெழுத்திட்டவர்கள் (1) ஆர்.மகேஸ்வரி (2) ஏ.மாளவிகா (3) நிர்மலா நாராயணன் (4) ஜி.கிருத்திகா (5) ஏ.பாத்திமா (6) டி.திவ்யா (7) வி.சாய்லட்சுமி (8) வி.பசுமதி (9) கே.ஏஞ்சல் சுகன்யா (10) எஸ்.சுகன்யா (11) ஜி.அர்ச்சனா (12) ஏ.ஆர்.கோகுல லட்சுமி (13) சி.விசித்ரா (14) எஸ்.அருணா (15) ஏ.மேரி ராஜகுமாரி (16) எம்.மாலினி (17) ஜெ.ரஃபியா பேகம் (18) காமாட்சி (19) அர்ச்சனா (20) ஜெ.கல்யாணி.

இப்படிக் கையெழுத்திட்டு கூட்டாக அளித்த புகார் மனுவில் The said Akila was not regular to office and her pronunciation was not good. And we received complaints from public.  Our Chief News Editor Raja is a man with clean habits and we have never been harassed in any way.

அகிலா அலுவலகத்துக்கு ஒழுங்காக வருவதில்லை.  அவர் உச்சரிப்பு சரியில்லை.  இதனால் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றோம்.  தலைமை செய்தி ஆசிரியர் ராஜா நல்ல பழக்கங்கள் உள்ள மனிதர்.  அவர் எங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ததில்லை.

இந்தப் புகார் கொடுக்கப்பட்ட தேதி 25.03.2013.  அகிலா புகாரில் ராஜா கைது செய்யப்பட்டது 19.03.2013.  இந்தப் புகார்களை எழுதிய முட்டாள் பெண்களுக்கு, (இவர்களை குந்தாணிகள் என்றுதான் எழுத வேண்டும். ஆனால் குந்தாணி என்று எழுதினால், பெண்ணியவாதிகள் போன் பண்ணி காது கிழியும் வரை திட்டுகிறார்கள். திட்டினால் கூட பரவாயில்லை, கவிதை பாடுவேன் என்று வேறு பயமுறுத்துகிறார்கள்) அகிலா நடத்தை சரியில்லாதவர், சரியாக தமிழ் உச்சரிக்கத் தெரியாதவர் என்ற விபரங்கள் எல்லாம் ராஜா கைது செய்யப்படுவது வரை தெரியவில்லை. யாராவது ஒரு ஆண் தவறாகப் பேசி விட்டால் நீட்டி முழக்கி ஊர் நியாயம் பேசும் பெண்கள், ஒரு பெண்ணின் நடத்தை குறித்து தவறாகப் பேசி, அவள் ஆளுமையை அழிப்பதில் ஒரு வினாடி கூட தயங்க வில்லை பாருங்கள்.  தங்கள் சுயநலனுக்காக எப்படிப்பட்ட பிழைப்புவாதிகளாக மாறிப்போய் விடுகிறார்கள் பாருங்கள்.  இதில் வேதனை என்னவென்றால், ஏஞ்சல் சுகன்யா என்ற பெண், சன் டிவி அலுவலகத்தில் வெற்றி வேந்தனோடு நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே  வெளியாகியுள்ளது. வேலை பார்க்கும் இடத்தில் வெற்றி வேந்தனோடு நெருக்கமாக ஆபாசமாக இருந்தவர் ஏஞ்சல் சுகன்யாதான்.  அப்படி ஏஞ்சல் சுகன்யா ஆபாசமாக வெற்றிவேந்தனோடு நெருக்கமாக இருந்தது சன் டிவி முதலாளி கலாநிதி மாறனுக்கும் தெரியும்.

IMG-20120928-00297

சன் டிவி மேக்கப் அறையில் எடுத்து, சன் டிவி முழுவதும் பரவிய ஏஞ்சல் சுகன்யாவின் பல புகைப்படங்களில் ஒன்று

ஆனால் இப்படி அலுவலக இடத்தில் ஆபாசமாக இருந்ததற்காக வெற்றி வேந்தன் மீதும், ஏஞ்சல் சுகன்யா மீதும் நடவடிக்கை எடுக்காத கலாநிதிமாறன், ஒரு மூன்றாம் தர பொறுக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்.  அகிலாவின் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பிய உத்தமிகள் கொடுத்த புகாரில் அகிலாவை கைது செய்கிறார்.

கலாநிதி மாறனின் இந்த நடவடிக்கைகள், அவரின் தராதரம் என்ன என்பதை விளக்குகிறது.   கலாநிதி மாறனும் சன் டிவி ராஜாவுக்கு சற்றும் குறையாதவர் என்பதையே நிரூபிக்கிறது.

சரி மெயின் கதைக்கு வருவோம்.  ரம்மி விளையாட்டோடு கும்மியடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி குடும்பத்துக்கு, தம்பி சதீஷ் ஒற்றை ஆளாகச் சுற்றுவது வருத்தத்தை அளிக்கிறது.  சரி தம்பிக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யலாம் என்று தேடத் தொடங்குகிறார்கள்.  மகாலட்சுமிக்கு ஒரு ஆடு சிக்கினால், அவர் தம்பி சதீஷுக்கு ஒரு ஆடு சிக்காமலா போய் விடும்.  மகாலட்சுமியே ஆட்டை தேடுகிறார்.  அப்படித் தேடும்போது அவருக்கும் ஒரு ஆடு சிக்குகிறது.  அந்த ஆட்டை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி மஞ்சள் தண்ணீர் தெளிக்கிறார் மகாலட்சுமி.  அந்த ஆடும் எல்லா ஆடுகளையும் போலவே, வேகமாக தலையாட்டுகிறது.  இத்தனைக்கும் அந்த ஆடு ஒரு முற்போக்கான குடும்பத்திலிருந்து வந்த ஆடு.  பெரியாரிய வழியில் வந்த அந்த ஆடு கசாப்பக் கடைக்காரனிடம் வலியச் சென்று மாட்டுவது போல அந்தப் பெண் மகாலட்சுமியின் தம்பி சதீஷை திருமணம் செய்கிறார்.

IMG_1428

சதீஷ்

சதீஷை திருமணம் செய்த அந்தப் பெண் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.  மிகவும் வற்புறுத்தி அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் மகாலட்சுமி. அந்தப் பெண் திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணிடம், நாங்களும் பகுத்தறிவு வாதிகளே என்று சொல்லுகிறார்கள்.  மகாலட்சுமியின் தாய், “என்னைப் பாருங்கள்… என் கணவர் இறந்து விட்டார். ஆனால் நான் பொட்டு வைக்கிறேன். எவ்வளவு முற்போக்கா இருக்கிறேன் பாருங்கள்” என்று சொல்லுகிறார். இதையெல்லாம் நம்பி அந்தப் பெண் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி மற்றும் அவர் தாயார் ஜான்சி சாணி, மன்னிக்கவும், ஜான்சி ராணியின் சுயரூபம் தெரிய ஆரம்பிக்கிறது.  வழக்கமான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மற்றும் பழைய சினிமாக்களில் வரும் மாமியார் மற்றும் நாத்தனாருக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.  அந்தப் பெண் மூன்று வேளையும் சமைக்க வேண்டும்.  மகாலட்சுமி ஹாலில் அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு, இதை எடுத்து வா, அதை எடுத்து வா என்று தொடர்ந்து உத்தரவு போடுவார்.  இதையெல்லாம் அந்தப் பெண் செய்ய வேண்டும்.  செய்யத் தவறினால், மகாலட்சுமி, உடம்பு கூசும் வகையில் ஆபாசமாக பேசுவார்.

“புருஷன்கிட்ட “அது” மட்டும் வேணும்னு கேக்குற..  வீட்டு வேலை செய்ய மாட்டியா” என்று மகாலட்சுமி கேட்பது, மிக மிக சாதாரணமான ஒரு உரையாடல் என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

சரி புதிதாக வந்த அந்தப் பெண்ணைத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால், மகாலட்சுமியும், அவர் தாயாரும் பேசிக்கொள்வது, அவ்வளவு சிறப்பாக இருக்கும்.  ”உன்னைப் பத்தி தெரியாதா நீயும் அவனும்….” என்று மகாலட்சுமியின் தாயார் பேசுவார்.  பதிலுக்கு மகாலட்சுமி, ”உன்னைப் பத்தித் தெரியாதா… நீ என்னென்ன பண்ண… உனக்கு பணம் எப்படி வந்துச்சுன்னு நான் சொன்னா உன் கதை நாறிப் போயிடும்” இப்படி நாள்தோறும் உரையாடல்கள் நடைபெறும்.  இப்படி எந்த சண்டை நடந்தாலும், தினந்தோறும் இரவு சீட்டாட்டமும், சனிக்கிழமை தோறும் இரவுக் காட்சியும் தவறாது.

இதற்கிடையே வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை வேலைக்குப் போகக் கூடாது என்று தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள். உன்னைப் போய் என் பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டானே… வெறும் கையோடு வந்து விட்டாய்.  போய் உங்க அப்பன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் வாங்கி வா.  நெறய்ய கடன் இருக்கு என்று தொல்லை கொடுக்கிறார்கள். மூன்று வேளையும் சமைத்துப் போட வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கொடுமையும் நடக்கிறது.  நல்ல வேலையும் சம்பளமும் இருந்தும்,  அந்தப் பெண் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாது வேலையை விடுகிறார்.   இப்படியே ஆறு மாதங்கள் கடக்கின்றன. அந்தப் பெண்ணின் கணவர் சதீஷோ, தன் மனைவிக்கு எவ்வித ஆதரவும் தராமல், தன் தாய்க்கும், அக்காவுக்கும் ஆதரவாக இருக்கிறார்.  ஒரு கட்டத்தில் இனி வாழ முடியாது என்று முடிவெடுத்த அந்தப் பெண், தன் பெற்றோர் வீட்டுக்கு செல்கிறார்.

இதையடுத்து, முக்கிய பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை மீண்டும் வாழ அழைத்து வருகின்றனர்.  அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் மாதம் 50 ஆயிரம் ஊதியத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைக்கிறது. எவ்வளவு பக்கம் என்றால், நடந்து அலுவலகம் செல்லும் அளவுக்கு பக்கம்.

இந்த வேலைக்கு நான் போகிறேன், வீட்டு வேலைகளையும் செய்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதையும், ஜான்சி ராணியும், மகாலட்சுமியும் ஏற்காமல் தடுக்கிறார்கள். அந்தப் பெண்ணின் கணவர் சதீஷும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.  இனியும் இந்த வீட்டில் இருந்தால் நாம் எம் எதிர்காலமே அழிக்கப்படும் என்பதை உணர்ந்த அந்தப் பெண், வீட்டை விட்டு வெளியேறுகிறார். சென்னையிலேயே ஒரு மகளிர் விடுதியில் தங்கி தன் வேலையைத் தொடரலாம் என்று முடிவெடுத்து, பெட்டி படுக்கைகளோடு வெளியேறுகிறார்.

வெளியேறி ஒரு மகளிர் விடுதியில் தங்குகிறார்.  அவர் திறமைக்கு சிறப்பான வேலை கிடைக்கிறது.  நமக்கு வாய்த்த திறமையான அடிமை நம்மை விட்டு எங்கேயும் போகாது என்று நம்பிக் கொண்டிருந்த சதீஷுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.  அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல… உனை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல… என்று பாடியதும், அந்தப் பெண்ணும் மனமிறங்கி சரி வந்து பார்த்துத் தொலை என்று அனுமதி அளிக்கிறார்.

வீட்டை விட்டு பிரிந்து வந்தாலும், அந்தப் பெண்ணை சதீஷ் வாரந்தோறும் சந்திக்கிறார். இருவரும் பேசுகிறார்கள். அந்தப் பெண், தனிக்குடித்தனம் செல்வதாக இருந்தால், நான் இப்போதே கட்டிய புடவை அல்லது லெக்கிங்ஸோடும், டீ ஷர்டோடும் வருகிறேன் என்று கூறுகிறார். இந்த அடிமை இன்னும் நம்மிடம் விசுவாசமாக இருக்கிறது என்பதைக் கூட புரிந்து கொள்ளாத அந்த பேரிக்காய் தலையன், தனி வீடு பார்க்காமல் நாள் கடத்துகிறான்.  இத்தனைக்கும் பொருளாதார நெருக்கடி கூட இல்லை.  பேரிக்காய் தலையன் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறான், அந்தப் பெண் மாதம் 40 ஆயிரம் சம்பாதிக்கிறாள்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்தப் பெண்ணும், அவள் ஹாஸ்டல் தோழிகளும், ஸ்கை வாக்குக்கு இரவு உணவு உண்பதற்காக செல்கிறார்கள். உணவருந்தி விட்டு, கை கழுவ சென்ற இடத்தில், மகாலட்சுமி அந்தப் பெண்ணைப் பார்க்கிறாள். அந்தப் பெண் மகாலட்சுமியிடம் எதுவும் பேசவில்லை.  அவர் தன் தோழிகளோடு சென்று விடுகிறார். இதற்குள், மகாலட்சுமி அவர் தாயாரையும், சதீஷையும் அழைத்து வந்து அந்தப் பெண் வேறு யாரோ ஒரு ஆணோடு ஊர் சுற்ற வந்திருக்கிறார் என்று கத்துகிறார்.  அந்தப் பெண்ணோடு அவள் ஹாஸ்டல் மேட்கள் இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யாரும் காதில் வாங்கத் தயாராக இல்லை. மகாலட்சுமியின் தாயார் ஜான்சி ராணி, அருகில் வந்து அந்தப் பெண்ணை ஓங்கி ஒரு அறை விடுகிறார். பொறி கலங்கிப் போன அந்தப் பெண் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், யார் கூடடி ஊர் சுத்த வந்த …………. …………….. என்று உரத்த குரலில் கத்துகிறார்.  பிவிஆர் தியேட்டரில் இரவுக் காட்சிக்கு வந்த அத்தனை எருமை மாடுகளும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

அறை வாங்கி அந்தப் பெண்ணும் திருப்பிப் பேசுகிறார்.  யாருடி …….. ………  உன் பொண்ணே உன்னைப் பத்தி என்ன பேசியிருக்கான்னு தெரியுமா ?  உனக்கு என்னை …………………… என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது என்று பதிலுக்கு திருப்பிப் பேசுகிறார். அங்கிருந்து ஓடி வந்த சதீஷ் அந்தப் பெண்ணை ஓங்கி ஒரு அறை விடுகிறார். நிலைகுலைந்து கீழே விழுந்த அந்தப் பெண்ணை அப்போதும் தூக்கி விட வேண்டும், தடுக்க வேண்டும் என்று பிவிஆரில் இரவுக் காட்சி பார்க்க வந்த எந்த எருமை மாட்டுக்கும் தோன்றவில்லை.  கீழே விழுந்த அந்தப் பெண்ணை மகாலட்சுமி கழுத்தில் காலை வைத்து மிதிக்கிறார்.  ஜான்சி ராணியும் தோளில் மிதிக்கிறார். அந்ப் பெண் தடுமாறி எழுந்ததும், லிப்ட் அருகே வைத்து கழுத்தை நெறிக்கிறார் சதீஷ். இப்போதும் திரைப்படம் பார்க்க வந்த எருமை மாடுகள் எதுவும் தலையிடவில்லை.

ஒரு வழியாக செக்யூரிட்டிகள் தலையிட்டு, விலக்கி விடுகிறார்கள். இதெல்லாம் இரவு 10 மணிக்கு நடக்கிறது. அந்தப் பெண் அவள் தோழிகளோடு அழுதபடி தன் அண்ணனுக்கு போன் செய்கிறார்.  இவ்வளவு அமர்க்களமும் நடந்த பிறகு, மகாலட்சுமியும் அவர் குடும்பத்தினரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா ?  நிம்மதியாக இரவுக்காட்சிக்கு சென்று விடுகிறார்கள்.

IMG_1459

வில்லி ஜான்சி ராணி

அந்தப் பெண் அழுதபடி, தன் அண்ணனோடு அமைந்தகரை காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்கிறார். இது இரவு நேரம், வீட்டுக்குச் செல்லுங்கள், நாளைக் காலை வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள்.

மறுநாள் காலை காவல்நிலையம் சென்ற அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  காவல் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களோடு மகாலட்சுமியும் அவர் தம்பி சதீஷும் இருக்கிறார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ் அந்த 20 வழக்கறிஞர்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணையும், சதீஷையும் ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் விசாரிக்கிறார்.  இதற்குள், பால் கனகராஜின் தொண்டர் அடிப்பொடிகள், சார் வெயிட் பண்றார், என்று ஆய்வாளரிடம் சொல்கிறார்கள். ஆய்வாளர் பொறுமையாக, சாரை வெயிட் பண்ணச் சொல்லுங்கள். நான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார்.  10 நிமிடம் கழித்து மீண்டும் பால் கனகராஜ் ஜுனியர்கள் சீனியர் வெயிட் பண்ணுகிறார்  என்றதும், சரி வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் ஆய்வாளர்.  பால்கனகராஜ், இது ஒரு குடும்பத் தகராறு.  இதை பெரிது படுத்தாமல் விட முடியுமா என்று கேட்கிறார்.  ஆய்வாளர், என்னால் அப்படிச் செய்ய இயலாது. இந்தப் பெண் தாக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு நான் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

IMG_9083

வழக்கறிஞர் பால் கனகராஜ்

பால் கனகராஜும் சென்று விடுகிறார்.  மறுநாள் திங்கட்கிழமை, ஸ்கைவாக்கில் உள்ள சிசிடிவி பதிவுகள் காவல்துறை கைக்கு வருகிறது.  உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்கிறார் ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன்.  அன்று அவர் துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் அன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை செய்தி வாசித்துக் கொண்டிருந்த மகாலட்சுமியை கைது செய்திருக்கலாம்.  ஆனால் உயர் அதிகாரிகள் அழுத்தத்தின் காரணமாகவோ, என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை, அவர் துரிதமாக நடவடிக்கை எடுக்கத் தவறினார்.

இதன் நடுவே, மகாலட்சுமி சார்பாக, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கடுமையான அழுத்தங்கள் வருகின்றன. மகாலட்சுமியும், அவர் தாயார் மற்றும் தம்பி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார்கள். அந்த மனு புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த புதன் கிழமை அன்று காலையே, ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் அனுப்பிய சிறப்புப் படை, நாகூரில் வைத்து, ஜான்சி ராணியையும், சதீஷையும் கைது செய்கிறார்கள்.

முன்ஜாமீன் மனு நீதிபதி வாசுகி முன்பு விசாரணைக்கு வருகிறது.  நீதிபதி வாசுகி பற்றிய விபரங்களை சவுக்கில் வந்த மக்கள் விரோத நீதிமன்றங்கள் என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். மூன்றாவது நபர், வழக்கறிஞர் என்றதும், மூன்றாவது நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறார் நீதிபதி. வழக்கறிஞர் அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குங்கள் என்று வாதிடுவதே தவறு.  வழக்கறிஞர்கள் என்றால் என்ன தவறு வேண்டுமானாலும் செய்து விட்டு தப்பித்து விடலாமா என்ன ?  ஆனால் துரதிருஷ்ட வசமாக, நீதிமன்றங்களில் இந்த நிலைதான் நிலவுகிறது.

உத்தனையோ அழுத்தங்களையும் மீறி, மகாலட்சுமியின் தாயார் மற்றும் தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுத்த ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

மகாலட்சுமி அவர்களுக்கு…. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்பது நீங்கள் அறியாததல்ல.  நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்த சூதுதான் உங்களை இப்போது கவ்வியிருக்கிறது.

இந்த சூது இத்தோடு உங்களை விடப்போவதில்லை.   உங்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சிலில் விசாரணை நடைபெற உள்ளது.  உங்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.  அந்த விசாரணை தொய்வில்லாமல் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

page_1

page_2

page_3

Soodhu_Kavvumbig 

 

 
டாஸ்மாக் தமிழ் 4 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 28
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013 13:28

tas_boy_1

 

“மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே…..“ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.

“வாய்யா வா….  என்ன லவ் மூட்ல இருக்கற போலருக்கு ? “

“எனக்கு ஏது லவ்வு ஜவ்வெல்லாம்…. ? நைட் 11 மணி வரைக்கும் பார்ல மல்லுக்கட்டிட்டு வெளியில வரும்போது எந்த ஃபிகர் எனக்காக உக்காந்திருப்பா…. ?  வாரத்துல ஏழு நாளும் வேலை. நானா பாத்து லீவ் எடுத்தாத்தான் உண்டு. வயித்தெரிச்சலை கௌப்பாதீங்கப்பா…. நான் என்ன உங்களை மாதிரி பத்திரிக்கை ஆபீஸ்லயா வேலை பாக்கறேன்.. பொண்ணுங்களை துரத்தி துரத்தி தொல்லை பண்ணி, செருப்பால அடிக்கற வரை தொந்தரவு பண்ணி, கம்ப்ளெயின்ட் குடுத்து, அரெஸ்ட் ஆயி அப்புறமும் வேலை பாக்கறதுக்கு ? “

“என்னய்யா வந்ததும் வராததுமா டென்ஷன் ஆகற… சன்டிவி ராஜாவத்தான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களே… இன்னும் வேலைபாக்கறான்னு சொல்ற ?“ என்றார் கணேசன்.

“சஸ்பென்ட் செஞ்சா என்ன ?  வீட்ல உக்காந்துக்கிட்டே வேலை பாக்கறான்.  எல்லாம் போன்ல நடக்குதுன்ணே…“

Karunanidhi

“ஏம்ப்பா கேடி ப்ரதர்ஸ் பத்தி உனக்குத் தெரியாதா… அவனுங்களுக்கு ஏதுப்பா சூடு சொரணையெல்லாம்.  உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுனவனுங்கதானே…  திமுக காசுல சன் டிவி ஆரம்பிச்சுட்டு, அந்த திமுகவுக்கு எதிராவே வேலை பாத்ததில்லையா இவனுங்க ? அழகிரியை ரவுடின்னு நியூஸ் போட்டுட்டு, அந்த அழகிரி கூட பல்லை இளிச்சுக்கிட்டு நிக்கலையா இவனுங்க ? இவனுங்களைப் பத்தி ஏம்பா பேசி டைம் வேஸ்ட் பண்ற ? “

“இல்லன்ணே…  கேப்டன் டிவியிலயும் இதே மாதிரி ஒரு பஞ்சாயத்து.  அங்க வேலை பாக்கற பொண்ணுக்கிட்ட அரவிந்த்னு ஒரு எடிட்டர் ராஜா மாதிரியே எஸ்எம்எஸ் அனுப்பறது, லவ் பண்றேன்னு சொல்றதுன்னு திரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கார்.  அந்தப் பொண்ணு இந்த வேலை என்கிட்ட வச்சுக்கிட்டன்னா செருப்பு பிஞ்சுடும்னு சொல்லிடுச்சு.

ஆனாலும் நம்ப அரவிந்த் விடல.  தொடர்ந்து அந்தப் பொண்ணுக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்துருக்கார். ஒரு கட்டத்துல அந்தப் பொண்ணு தன் வழிக்கு வரலன்னதும், அந்தப் பொண்ணை எப்போப்பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கறது.  ஒழுங்கா வேலை செய்யலன்னு சொல்றது.  கம்ப்யூட்டர் முன்னாடி அந்தப் பொண்ணு உக்காந்துருந்தா, ஆபீஸ் செலவுல பேஸ்புக் பாக்கறியான்னு திட்றதுன்னு தொடர்ந்து தொந்தரவு பண்ணியிருக்கார். ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம அந்தப் பொண்ணு, நேரா சுதீஷ்கிட்டயே விஷயத்தை கொண்டு போயிடுச்சு.  விசாரணை நடத்தி உண்மை என்னன்னு கண்டு பிடிச்சதும், உடனே அந்த ஆளை வேலையை விட்டு தூக்கிட்டாங்க.  அவன் மனுஷன்.

ஆனா, பெரிய கேடி கலாநிதி, சன் டிவி ராஜா விஷயத்துல இன்னும் விசாரணைன்னு மாவாட்டிக்கிட்டு இருக்கார். இது வரைக்கும் உருப்படியா ஒரு நடவடிக்கை எடுக்கல. அதான் கோபம்.“ என்று சொல்லி விட்டு டாஸ்மாக் தமிழ் அவனே வோட்கா பாட்டிலை திறந்து கணேசனிடம் கொடுத்தான்.

“மச்சான் அண்ணனுக்கு வாங்கிட்டு வந்துட்ட… எங்களுக்கு பீர்    எங்க ?“ என்றான் பீமராஜன்.

“கீழ ஃப்ரீஸர்ல வச்சுருக்கேன் மச்சான்.  இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு வா “ என்று காலை நீட்டி அமர்ந்தான் தமிழ்.

“சொல்லு மாமா என்னென்ன தகவல் கெடச்சுது ? “ என்று ஆர்வமாகக் கேட்டான் வடிவேலு

“இப்போதைக்கு எப்படியாவது கனிமொழியை எம்.பியாக்கிடனும்ன்றதுல கருணாநிதி குறியா இருக்கறார்.“

DSC_0420

“கனிமொழி கடலூர் இல்ல தூத்துக்குடியில போட்டியிடப்போறாங்கன்னு திமுக வட்டாரத்துல பேச்சு அடிபடுதே“ என்று உள்ளே புகுந்தான் பீமராஜன்.

“தேர்தல் அடுத்த வருஷமா, இந்த வருஷமான்னு தெளிவாத் தெரியலை மச்சான்.  ஆனா, எம்.பின்ற அந்தஸ்து, கனிமொழி 2ஜி வழக்குலேர்ந்து வெளியில வர்றதுக்கும், குடும்பத்துக்குள்ள சண்டையைத் தவிர்க்கறதுக்கும் உதவும்னு நம்பறார் கலைஞர்.  கனிமொழி இப்போ எம்.பியா இருக்கறதால, கட்சியில பதவி வேணும்னு ரொம்ப வலியுறுத்தல.  ஆனா, எம்.பி பதவி போயிடுச்சுன்னா, சிஐடி காலனியில தலைவர் காலே வைக்க முடியாது.  காகிதப்பூ கதாநாயகி கலைஞரை ஒரு வழி பண்ணிடுவார்.  இதையும் மனசுல வச்சு ரொம்ப யோசிக்கிறார். “

“சரி ராஜ்யசபா எம்.பியாக்கறதுக்கு திமுகவுக்கு 34 எம்எல்ஏ வேணுமே.. அது இப்போ இல்லையே… ? “ என்றான் வடிவேலு.

“தம்பி விஜயகாந்தின் கட்சியை ஜெயலலிதா அழிக்கப்பார்க்கிறார்னு கூட்டத்துல பேசுனாரே ஞாபகம் இல்லையா ?  விஜயகாந்த் கட்சி அழியறத, எல்லாரையும் விட அதிகம் விரும்பறவர் கலைஞர்தான். அவர் திடீர்னு கேப்டன் மேல பாசத்தோடு இப்படிப் பேசறது, உள்குத்தோடதான்னு உங்களுக்கு புரியலையா ? “

“சரி… மகள் பாசத்தை விட மச்சான் பாசம் பெரிசில்லையா தமிழ் ?  மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டன் வீட்ல நிம்மதியா சோறு சாப்பிட முடியுமா ? “ என்று தன் பங்குக்கு வரலாற்று சிறப்பு மிக்க சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.

“மகளை எம்.பியாக்கலன்னா கலைஞருக்கு சிஐடி காலனியில சோறு இல்ல.  மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டனுக்கு வீட்ல சோறு இல்ல… என்னதான் பாஸ் பண்றது ? “

“சரி உதயநிதி ஏன் ஹம்மர் காரை திடீர்னு சரண்டர் பண்ணாரு ? “ என்று அவன் சந்தேகத்தை கிளப்பினான் பீமராஜன்.

“சிபிஐ அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு போயி, இந்த காரை கைப்பற்றுனப்போ, தாம் தூம்னு குதிச்சாங்க.  அதுக்குப் பிறகு, தொடர்ந்து உதயநிதியை சிபிஐ விசாரிக்கும்னு தெரிஞ்சு, ஸ்டாலின் ரொம்பவே பயந்து போயிட்டாரு.  தன் மகனுக்கு ஏதாவது ஆயிடாம அவரை காப்பாத்துங்கன்னு, உயர் உயர் அதிகாரி ஜாங்கிட்கிட்ட பேசுனதைப் பத்தி நாம ஏற்கனவே விவாதிச்சிருக்கோம்.  இனிமேலும் இந்தக் கரை வெச்சுருந்தா, சிக்கல்னு முடிவு பண்ணி காரை ஒப்படைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.  கருணாநிதியை விட தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதில் ஸ்டாலின் விஞ்சி நிற்கிறார். “

“சூப்பர் டைட்டில் மாமா…  குடும்பத்தை காப்பாற்றுவதில் விஞ்சி நிற்பது கலைஞரா ஸ்டாலினா ன்ற தலைப்புல பட்டிமன்றம் வச்சா சூப்பரா இருக்கும்“ என்றான்

“ஒரு அணிக்கு தலைவர் சுப.வீரபாண்டியன். மற்றொரு அணிக்கு தலைவர் குஞ்சாமணி“ என்றான் தமிழ்.

“நடுவர் யாரு ? “ என்றார் இரண்டாவது ரவுண்டை முடித்திருந்த கணேசன்.

“நடுவர் வேற யாருன்ணே… திமுக நிலைய வித்வான்  லியோனிதான். “

“சரி.. அதிமுகவுல என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா“ என்றார் கணேசன்.

“மச்சான் அண்ணன் ரெண்டு ரவுண்டு முடிச்சுட்டாரு.. இந்நேரம் பீர் கூலிங் ஆயிருக்கும். கீழ போயி எடுத்துட்டு வா“ என்று பீமராஜனை பார்த்து சொல்லி விட்டு, தொடர்ந்தான் தமிழ்.

“சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சுடுச்சு.  இனி எப்போ வேணாலும் அமைச்சரவை மாற்றம்னு எங்கப் பாத்தாலும் கிலி பிடிச்சு அலையறாங்க. அப்புறம் நாம போனவாட்டி துக்ளக் ரமேஷ்னு ஒரு பத்திரிக்கையாளரைப் பத்தி பேசுனோம் இல்லையா.. இந்தத் தகவல் ஒரு சில அமைச்சர்கள் காதுக்கு போயிருக்கு.  அவங்க அந்த ரமேஷ் பத்தி மேலும் விவாதிச்சுருக்காங்கன்னு அவங்க பி.ஏ சொன்னார்.  அவர் நெறய்ய தகவலை சொல்லுவார்“

“சரி என்ன சொன்னாருன்னு சொல்லுய்யா.. “ என்றார் பொறுமை இழந்த கணேசன்.

“அண்ணே தெனமும், இந்த ரமேஷுக்கு விலை உயர்ந்த ஸ்காட்ச் பாட்டில் ஒன்னு குடுத்துடனுமாம்.  ஸ்காட்ச் வாங்கித் தந்தா நமக்கு வேண்டியதை பெரிய எடத்துல சொல்லுவாருன்னு பல அதிகாரிங்க இந்த ஆளு கேக்கறத வாங்கித் தர்றாங்க.  சென்னை மாநகரத்தோட கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதியெல்லாம் ரமேஷுக்கு நெருக்கமான நண்பர்கள். இதையெல்லாம் விட முக்கியமா, மாசா மாசம், ரமேஷுக்கு சம்பளம் மாதிரி மாமூல் குடுக்கறது யார் தெரியுமா ? அண்ணன் சைதை துரைசாமிதான்.

911790_10151561774908911_1202467980_n

எப்போதும் பணத்தின் மேலதான் ரமேஷுக்கு. இப்போ அதிமுக ஆட்சியில மட்டும் ரமேஷ் வசூல் ராஜாவா இல்ல…  கடந்த ஆட்சியில உயர்கல்வித்துறை அமைச்சரா இருந்த பொன்முடிகிட்ட இவர் வசூல் செஞ்ச தொகை மட்டும் பல லட்சங்கள் இருக்கும்னு சொல்றாங்க. பொன்முடியைத் தவிர்த்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கிட்டயும் ஏகப்பட்ட தொகையை வசூல் செஞ்சதா ஐ.பெரியசாமி பி.ஏ ராஜா அடிக்கடி சொல்லுவாராம் பாஸ். “

“இவரை அதிமுக ஆட்சியோட காமராஜ்னு சொல்லலாமா தமிழ் ? “ என்று ஒரு முக்கிய சந்தேகத்தை எழுப்பினான்  வடிவேலு.

“காமராஜை யார் கூடவாவது ஒப்பிட முடியுமா மச்சான்.. அவருக்கு நிகர் அவர் மட்டுமே.  இந்த மாதிரி மாமூல் வாங்கறது, ஓசியில சரக்கு வாங்கறதெல்லாம் சாதாரண ஆளுங்க செய்யறதுப்பா.   காமராஜோட ரேஞ்சே வேற.  சாதிக் பாட்சா மட்டும சாகாம இருந்திருந்தா, காமராஜ் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆயிருப்பார்… என்ன பண்றது.. சரி விஷயத்துக்கு வர்றேன் மச்சான்.

இந்த துக்ளக் ரமேஷுக்கு நெருக்கமான நண்பரா இருந்தவரு மணிச்சுடர் ராமதாஸ்.  இவரை, ஆற்காடு வீராசாமியோட அடிமைன்னு சொன்னா அது மிகையாகாது.  ஆற்காடு வீராசாமிக்காகவே, கடந்த ஆட்சியில எதிரொலின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு நடத்தினார்.  அந்த எதிரொலி பத்திரிக்கையோட மொழி, சரோஜா தேவியை விட மோசமா இருக்கும்.  ஜெயலலிதாவை அவ்வளவு தரம்தாழ்ந்து, மோசமா விமர்சிச்சு எழுதுவாங்க. அந்தப் பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்த மணிச்சுடர் ராமதாஸுக்கு, சென்னை தூர்தர்ஷன்ல வேலை பாத்த மாதிரி பென்ஷன் வாங்கித்தந்தது, நம்ப ரமேஷ்தான்.

Tuqlaq_Ramesh

ஜெயலலிதாவோடு பேசிக்கொண்டிருக்கும் துக்ளக் ரமேஷ்

அது மட்டும் இல்லாம, மணிச்சுடர் ராமதாஸோட மகள் இளவரசிக்கு, செய்தி விளம்பரத்துறையில ஒரு பதவி வாங்கிக் கொடுத்திருக்கார் ரமேஷ்.  அந்த இளவரசி, செய்தி ஒளிபரப்புத் துறை சார்பா, வணிகவரித்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியா இருக்காங்க. “

“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தானே தமிழ் ? “ என்றார் கணேசன்.

“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தான்.. ஆனா யாருக்கு வாங்கித் தர்றோம்னு இருக்குல்ல.. ?  ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய எல்லாருக்கும் உரிமை இருக்கு. ஆனா எதிரொலி பத்திரிக்கை எழுதியதையெல்லாம் எழுத்து வகையிலயே சேத்துக்க முடியாது. அப்படி தரக்குறைவா ஜெயலலிதாவை விமர்சனம் செய்த ஒரு நபரோட மகளுக்கு வேலை வாங்கித் தர்றதை எப்படிண்ணே ஏத்துக்க முடியும் ? “

“இவன் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா ? “

“அது மட்டும் இல்லன்ணே.  இவன் வேலை செய்யற பத்திரிக்கையான துக்ளக் ஆசிரியர் “சோ”[வுக்கு வேணும்னு சொல்லி, பல காவல்துறை உயர் அதிகாரிகள்ட சொல்லி, பர்மா பஜார்லேர்ந்து ஸ்காட்ச் பாட்டிலும் வாங்கியிருக்கார் ரமேஷ். “

“சரி இந்த வார ஜாங்கிட் செய்தி சொல்லு மச்சான்.. “ என்று தமிழைப் பார்த்து கண்ணடித்தான் பீமராஜன்.

“அது எப்படி நான் வாராவாரம் ஜாங்கிட் செய்தி சொல்லுவேன்னு நெனைக்கிற“

“அந்த ஆளு என்ன பண்ணாலும் உனக்குதானே மச்சான் மொதல்ல தெரியுது ? சும்மா நடிக்காத. சொல்லு “

“ஜாங்கிட் தொழில் அதிபர் ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கார் மச்சான்“

“என்ன மச்சான் சொல்ற.. ?  அவர் காவல்துறை உயர் அதிகாரிதானே… என்ன திடீர்னு தொழில் அதிபர் ஆயிட்டாருன்ற ? “

“அவர் மகன் சவாய் ஜாங்கிட் பேர்ல ஒரு கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில இருக்கார். “

“அவரு எதுக்கு மச்சான் மகன் பேர்ல கம்பெனி ஆரம்பிக்கிறார் ? “

Jaffer_Jangid

“சம்பாதிச்ச லஞ்சப்பணத்தையெல்லாம் வெள்ளையாக்க    வேணாமா ? அதுக்குத்தான் ஆரம்பிக்கிறார். அவருகிட்ட எப்படிப்பாத்தாலும் 500 கோடியாவது இருக்கும்றதுதான் காவல்துறை வட்டாரத்துல இருக்கற பேச்சு“

“அவருக்கிட்ட அவ்வளவு இருக்குமா ? “ என்ற வியப்போடு கேட்டான் வடிவேலு.

“அவரை யாருன்னு நெனைச்ச… ?  சமீபத்துல சிபிஐ வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பா விசாரணை நடத்தினாங்க தெரியுமா ? அந்த விசாரணையில பல முக்கிய பிரமுகர்களோட கார் பறிமுதல் செய்யப்பட்டது.  அதுல பறிமுதல் செய்யப்பட்ட கார் ஸ்டாலினோட பினாமி, ராஜா சங்கரோடது.  அந்த ராஜா சங்கரோட கார் பறிமுதல் செய்யப்பட்டதும் துடிச்சார் பாருங்க ஜாங்கிட்… வேலையே போயிருந்தா கூட அப்படித் துடிச்சிருக்க மாட்டார். அப்படி துடிதுடிச்சுப் போயிட்டார். அவருக்கும் ராஜா சங்கருக்கும் ஏகப்பட்ட பண பரிவர்த்தனைகள் இருக்கு. பல பேருக்கு இது தெரியாது. “

“சரி….  இவ்வளவு மோசமான ஆளா இருந்தும் இவரு மேல இந்த ஆட்சில கூட எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன் ? “ என்று தன் சந்தேகத்தை சபைக்கு கொண்டு வந்தான் ரத்னவேல்.

“ஜாங்கிட்டுக்கு ஆள் இல்லாத இடமே இல்லை மச்சான்.  இப்போ நடக்கற கவர்மென்ட்ல கூட, ஜாங்கிட்டுக்கு அத்தனை தகவலையும் சொல்றதுக்கு ஆளு இருக்கு.  ஜாங்கிட்டை ஒரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னு சும்மா சொல்லலை. “

“இந்த கவர்மென்ட்ல யாருப்பா இவருக்கு ஆளு ? “ என்று ஆச்சர்யப்பட்டான் ரத்னவேல்.

“முதலமைச்சரோட செயலாளரா இருக்காரே ராம் மோகனராவ்.  அவரோட மகள் கல்யாணம் சமீபத்துல திருப்பதியில நடந்துச்சு. உங்க பத்திரிக்கையிலதான் அதைப்பத்தி கவர் ஸ்டோரியே பண்ணாங்க. அந்த திருமணத்துக்குப் பிறகு ரிசெப்ஷன், போன வாரம் தாஜ் ஹோட்டல்ல நடந்துச்சு.  அந்த ரிசெப்ஷனுக்கு மொத்தம் 60 லட்ச ரூபாய் செலவாயிருக்கு.  மொத்த செலவையும் ஏத்துக்கிட்டது ஜாங்கிட்.  இவரை மீறி எப்படிப்பா ஜாங்கிட் மேல நடவடிக்கை எடுத்துடுவாங்க ?  ஜாங்கிட்டுக்கு எதிரா உளவுத்துறையில என்ன அறிக்கை வருது, ஜாங்கிட் மேல வந்த புகார்களை எப்படி மூடுவது, ஜாங்கிட்டைப் பத்தி தலைமைச் செயலகத்தில் நடக்கும் உயர் அதிகாரிகள் கூட்டத்துல என்ன பேசுவாங்கன்னு எல்லாத் தகவலையும் சொல்றாருப்பா ராம் மோகன ராவ்.  அதுக்கு கைமாறுதான், திருமண வரவேற்பு செலவு. “

7631PMay-15---F-BIG

Rama_Mohana_r2ao_IAS

ராம் மோகன ராவ் ஐஏஎஸ்

“இந்த ஆளைப் போயி ஜெயலலிதா எப்படிப்பா நம்பறாங்க ? “

“இந்த ராம் மோகன ராவ் மேல, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு 2002ம் ஆண்டில் உத்தரவிட்டதும் இதே ஜெயலலிதாதான்.  இன்னைக்கு முதலமைச்சரோட செயலாளரா நியமிச்சு அழகு பாக்கறதும் இதே ஜெயலலிதாதான். “

“சரி அண்ணன் சைதையார் எப்படி இருக்காரு… ?  அந்த அம்மா இவரு மேல கோவமா இருக்கறதா சொன்னியே… இப்போ எப்படி மச்சான் இருக்காரு ? “என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேலு.

“இன்னும் இந்த அம்மாவுக்கு சைதையின் திருவிளையாடல்கள் முழுமையாத் தெரியல. அதிமுக விருகம்பாக்கம் பகுதி செயலாளரா இருப்பவர் வி.என்.ரவி.  இவங்க அண்ணன் விருகை வி.என்.கண்ணன்.  இந்த கண்ணன், தமிழ்த்திருநாடு நிலம், வீடு, மனைத் தரகர்கள் நலச்சங்கம்னு ஒரு சங்கம் வைச்சுருக்கார்.  இந்த ஆளுக்கு சென்னை நகரத்துல, வழக்குல சிக்குன சொத்துக்கள், வில்லங்கத்துல இருக்கற சொத்துக்கள் பத்துன எல்லா விபரங்களும் தெரியும். சைதை துரைசாமியோட முழு நேர வேலையே நில அபகரிப்புன்றதுனால, இவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நெருக்கமா ஆயிடுச்சு.  இந்த கண்ணன், கடந்த ஆட்சியில ஸ்டாலினோட ரொம்ப நெருக்கமா இருந்தவர்.  ஆட்சி மாறுனதும், அதிமுக பக்கம் வந்துட்டார்.  இந்தக் கண்ணன், ரவி மற்றும் சைதை துரைசாமியோட கூட்டணிதான் சென்னை மற்றும் புறநகர்ல பல சொத்துக்களை ஆட்டையப் போடுது.  இந்த விபரம் நமக்கே தெரியும்போது, ஒரு மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கற ஜெயலலிதாவுக்குத் தெரியாதா ?  ஆனா அந்த அம்மா ஏன் கம்முனு இருக்குன்னு யாருக்கும் புரியலை “

DSC_0161

“வேற போலீஸ் செய்தி இல்லையா மாமா ? “ என்று இரண்டாவது பீரை வாயை வைத்து உடைத்து விட்டுக் கேட்டான் வடிவேலு.

“லஞ்ச ஒழிப்புத் துறையில அடுத்த லே அவுட் போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு முன்னாடி போட்ட லே அவட்டுக்கு விஜிலென்ஸ் நகர்னு பேர் வச்சு, அதுல அத்தனை ப்ளாட்டுகளும் வித்து தீந்த பிறகு, இப்போ தாம்பரம் தாண்டி இருக்கற சோமங்கலத்துல அடுத்த லே அவுட் போடப்போறாங்க.

இந்த லே அவுட்டுக்கான திட்டத்தை இணைந்து செய்வது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.சம்பந்தம்“

“டிஎஸ்பியும் கூடுதல் டிஜிபியும் எப்படி கூட்டணி வைப்பாங்க ? “ என்று சந்தேகத்தை எழுப்பினான் பீமராஜன்.

“மச்சான். இந்த சம்பந்தம் இருக்கறாரே… 1987ல் உதவி ஆய்வாளரா வேலைக்கு சேந்தவரு.  1998ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தார்.  இவரை ஒரு சின்ன ஜாங்கிட்னே சொல்லலாம்.  24 மணி நேரமும் ரியல் எஸ்டேட்தான் இவருக்கு வேலை.  லஞ்ச ஒழிப்புத் துறையில வேலை செஞ்ச இந்த 15 வருஷத்துல ஒரே ஒரு ரிப்போர்ட் கூட உருப்படியா தந்துருக்க மாட்டாரு.  இப்போக் கூட ஒரு அறிக்கை தயார் பண்ணுங்கன்னு சொன்னா இவருக்கு சுத்தமா தெரியாது. ஆனா ரியல் எஸ்டேட் சம்பந்தமா என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார்.

இவருக்கு ஒரு பொலிரோ ஜீப். அரசாங்க செலவுல டீசல். ட்ரைவர் எல்லாம் உண்டு.  ஆனா, முக்கியமான விஷயம் என்னன்னா பெங்களுர்ல நடக்கற சொத்துக்குவிப்பு வழக்குக்கு இவர்தான் புலனாய்வு அதிகாரி.  இவர்தான் அதிமுக ஆட்சி வந்ததும், மீண்டும் புலன் விசாரணை நடத்தனும்னு வழக்கறிஞர் இல்லாமயே நேரடியா நீதிமன்றத்துல மனு தாக்கல் செய்தது.  ஏற்கனவே எந்த வேலையும் பாக்காம ரியல் எஸ்டேட் பண்ணுவாரு. இப்போ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கோட புலனாய்வு அதிகாரியா…..  இவரை இனிமே யாரு கேக்கறது ? “

“இந்த மாதிரி அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்தா லஞ்சத்தை நல்லா ஒழிக்கலாம்“ என்று கூறி விட்டு, தன் பீர் பாட்டிலில் இருந்த கடைசி மடக்கை குடித்து முடித்தான் பீமராஜன்.

“வேற என்ன முக்கியமான மேட்டர் இருக்கு மாமா ? “ என்றான் ஏப்பம் விட்டவாறே…

“பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பலர் கடுமையான வருத்தத்துல இருக்காங்க மச்சான். “

“ஏன்.. அவங்கதான் 2016ல ஆட்சியைப் பிடிக்கப்போறாங்களே…“

“அவங்க சொன்னது ஆட்சியை இல்ல மச்சான்.  ஆச்சி மசாலாவை.. ஏண்டா அவங்கதான் தமாஷ் பண்றாங்கன்னா நீ வேற.. நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா யாரை கைது பண்ணிட்டாங்கன்னு பஸ்ஸை எரிக்கறது, கலவரம் பண்றதுன்னு செஞ்சாங்களோ, அவங்க ரெண்டு பேரும் வெளியில வந்துட்டாங்க. ஆனா, அவங்க சொன்னாங்கன்னு இதையெல்லாம் செஞ்ச நாங்க மாட்டிக்கிட்டோம். இப்போ காப்பாத்தக் கூட ஆளு இல்லன்னு பொலம்பறாங்க மச்சான்.“

“அய்யா காப்பாத்த மாட்டாரா மச்சான்“ என்று கேட்டு நக்கலாக சிரித்தான் ரத்னவேல்,

“ராமதாஸ் நடத்திய இந்த அட்டூழியங்கள் அவருக்கு வன்னிய மக்கள் மத்தியில இருக்கற ஆதரவை முற்றிலுமா அழிக்கப்போகுது பாரு மச்சான்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்க இதற்கான மேல்முறையீட்டு அமர்வு முன்னாடி முறையீடு செய்யலாம்.  இதுக்கே எப்படியும் ஒரு மாசம் ஆயிடும்.  அதுக்குப் பிறகு, உயர்நீதிமன்றத்துல இந்த தடுப்புக் காவலை ரத்து பண்ணச் சொல்லி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யணும்.  பெரிய வக்கீலுங்க இந்த மனுத் தாக்கல் செய்யறதுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேப்பாங்க.  எப்படிப்பாத்தாலும் குறைஞ்சது 25 ஆயிரமாவது ஆகும். அதுவும், பாலத்துக்கு வெடிகுண்டு வச்சது, டாஸ்மாக் கடை மேல பெட்ரோல் குண்டு வீசுனது, பஸ்ஸை எரிச்சது இது மாதிரி விஷயத்துக்காக போடப்பட்ட தடுப்புக் காவல் ஆணைகளை சாதாரணமா நீதிமன்றம் ரத்து பண்றது இல்லை.

482524_572316392790264_53645563_n

 

கோடை விடுமுறை முடிஞ்சு, ஆட்கொணர்வு மனு வழக்குகளை விசாரிக்க, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தனபாலன் வர்றதா சொல்லப்படுது.  இந்த நீதிபதிகள், இந்த வன்முறைச் சம்பவங்களை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க.  அப்படி தடுப்புக் காவல் ஆணையை நீதிமன்றம் உறுதி செஞ்சுடுச்சுன்னா, உச்சநீதிமன்றம்தான்.  உச்சநீதிமன்றம் போறதுக்கு எப்படிப் பாத்தாலும் 5 லட்ச ரூபாய் ஆகும்.  அது சாதாரண பாட்டாளி மக்கள் கட்சித்தொண்டர்களால் முடியவே முடியாத காரியம்.

இதைத் தவிர்த்து, இப்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்களோட குடும்பங்கள் படற அவஸ்தை சொல்லி மாளாது.  குடும்பத்தின் வருமானம் நின்று போகும். வழக்கு செலவுகளுக்காக கடன் வாங்கணும்.   வாரா வாரம் சிறையில இருக்கறவங்களப் போய் பாக்கணும்.  பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துடும். எல்லா வன்னிய குடும்பமும் ராமதாஸ் மாதிரி கோடீஸ்வரக் குடும்பமா என்ன ?

இதுதான் மருத்துவர் அய்யா வன்னிய சமுதாயத்துக்குப் பண்ணியிருக்கற சேவை.“

“பாவம் மச்சான் அவங்க“ என்று பரிதாபப்பட்டான் பீமராஜன்.

“இல்லை மச்சான் பாவம் பாக்காத.  ராமதாஸ் கைதுன்னு பாலத்துக்கு குண்டு வச்சாங்களே… ஒழுங்கா வைக்கத் தெரியாம வச்சாங்க.   அதனால பெரிய சேதம் இல்லை.  ஒரு வேளை ஒழுங்கா வெடிச்சு, அந்த நேரத்துல அது மேல ஒரு பஸ் போயிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாரு… செத்துப் போறதுல வன்னிய மக்களும் இருந்திருப்பாங்கள்ல…  வன்னியக் குழந்தைகளும் இருந்திருக்கலாம்ல.. இதெல்லாம் லைட்டா எடுத்துக்கக் கூடாது மச்சான்.  ஒரு முறை தடுப்புக் காவல்ல இருந்துட்டு வந்தாத்தான் அடுத்த முறை செய்ய மாட்டாங்க.  நீ வேணா பாரேன்.. இந்த வாட்டி தடுப்புக் காவலில் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவங்க, அடுத்தவாட்டி ராமதாஸை கைது பண்ணா, ஆதரிச்சு போஸ்டர் ஒட்டுவாங்க. அந்த அளவுக்கு அவங்க படாத பாடு படப்போறாங்க பாறேன். “

“சரி கோர்ட் நியூஸ் என்னப்பா ? நீதிபதிகள் நியமனம் எந்த அளவுல   இருக்கு ? “ என்ற கணேசன் தனது வோட்காவை முடித்து விட்டு ஆனந்தமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

“நம்ப இதுக்கு முன்னாடியே டிஸ்கஸ் பண்ணோம் ஞாபகம் இருக்காண்ணே. தங்கசிவம்ன்ற கேரக்டர்….“

“யாருப்பா ஞாபகம் இல்லையே ? “

“அதான்ணே… நீதிபதி பால் வசந்தகுமார் பரிந்துரையில நீதிபதியாகப் போறார்னு.  அவரோட முழு நேர வேலையே ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரோக்கர்னு சொன்னேன் ஞாபகம் இல்லையா ? “

“ஆமாம்பா.. சொல்லு.. “

“அவர் மேல அடுக்கடுக்கா புகார்கள் குவியுதுன்ணே.  நீதிபதியாகப் போறவங்க தங்களைப் பத்தின விபரங்களைக் குடுக்கும்போது எந்த விபரத்தையும் மறைக்காம எல்லா விபரத்தையும் குடுக்கணும். தான் தாக்கல் செஞ்ச வழக்கு உயர்நீதிமன்றத்துல நிலுவையில இருக்குன்ற விபரத்தை தன்னோட பயோடேட்டாவுல குடுக்காம மறைச்சிருக்கார்.  இந்த ஒரே காரணத்தை வச்சு தங்க சிவம் நீதிபதியாகக் கூடாதுன்னு முடிவெடுக்கனும்.  ஆனா நீதிபதி பால் வசந்தகுமார், தங்கசிவத்தை எப்படியாவது மை லார்டா ஆக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கறார். என்ன பண்றது ? “

“என்னய்யா வழக்கு அது… ? “ என்று சிகரெட் புகையை வானத்தை நோக்கி ஊதியவாறு கேட்டார் கணேசன்.

“அண்ணே அந்த வழக்கு ரொம்ப சுவையானதுன்ணே.  இந்த தங்கசிவம் ஃப்ராடுன்னு நிரூபிக்கறதுக்கு இது ஒண்ணே போதும்“

“மொத்த டீடியிலையும் குடு … . “

“சிப்காட் அமைக்கக் கூடிய தொழில் பூங்காவுக்காக, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வல்லம் வடகல்  பகுதியில 1780 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகம் பண்ணாங்க.  அதுல வல்லம்-பி கிராமத்துல சர்வே நம்பர் 275/1ல் 3.25 ஏக்கர் நிலமும் சர்வே நம்பர் 275/2ல் 1.54 ஏக்கர் நிலமும் இருக்கு. இந்த ரெண்டு நெலமும் பாபுஜி மனைவி வாசுகி பேர்ல இருக்கு.

56-Ex-II-2_Page_14

அரசாங்கம் இந்த ரெண்டு நெலத்தோட சேத்து ஆயிரக்கணக்கான நிலங்ககை கையகம் பண்ணாங்க.  கையகம் பண்ணிட்டு அரசாங்கம் 2 மார்ச் 2012 அன்னைக்கு இதற்கான உத்தரவை கெசட்டில் வெளியிட்டாங்க.  கெசட்டில் ஒரு நில கையம் செய்யப்பட்டதுன்னு உத்தரவு வந்தா, அதுக்குப் பிறகு அந்த நெலத்தை யாருக்கும் விக்க முடியாது. இந்த நேரத்துலதான் நம்ப தங்கசிவம் பிக்சர்ல வர்றார்.

அந்த நில உரிமையாளர் வாசுகி தங்கசிவம் பேருக்கும் ரங்கநாயகின்றவர் பேருக்கும் பவர் பத்திரம் எழுதி வாங்கறார்.  பவர் எழுதி வாங்கிட்டு, அரசாங்கம் இந்த நெலத்தை கையம் பண்ணியது தவறுன்னு வழக்கு தாக்கல் செய்யறார்.  ரங்கநாயகி பேர்ல இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்படுது.

thankasivam

Untitled-1

வழக்கமா அரசாங்கம் எந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துனாலும் நீதிமன்றங்கள் அதில தலையிடாது.  நஷ்ட ஈடாக கொடுக்கப்படும் தொகை கூடவோ குறைவோ… அதில் மட்டுமே நீதிமன்றம் தலையிடும்.

ஆனால், தங்கசிவமும், ரங்கநாயகியும் தொடர்ந்த வழக்குல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் போன மாசம் 14ம் தேதி அரசாங்கம் நிலம் கையகம் எடுத்த ஆணையை ரத்து செய்து உத்தரவு போட்டிருக்கார்.”

”நீதிபதி வெங்கட்ராமனா இப்படி செஞ்சார்… ? நம்பவே முடியலையே…”

”உண்மை பல நேரங்களில் கசப்பாக இருப்பதோடு, ஜீரணிக்க முடியாமலும் இருக்கு என்னண்ணே பண்றது. போன மாசத்தோட நீதிபதி வெங்கட்ராமன் ஓய்வு பெற்றுட்டார். அவரு கதைய விடுங்க.  தங்கசிவம் மேட்டருக்கு வாங்க… அரசாங்கம் கையகப்படுத்துன நிலத்துக்கு பவர் பத்திரம் வாங்குறது பெரிய மோசடி.  அப்படி பவர் பத்திரம் வாங்கின நிலத்துக்காக, நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தது இன்னும் பெரிய மோசடி.  இதுல, அரசு வழக்கறிஞர், சிப்காட் வழக்கறிஞர் நர்மதா சம்பத், நீதிபதி, எல்லாரும் சேந்து ஐஞ்சு ஏக்கர் நிலத்தை தங்கசிவம் அபேஸ் பண்ண உதவி பண்ணியிருக்காங்க.

சிப்காட் கையகம் பண்ணிய நிலத்துக்குப் பக்கத்துல இருக்கற ஐஞ்சு ஏக்கர் நெலத்தோட மதிப்பு எத்தனை கோடி உயர்ந்துருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கங்கண்ணே. இப்படி நிலத்தோட மதிப்பை உயர்த்தி எத்தனை கோடி ரூபாய் லாபம் பாத்துருப்பார்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்கண்ணே..”

”ஆமாம்பா.. இப்படிப்பட்ட மோசடிப் பேர்விழியைப் போயி நீதிபதியாக்கறாங்களே… என்னப்பா அநியாயம் இது ? ” என்று மிகவும் வருத்தத்தோடு கேட்டார் கணேசன்.

”இப்படிப்பட்ட மோசடிப்பேர்விழியை நீதிபதியாக்கனும்னு பரிந்துரை செஞ்ச உயர்நீதிமன்ற நீதிபதி பால்வசந்த குமாரை என்ன சொல்றதுன்னு சொல்லுங்க… இதுல கொடுமை என்னன்னா, நீதிபதி பால்வசந்த குமாரையெல்லாம் உயர்நீதிமன்ற வட்டாரத்துல நேர்மையான நீதிபதின்னு வேற சொல்றாங்க…. ”

DSC_0044

நீதிபதி பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி வெங்கட்ராமன்.  நடுவில் தூங்கும் சிங்கம் நீதிபதி கர்ணன்.

”அவ்வளவுதானா மச்சான் கோர்ட் நியூஸ்… ? ”

”சூப்பர் நியூஸ் வச்சுருக்கேன் மாமா…. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்காங்களே… அவங்க தீர்ப்புகள் வழங்கும்போது பாரபட்சமில்லாம வழங்குவாங்கன்னுதானே எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க…. ? ”

”ஆமாம் மச்சான். இன்னும் நெறய்ய பேரு அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க… அப்படி இல்லையா ? ”

”ஆனா அப்படியெல்லாம் இல்லை.  குறிப்பா ஒரு வருடத்துல பணியிலேர்ந்து ஓய்வு பெற இருக்கற நீதிபதிகள் குடுக்கற தீர்ப்பை நம்பவே முடியாது. ”

2009 லேர்ந்து 2013 வரைக்கும்,  ஓய்வு பெற்ற நீதிபதிகள் எத்தனை போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க தெரியுமா ? நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், 5 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி குலசேகரன் 2 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பி.முருகேசன் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பெரிய கருப்பையா 7 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி சொக்கலிங்கம் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி ஜோதிமணி 4 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். “

list_judge_applied_for_variouspost_after_rtd0002

list_judge_applied_for_variouspost_after_rtd0003

list_judge_applied_for_variouspost_after_rtd0004

”தம்பி.. இவங்க இந்த மாதிரி போஸ்டுக்கு அப்ளை பண்றதுல என்னப்பா தப்பு ?  ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது வேலைக்கு போயி சுறுசுறுப்பா இருக்கறது நல்லதுதானே ? ” என்று வெள்ளந்தியாக கேட்டார் கணேசன்.

”இதையேதான்ணே இந்தத் தகவலை சொன்ன வக்கீல் கிட்ட கேட்டேன். அவர் என்ன சொல்றார்னா இந்த நீதிபதிகள் வெறுமனே அப்ளை பண்ணிட்டு இருக்க மாட்டாங்க.  யாரைப் பிடிச்சா இந்த போஸ்டு கிடைக்கும்னு பாத்து அவங்கக் கிட்ட பேசுவாங்க. எப்படியாவது இந்த போஸ்ட் வாங்கிக் குடுங்க.  இல்லன்னா நான் ‘சேகர் செத்துருவான்’னு பேசுவாங்க.  இவங்க பேசுற ப்ரோக்கர்களும், எப்படியாவது அய்யாவுக்கு இந்தப் போஸ்டை வாங்கித் தந்துட்றேன்னு சொல்லுவாங்க. ”

”சரி அதுல என்ன தப்பு… ? ”

”என்னண்ணே இப்படி உலகம் புரியாமயே இருக்கீங்க.  புரியலையா இல்லை மப்பு ஜாஸ்தியாயிடுச்சா…. ? ”

”உலகத்துல எதுவுமே இலவசம் இல்லன்ணே இப்படி செஞ்சு குடுக்குற ப்ரோக்கர் சும்மாவா செஞ்சு குடுப்பான்.  சார்… போஸ்டை நான் வாங்கித் தந்துட்றேன். எனக்கு இந்த வழக்குல இப்படித் தீர்ப்பு குடுங்க.  அந்த வழக்குல இப்படி தீர்ப்பு குடுங்கன்னு சொல்லுவாங்க.  ப்ரோக்கருங்க சொல்றபடி தீர்ப்பு குடுக்கலன்னா போஸ்ட் எப்படி கிடைக்கும் ?  ஓய்வு பெற்ற பிறகு கெடைக்கப் போற போஸ்டுக்காக இவங்க எழுதற தீர்ப்பு எப்படி நியாயமானதா இருக்கும் ? ”

”என்னய்யா இது… இந்த நீதிபதிகளையெல்லாம் கடவுள் மாதிரி நெனைச்சு மக்கள் நீதிமன்றத்தை நம்பியிருக்காங்களே…. இவங்க இவ்வளவு மோசமா இருக்காங்களே… ? ”

”இதுல இருக்கறதுலேயே சிறப்பு நீதிபதி ஜோதிமணி.  கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கை விசாரிச்சிக்கிட்டு இருக்கார். அந்த வழக்கில் ஒரு பார்ட்டி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்.  பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாகனும்னா மத்திய அரசுச் செயலர்கிட்டதான் விண்ணப்பிக்கனும்.   இவர் கூடங்குளம் வழக்கை விசாரிச்சுக்கிட்டே பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பதவி வேணும்னு விண்ணப்பிச்சார்.  விண்ணப்பத்தை ஒரு பக்கம் அனுப்பிட்டு, இன்னொரு பக்கம் கூடங்குளம் வழக்குல தீர்ப்பு வழங்கினார்.

வழக்கை தள்ளுபடி செய்யறேன்னு சொன்னாக் கூட பரவாயில்ல.  கூடங்குளம் அணு உலையில விபத்து நடக்க வாய்ப்பே இல்லன்னு தீர்ப்பு எழுதினார்.  அப்படி எழுதினது மட்டுமில்லாம, அவர் தீர்ப்பில் எழுதியிருந்ததுதான் சிறப்பான விஷயம்.”

”டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மிக மிக உறுதியாக இயற்கை சீற்றங்கள் இயற்கையின் செயல், இது போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டு மனித இனம் அஞ்சினால், மனித இனம் வளர்ந்திருக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு, கூடங்குளம் அணு உலை திட்டம் கடவுளின் திட்டம்னு அப்துல் கலாம் சொன்னதை முக்கியமா கோடிட்டுக் காட்டியிருக்கார்”

”அப்துல் கலாம் என்ன அணு விஞ்ஞானியா.. அவர் ஒரு ராக்கெட் சயின்டிஸ்ட். அணு உலையைப் பத்தி அந்த ஆளுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு மற்ற அணு விஞ்ஞானிகள் சொல்றாங்களே.. நீதிபதி ஜோதிமணி ஏன் குடுத்த காசுக்கு மேல கூவறாரு… ” என்றான் ரத்னவேல்.

”போடா லூசு…  அணு உலை பாதுகாப்பானதில்லைனு தீர்ப்பு குடுத்திருந்தா இன்னைக்கு நீதிபதி ஜோதிமணி டெல்லி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியா அமர்ந்திருக்க முடியுமா ?  அணு உலை பாதுகாப்பானதா இல்லை. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படலைன்னா அதிகபட்சம் என்ன நடந்துருக்கும் ? இடிந்தகரையில நீதியரசர் ஜோதி மணி வாழ்கன்னு பேசியிருப்பாங்க. உதயக்குமார், “ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜோதிமணின்னு” புதிய தலைமுறையில பேட்டி குடுத்துருப்பாரு.  இதை வச்சுக்கிட்டு செகப்பு வௌக்கு கார்ல போக முடியுமா, இல்ல பெரிய தொழில் நிறுவனங்கள்கிட்டயிருந்து கட்டிங்தான் வாங்க முடியுமா ? ”

”ஏம்ப்பா நல்லவங்களே ஒருத்தர் கூட இல்லையாப்பா…”

”ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான்ணே செய்யுது.  நீதிபதி சந்துருகிட்ட அவர் யார்கிட்டயும் கேட்காமலேயே கணினி மேல் முறையீட்டுத் தீர்ப்பாய நீதிபதியாகும்படி  ஆஃபர் பண்ணாங்க.  தன்னோட சுயகவுரவத்துக்கு எந்த விதத்துலயும் குறை நேராமல் கிடைச்ச அந்த பதவியைக் கூட வேணாம்னு சொல்லிட்டாரு நீதிபதி சந்துரு.”

p2

”நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா அவங்க சிறுபான்மையினர் என்பதுதான் வேதனை. ”

”இல்லன்ணே.  அவர்கள் சிறுபான்மையினர் இல்லை.  அரிய ஜீவராசிகள்”

”சரி கௌம்பலாமாப்பா… நேரம் ஆயிடுச்சு…”

”வாங்க எல்லாரும் போவோம்” என்று சொல்லிவிட்டு மொட்டை மாடியை காலி செய்தனர்.

 
மே 17 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 16 மே 2013 20:04

Picture_058

இயலாமையும் வஞ்சகமும்

சூல் கொண்டு

மானுடம் தெரு மேய்ந்போது

கொடிய நாசகார பாஷாணங்களை

முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்

மிக மலினமாக ஒத்திகை பார்த்து,

நவீன நரபலி நடத்தப்பட்ட

அரக்கத்தனத்தின்

நான்காம் ஆண்டு.

 

ஒருசில

கருங்காலிகளின் வரலாற்று துரோகத்தால்,

இருபத்து ஓராம் நூற்றாண்டில்

உலகம் வியப்புடன் திரும்பிப்பார்த்த

தமிழினத்தின் ஒப்பற்ற எழுச்சி

காட்டிக்கொடுக்கப்பட்ட

கரிநாள்.

 

தந்தரமும் நயவஞ்சகமும் ஒன்றுசேர்ந்து

ஒரு இனத்தின்

நாற்பது ஆண்டு முதலீட்டை

காவு கொடுத்து,

மண்ணோடு மண்ணாக்கிய

வரலாற்றின் வக்கிரமான

நினைவு நாள்.

 

மானசீகமாக இந்த நினைவு

எனது மண்ணில்

வெப்பத்துடன் நினைவு கூரவேண்டும்.

சுற்றி நின்று வஞ்சகர்கள் விபச்சாரம் செய்வதால்

விண் நோக்கி கூவிக் குரல் எழுப்பி

இறந்துபோன உறவுகளை உச்சாடனம் செய்து

அன்னை தமிழின் பெயரால்

அந்தியட்டி செய்கிறேன்.

 

எனது

இறந்தகால நினைவுகள் நீண்டு விரிகின்றன.

வீரம் ஒருபுறம்,

வஞ்சகம் மறுபுறம்.

உன்னோடு உன்னோடு என்று அறம் பாடியவர்கள்

தருணம் பார்த்து கருவறுத்த

நினைவுகள் மட்டும்,

நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாமல்

விழுப்புண்ணின் சீழாக வெளி வருகிறது.

 

எனது தாய் நாடு

ஒரு சிறிய நாடுதான்.

இருந்தாலும்

தமிழ் இனம் உலகில் இருப்பதை

வரை படங்களுடன் எட்டு திக்கிலும் முரசறைந்தது.

உரிமைப் புரட்சியின் வெப்பத்தால்

ஒரு கட்டத்தில்

எனது மண் உலைக்களமானது உண்மை.

 

உலைக்களம் கக்கிய கனலுக்குள்

குளித்து வெளிவந்த போதுதான்

மனித மரபணுக்களின் உள்ளிருந்த

அருவருப்பான சூத்திரம் அறிய முடிந்தது.

என் தாய் மண் என்பதால்

எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை.

 

வாழ்ந்து பார்த்த வரையில்

ரஷ்யாவை விட,  ஐரோப்பாவை விட

ஈழநாடு

என்றென்றும் எனக்கு இனிப்பாக இருந்தது.

 

அன்றொருநாள்

காகம் ஒன்று எனது குழந்தையின் தலையில்

எச்சமிட்டதற்க்குக்கூட  காவலுக்கு கட்டளையிட்ட

என் தலைவன் வாழ்ந்த மண்ணில்

நரிகளும் பன்றிகளும்

தமது மேய்ச்சல் காடாக்கி இனப்பெருக்கம் செய்ய

படையெடுக்கின்றன.

 

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்

அப்புவும்,  ஆச்சியும்,  அடுத்தவீட்டு பாட்டியும்

சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்.

அது மிகையல்ல என்பதை

எனக்கு ஞானம் போதித்த பேரககராதி மூலம்

நிதர்சனமாகவும் உணர்ந்தது கொண்டேன்.

 

எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,

எனது மண்ணில்

தினமும் வெடிச்சத்தம் காதை பிளக்கும்.

அதற்காக

எவரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கவுமில்லை.

விபரம் புரியாமலுமில்லை.

 

அரசியல் செத்துப்போய்

அரை நூற்றாண்டு ஆகிவிட்டபோதும்,

மனுவியல்

உயிர்ப்புடன் எனது மண்ணில்

நிமிர்ந்து நிற்கக் கண்டேன்.

தலைமையின் பண்பு அதுவென்று

நான் மட்டும் சொல்லவில்லை.

அதற்காக

நாங்கள் பாராட்டு விழா நடத்தவுமில்லை.

 

குழந்தைகள் கூட வெடிச்சத்தத்திற்கு

விளக்கவுரை கூறுமளவுக்கு

விற்பன்னராக இருந்தது

மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்,

ஆனால்,

இப்போ மட்டும்

அது

எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

 

அப்போதெல்லாம்

துணிச்சல் கூட

எங்களிடம்,  கைமாற்று கேட்குமளவுக்கு

துணிவு

பார்க்குமிடமெல்லாம்

கும்பி கும்பியாக கிடந்தது.

 

நான்கு வருடங்களுக்கு முன்புவரை

எல்லோரைப் போலவும் எங்களுக்கும்

ஆயிரம் பிரச்சினைகள்.

ஆனாலும்

எங்களை அடிமைகள் என்று

எவரும் சொல்லவில்லை.

 

தினமும் எங்கள் மண்ணில்

மண்ணுக்காக

மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

அதற்காக எவரும் பயப்படவும் இல்லை,

பக்கத்து வீட்டில்ப்போய்

பதுங்கிக்கொள்ளவும் இல்லை.

தூக்கத்துக்கென்று

நாங்கள் இரவை தெரிவு செய்ததுமில்லை.

 

இன்று நான்

வேறொரு நாட்டில் உண்டு உறங்கி

பாதுகாப்பாக இருந்தாலும்,

தனிமையாக உணருகின்றேன்.

காவற்காரரை காணவில்லை

எனது கவச குண்டலத்தின்

சத்தமும் கேட்கவில்லை.

அடிக்கடி திடுக்கிடுகிறேன்.

 

இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்

என்னிடம்

அசாத்திய துணிச்சல் நிறையவே இருந்தது.

அது

தலைக்கனமாக கூட இருக்கலாம்.

இன்றைக்கு துணிச்சல் இருந்தாலும்

அசாத்தியம் இருந்த இடம்

வெறிச்சோடி வெற்றிடமாக கிடக்கிறது.

அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

 

ஈழநாட்டை தாயகமாக கொண்டு

அங்கு பிறந்த பூர்வீக தமிழனான எனக்கு,

அங்கு

எனது மண்ணில் வாழ இடமில்லை.

என் உரிமை வஞ்சகர்களின் வாய்ப்பாடுகளால்

முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது.

இப்போதெல்லாம்

வேடனும்

வெட்டரிவாள்களும் குடிகொண்டுவிட்டன.

 

எனக்கான வழக்குகள் நானில்லாமல்

வெவ்வேறு மன்றங்களில்

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

என் மூலம் தெரியாத பலர்

வேற்று மொழியில் எனது சுதந்திரம் பற்றி

மூச்சு விடமல் காரசாரமாக விவாதிக்கின்றனர்.

எந்த முடிவையும் எட்டிவிட மாட்டார்கள்

என்பது மட்டும்

என்னால் சொல்ல முடியும்.

 

அதுபற்றி பலருக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.

சிலர் கவலைப்படுவதுபோல் காட்டுகின்றனர்

உலகத்திலுள்ள அனைத்து பேரரசுகளும்,

ஆட்சியாளர்களும் உள சுத்தியோடு

எமது கையறு நிலையை,

வன் குடியகல்வை

மானசீகமாக பேச மறுக்கின்றனர்.

 

எங்களை

சிங்களவனிடம் தாரைவார்த்துக்கொடுத்த

பிரித்தானிய

எலிஸபெத் மகாராணியார் உட்பட.

 

அது ஏன் என்பது எனக்கும்

எங்களுக்கும் இதுவரை புரியவில்லை.

 

இரண்டு காரணங்கள் இருக்கலாம்,

வரலாற்றின்

படிப்பினையை மூலதனமாகக் கொண்டு

எனது உள் மனது

அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

நான்

அதை மானசீகமாக ஏற்றுக்கொண்டாலும்,

வெளியில் சொல்ல முடியவில்லை,

ஏனென்றால்

கருங்காலிகளுடன்,   கிரந்தம் பேசும்

பெரியவரும் கோபித்துக் கொள்ளுவார்.

 

அவரது ஈகோ'வும் வித்தக காய்ச்சலும்,

என்னையும் எனது சந்ததியையும்

உலுக்கிய உலுக்கும் படுத்திய பாடும்

எங்களைத்தவிர வேறு எவரும்

அனுபவித்து புரிந்திருக்க முடியாது.

ஆனாலும் அவர் இன்றைக்கு

மோசமாக அடிபட்டு குப்புற விழுந்து போனார்

இருந்தும் புரியாத கிரந்தத்தை

இன்னும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

 

அது சர்வதேச மட்டத்தில்

பலருக்கும் புரிந்த விடயங்கள்தான்.

இன்னுமொரு மூன்று வருடத்திற்கு

பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

அட்டம சாமத்தில்

பட்சி ஒன்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது.

 

உலகத்தில்

தாழ்வு மனப்பாண்மையை

பகிரங்கமாக சொன்னால்

பெரியவருக்கு மட்டுமல்ல

எவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கலாம்.

அதனால்

அதை நான் வெளிப்படையாக

சொல்ல விரும்பவில்லை.

 

எனது இனம்

அகதியாக புலம்பெயர்ந்திருந்தாலும,

அமெரிக்காவில்,

ஐரோப்பாவில்,

அவுஸ்திரேலியாவில்,

கனடாவில்

இன்னபிற இருபது நாடுகளில்

அமைதியாக நிம்மதியாக வாழ முடிகிறது.

 

ஆனால்

நிராயுதபாணியான போதும்

எனது சொந்த நாடான ஈழத்தில்

ஒரு மணி நேரம்

சுதந்திரமாக உயிர் வாழ இடமில்லை.

 

நம்பிக்கையுடன்

நான் அகதி என்று தமிழ்நாடு வந்தாலும்,

அதிகம் சிறையிலும்,

சிறைச்சாலை போன்ற கட்டமைப்புக்குள்ளும்

மட்டுமே வாழ முடிகிறது.

ஏனென்று புரியவில்லை.

அதுபற்றி

வெளியில் சொல்லவும் முடியவில்லை.

 

எனது தாய் நாட்டு மண்ணில்

நான் ஏன் வாழமுடியாது?,

 

எனது உறவுகள் நிறைய செத்துப்போய் விட்டன,

மீதமாக இருப்பவர்கள்

ஒன்றாக ஒரு நாட்டில் இல்லை.

கணவன் ஒரு நாட்டில்

மனைவி மற்றொரு நாட்டில்

குழந்தைகள் வேறு கண்டத்தில்.

 

இதை பெரியவருக்கும் சிலர் தெரியப்படுத்தினர்

அவர்

தனது குடும்பமும் பல துருவங்களாகி

தீர்க்க முடியாத சிக்கல் இருப்பதாக

கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

 

பஞ்சாயத்து காரர்களை நம்பி ஏமாந்து போனோம்.

நான் எனது மண்ணில் வாழவேண்டும்.

ஏன் வாழ முடியாது?

 

அந்த உண்மை தெரிந்தாகும் வரை..

அறிந்தாகும் வரை..

அங்கு அமைதி நிலை

தோன்றும் என்று

அகதியாக

நாட்டுக்கு வெளியில் வசிக்கும் நான்

ஒருபோதும் நம்பவில்லை.

 

ஏனென்றால்

நான் ஒரு பொழுது

மவுனமாக இருந்துவிட்டாலே

அங்கு

அமைதி என்று கதை கட்டிவிடுவர்.

நான் சுதந்திரவாதியாக உணரும்வரை

நான் அமைதியாக இருக்க முடியாது.

 

என் தாய் மண் சுடுகாடாகி கிடக்கிறது.

எஞ்சிய உறவுகள் கழுகுகளின் கட்டுப்பாட்டில்

ஊசலாடுவதை ஊடகங்கள் சொல்லுகின்றன.

உள்ளம் எரிதனலாகி புழுக்கம் மிஞ்சிவிட்டது.

எமிஞ்சிய உறவினர்கள்

தினமும் மரணவதை படுவதை

எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்?

 

நான் சந்திப்பவர்களும்

எனது கருத்தை ஒத்தவர்களாகவே

இருக்கின்றனர்.

 

எங்களுக்கு

இது ஒரு மிகப் பெரிய பின்னடைவு,

இருந்தும் காலப்போக்கில்

கட்டாயம் நிமிர்த்தப்படும்

என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.

 

எங்கள் சுதந்திரத்திற்கான அத்திவாரமும்

திட்டங்களும்

மிக உறுதியாகவே போடப்பட்டிருந்தன.

அது எனக்கு நன்கு தெரியும்.

அந்த அனுமானங்கள் மட்டும்தான்

என்றைக்கும்

இலகுவானதாக எனக்குப் படுகிறது.

அதுபற்றி வேறு பலரும் அறிந்திருக்கக்கூடும்.

 

மற்றவர் வெளியில் சொல்லாவிட்டாலும்

எல்லோரும்

உள்ளூர நன்றாகவே அறிவர்.

 

என் தாய் மண்ணில்

நான் ஏன் வசிக்க முடியாது என்பதற்கான

மூல முகாந்திரம்

எனக்கு தெரிந்தாகவேண்டும்.

அதுவரை

நான் எதையும் எதற்காகவும்

சாதாரணமாக விட்டுவிட முடியாது.

 

எனது

தாய் மண்ணில் அமைதி பிறக்கும்வரை,

நான் மட்டுமல்ல

எனது சந்ததி

தூங்கிக்கிடக்குமென்று நான் நினைக்கவில்லை.

 

2009ல் பெருத்த இனப் படுகொலையுடன்

அனைத்தும் நிறைவுக்கு வந்தது என்றனர்.

இந்தியா

ஒரு இலட்சம் வீடு கட்டி கொடுக்க இருப்பதாக

செய்தி வந்தது

செய்தியை படித்த வழிப்போக்கன்

அடக்க முடியாமல் சிரித்தான்,

எனக்கு ஒன்றும் புரியவில்லை

ஏனென்று கேட்டேன்

இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு

வீடு இல்லை என்ற உண்மையை சொன்னான்.

 

இந்திய அரசியல் என்னை புல்லரிக்க வைத்தது.

 

நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.

அயலவர்கள்,  அடுத்த வீட்டுக்காரர்

பஞ்சாயத்து செய்து தீர்வு சொல்லுவார்கள்

என நம்பினேன்,

ஆனால் அவர்கள்

ஆயிரம் மேடை அமைத்து விசாரித்தபோதும்

எங்களில்

செத்துப்போனது எத்தனைபேர் என்பதுகூட

அவர்களால் அறிய முடியவில்லை.

 

எதையெல்லாமோ புலனாய்வு செய்து

தேடுவதாக சொன்னர்கள்,

ஒன்றையும் புடுங்கிவிடவில்லை.

அவர்கள்

எனது எரிந்த வீட்டினுள் கிடந்த

பூனையின்

மயிரை மட்டும் புடுங்கிக்கொண்டிருக்கின்றனர்

என்பதை அறிந்து வெறுத்துப்போனேன்.

 

கயிறு இறுகிக்கொண்டிருப்பதாகவே

நான் உணருகிறேன்.

காப்பாற்றும் நோக்கோடு எவரும் இல்லை.

எங்களுக்கான நேரமும் ஒன்று உண்டு.

அதனால்

அந்த மண்ணில் மீண்டும் அமைதியின்மை

ஏற்படலாம்.

அந்த அமைதியின்மை

கருக்கட்டாமல் செய்யவேண்டிய பொறுப்பு

என்னுடையதல்ல என்பதில்

என்றைக்கும் நான் உறுதியாகவே உள்ளேன்.

 

அமெரிக்க பூர்வீக குடிகள்போல,

அவுஸ்திரேலிய பழங்குடிகள்போல,

"பூமராங்" குடன் நான் விட்டேந்தியாக

இருந்திருந்தால்.

நாற்பது ஆண்டுகள்

என்னைப்பற்றி

எனது இனத்தின் அசைவுகள் பற்றி

எதுவும் வெளியில் தெரிந்திருக்காது.

 

அமெரிக்கா,

அவுஸ்திரேலியா

எப்படி வெள்ளையர்களின் சொந்த நாடு என

வரலாறு தெரியாதவர்களால்

நம்பப்படுவதுபோல,

இலங்கையும் சிங்களவனின் நாடு என்று

நம்பப்பட்டிருக்கும்.

பாரதியார்மீதும் எனக்கு வருத்தம் உண்டு.

 

சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,

என்று எதுகை மோனையுடன்

சிலாகித்துவிட்டு போய்விட்டார்.

சிங்களவன் நாளை

வரலாற்று சான்றாக அதை தூக்கிப்பிடிக்க கூடும்.

 

1948 களில் பிரித்தானியா செய்த தவறு

அது எனக்கும் தெரியும்.

பிரித்தானியாவுக்கும் தெரியும்.

ஏன்

இந்தியாவுக்கும் தெரியும்.

முழு உலகத்துக்கும் இப்போ தெரிகிறது.

 

நியாயம் என்பக்கம் இருக்கும்வரை

நான் எனது இருப்பிடத்திற்காக

மண்ணுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்.

அது எனது அடிப்படை உரிமை.

மறுப்பவர்கள்

எனக்கும் மனிதாபிமானத்துக்கும்

எதிரியாகிக்கொண்டே இருப்பர்.

 

நான் மவுனமாக கிடப்பதென்றால்

மரம் தடியாக பிறந்திருக்கவேண்டும்.

அடி வாங்கிக்கொண்டு வாழுவதாக இருந்தால்

நாயாக பிறந்திருக்கவேண்டும்.

நான் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்றால்

இந்தியாவில் பிறந்திருக்கவேண்டும்.

 

நான் மூடத்தனமாக மண்புழுவாக

இருந்தால்

சிங்களவனுக்கு நல்லது,

ஆனால்

எனக்கு அது நல்லதல்ல.

 

எங்கள் உரிமையை 1950 களில்

நாங்கள் அரசியல் ரீதியாக தேடியபோது

எதையும் தரமுடியாது என்றார்கள்.

வந்தேறியான சிங்களவர்கள்.

 

அவன் ஏன் இப்படி பேசுகிறான்

பின்னணி எதுவாக இருக்கும் என்று

பிரமித்துப்போனேன்.

அன்றைக்கும் இந்தியாதான்

பின்னுக்கு நின்றதோ என்று சந்தேகிக்கிறேன்.

 

ஜனநாயக வழியில் திரண்டபோது

பின்னால் அடித்தார்கள்.

யார் தடி எடுத்து கொடுத்தது என்பதை

நான் அப்போ கவனிக்கவில்லை.

 

காந்திய வழியில் போராடியபோது

வெட்டினார்கள்.

வீட்டை எரித்தார்கள்.

இனக்கலவரம் என்று பெயர் சூட்டி

அரசியல் செய்தனர்.

அப்போதான் எனக்குள் ரசாயினம் சுரந்தது.

 

ஆத்திரப்பட்போது

கொதிக்கும் தார் பீப்பாவுக்குள்

தூக்கி போட்டார்கள்.

அம்மாவுக்கும் அக்காவுக்கும்

சூட்டுக்கோல் காய்ச்சி

நெற்றியிலும் மார்பிலும் சிங்கள ஶ்ரீ சுட்டார்கள்.

பிறப்புறுப்பில் சிங்க கொடியை நாட்டினார்கள்.

 

அப்பாவும் மாமாவும் திமிறியபோது

அவர்களை

துப்பாக்கியால் சுட்டு கொன்று

தெருவில் ரயர் போட்டு கொளுத்தினார்கள்.

 

எங்களுக்கும் கோபம் வந்தது.

 

சிங்களவர்கள்

இந்தியா கலிங்கத்திலிருந்து

வந்திறங்கியதாக படித்திருக்கிறேன்.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவர்

காரியவாசாம்,

அந்த உண்மையை ஆதாரபூர்வமாக

இந்தியாவுக்கு

உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 

வந்தேறியான சிங்களவன்

முதலாளி மூர்க்கத்துடன் அடாவடி செய்கிறான்.

அப்படியானால்

நாங்கள் ஏன் எங்கள் பூர்வீக மண்ணுக்காக

துப்பாக்கி தூக்கக்கூடாது?

ஏன் சுதந்திரமாக வாழமுடியாது?

 

சேர்ந்து வாழும்படி

வம்படியாக வழக்குரைக்கின்றனர்.

 

அம்மாவின் மார்பில் குறி சுட்டான்.

அக்காவின் பிறப்புறுப்பில் கொடியேற்றினான்.

அப்பாவையும் மாமாவையும்

கொதிக்கும் தார் பீப்பாவுக்குள் தூக்கி போட்டான்.

தங்கையை கற்பழித்தான்.

அவனுடன் சேர்ந்து வாழுவது என்றால்

நான் எதுவாக கருதப்படுவேன்?

 

உரிமை இருக்கிறது என்பதால்

துப்பாக்கி தூக்கினோம்.

தற்காப்புக்காக

என்று சொல்ல வரவில்லை

எதிர்த்து போராடுவதற்காக

என்பது உண்மையே.

 

"மணலாறு"  "வெலி ஓயா" ஆக்கப்பட்டபோது

எனது கழுத்து அறுக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

எனது கல்வி தரப்படுத்தப்பட்டபோது

நான் முட்டளாக்கப்படுவதை உணர்ந்தேன்.

புத்தர் சிலைகளை

எனது முற்றத்தில் நாட்டியபோது

எனது கடவுளை கடலில் தேடினேன்.

வீடு பறிக்கப்பட்டபோது

அகதி ஆக்கப்பட்டதாக மனமார உணர்ந்தேன்.

 

மீண்டும் 2009ல் அம்மா,  அக்கா,  தங்கை

கற்பழிக்கப்பட்டபோதும்

எனது குழந்தைகளை கழுத்தறுத்து வீசிய பின்னும்,

சிங்களவனுடன் சேர்ந்து வாழும்படி

இந்தியா சொல்லுகிறது.

எனது வாழ்க்கையை தீர்மானிக்க

எனக்கு ஏன் உரிமையில்லை.

 

சிங்களவனைவிட

சிங்களவனுடன் சேர்ந்து வாழச்சொல்பவன்

எந்தளவுக்கு கொடியவன்.

 

நாங்கள் சிகிரியாவில்,

அனுரதபுரத்தில்,

மாத்தறை,  ஹம்பாந்தோட்டையில்

இடம் பிடிக்க அடாவடித்தனத்துடன்

நிலம் ஆக்கிரமிக்கவில்லை.

நாங்கள் வாழ்ந்த

வடக்கு கிழக்கு மண்ணில்

நிம்மதியாக வாழ விடுங்கள்

என்றுதான் கேட்டோம்.

இது எங்கள் மண்

இன்னும் கேட்போம்.

இனியும் கேட்போம்.

 

நாங்கள் தோற்றுப்போனதாகவே

காட்டப்படுகிறது.

நாங்கள் தோற்றுப்போனதாகவே

இப்போதைக்கு இருக்கட்டும்.

நாங்கள் வெல்லும்வரை

தோற்றுப்போனதாக நினைக்கப்போவதில்லை.

 

-ஊர்க்குருவி-

 
டாஸ்மாக் தமிழ் 3 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 26
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013 08:22

tas_boy_3

”ரஷ்யர்கள் தயாரிச்ச அணு உலை மட்டும் வேணாம்கறீங்க… அவங்க ஊர் வோட்கா மட்டும் வேணுமா ?  என்னண்ணே நியாயம் இது ?” என்று கேட்டபடியே கணேசனுக்கு ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து வைத்தான் தமிழ்.

”சரவணபவன் சாப்பாடு நல்லாருக்குன்றதுக்காக அந்த ஹோட்டல் ஓனர் பண்ற கொலையை ஏத்துக்க முடியுமா ?  என்னப்பா பேசற ? ” என்றபடியே வாஞ்சையோடு வோட்கா பாட்டிலை கையிலெடுத்தார் கணேசன்.

”என்னண்ணே இப்படி மடக்கிட்டீங்க ? ” என்று சிரித்துக் கொண்டே அமர்ந்தான் தமிழ். மொட்டை மாடியில் விரித்து வைத்திருந்த பெட்ஷீட்டில் அமர்ந்தான்.  ரத்னவேல் தன் மொபைலில் எஃப்எம் பாட்டு வைத்திருந்தான். “அவனுக்கென்ன தூங்கிவிட்டான்….. அகப்பட்டவன்… நானல்லவா ? ” என்று டிஎம்எஸ் பாடிக்கொண்டிருந்தார்.

”உண்மையிலேயே வசமா அகப்பட்டுட்டார்” என்றான் தமிழ்.

”யாரை சொல்ற மாமா ? ” என்றான் ரத்னவேல்.

”மருத்துவர் அய்யாதான்.. 12 நாள் ஜெயில் அவரை படாதபாடு படுத்திடுச்சி.. இன்னைக்கு ஜெயில்லேர்ந்து வெளியில வந்தப்போ அவர் முகத்தப் பாத்தியா.. வெயில் தாங்காம உடம்பே கன்னிப் போயிடுச்சு. ”

”அவர்தானே மச்சான் 'போடு வழக்க சந்திக்கறேன்னு' சொன்னார் ? ” என்றான் பீமராஜன்.

DSC_7525

”சொன்னாருதான்… இப்படியெல்லாம் நடக்கும்னு அவரு நெனைக்கலையே… தடையை மீறி கைதாவோம்.  தமிழ்நாடு பூரா வன்முறையை கட்டவிழ்த்து விடுவோம். அரசாங்கம் பயந்து போயி ரெண்டு நாள்ல விடுதலை பண்ணிடும்னு கணக்குப் போட்டார்.  ஆனா ஜெயலலிதாகிட்ட இதெல்லாம் நடக்குமா ? ”

”இப்போ என்ன ஆயிடுச்சுங்கிற ? ” என்றான் பீமராஜன்.

”மச்சான்.. டாக்டர் போட்ட கணக்கே வேற… தன்னோட கைது எண்பதுகளில் நடந்த வன்னியர் போராட்டம் மாதிரி ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். அந்த எழுச்சியைப் பார்த்து பயந்து போகும் இரண்டு திராவிடக் கட்சிகளும் நம்பகிட்ட கூட்டணி வைக்கச் சொல்லி கெஞ்சும். அதைப் பயன்படுத்திக்கிட்டு பழையபடி கிங்மேக்கர் ஆகலாம்னு நெனைச்சார். அதுக்காகத்தான், கூட இருந்தவங்க அறிவுரையெல்லாம் உதாசீனப்படுத்திட்டு, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ஆனா அம்மா டாக்டர் மேல கொலைவெறியில இருந்தாங்க.  கைதான பிறகு, ராமதாஸோட பினாமியா இருக்கற சுப்பராயலுன்ற நபர்கிட்ட, கைதான பிறகு தெனமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுற மாதிரி வன்முறைச் சம்பவங்கள் ஏற்படனும்னு சொல்லியருக்கார். சுப்பராயலு வெளி மாநிலங்கள்லேர்ந்தெல்லாம் ஆட்களை இறக்கி இரவு நேர பேருந்து பயணத்தையே ஆபத்தானதா செஞ்சார்.  இந்த விபரமெல்லாம் உளவுத்துறை மூலமா ஜெயலலிதாவுக்கு போனதும், அந்தம்மா கொலைவெறியாயிடுச்சு… பழைய கேசையெல்லாம் போடுங்கன்னு உத்தரவு போட்டதும்தான் 2004-ல் ரஜினி ரசிகர்களை அடிச்ச கேஸ்ல கைது பண்ணாங்க.

இதுக்கு நடுவுல சிறையில இருந்த ராமதாஸால வெயிலைத் தாங்க முடியல”

”அவர்தான் பாட்டாளி, விவசாயின்னு தன்னைப் பத்தி பெருமையா பேசிக்குவாரே மாமா ? ”

3325707760_6f4f340c91_b

”எந்த விவசாயி 80 லட்ச ரூபா கார்ல போறான்..  போடா நீ வேற….  24 மணி நேரமும் ஏ.சியில இருந்து பழக்கப்பட்ட டாக்டருக்கு கொளுத்துற வெயில்ல கட்டாந்தரையில படுக்க வெச்சா எப்படி இருக்கும் ? கதறிட்டார்.  அவருக்குன்னு ரெண்டு மின்விசிறி குடுத்தும், வெயில் தாங்க முடியலை.  அதனாலதான் திருச்சி ஜெயில்லேர்ந்து வெளியில வந்ததும், அடக்குமுறையை சந்திப்பேன்னு பேசுவார்னு பாத்தா, கட்டாந்தரையில் ஈரத்துண்டை போட்டு படுத்தேன்னு சொன்னார்.  ஜெயில்ல கட்டாந்தரையில படுக்க வைக்காம, இலவம்பஞ்சு மெத்தையா தருவாங்க”

”சரி இன்னும் கொஞ்ச நாள் டாக்டரை உள்ள வைப்பாங்கன்னு எதிர்ப்பார்த்தேன்.  ஆனா அதுக்குள்ள விட்டுட்டாங்க ? ” என்று கேட்டான் வடிவேலு.

”இன்னும் கொஞ்ச நாள் வச்சுருப்பாங்க.. ஆனா உளவுத்துறை மூலமா ராமதாஸோட உடல்நலத்தை விசாரிச்சதுல, வெயில் தாங்காம அவருக்கு ஏதாவது ஆயிடும்னு அறிக்கை குடுத்தாங்க.  அதுக்குப் பிறகுதான் விடுதலை கிடைச்சுது.  சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார் ராமதாஸ்.”

”அப்போ இனிமே எந்த நடவடிக்கையும் இருக்காதா ? ”

”யார் சொன்னது இருக்காதுன்னு ?  ராமதாஸோட அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க அரசுத் தரப்புல. ஒரு பக்கம் ராமதாசும், அன்புமணியும் வெளியில வந்தாலும், இன்னொரு பக்கம் பாமக நிர்வாகிகள் ஒவ்வொருத்தரா குண்டர் சட்டத்துலயும் தேசியப் பாதுகாப்பு சட்டத்துலயும் உள்ள போயிக்கிட்டே இருக்காங்க. கவனிச்சியா   இல்லையா ?

காடுவெட்டி குரு மேல எவ்வளவு வேகமா தேசியப்பாதுகாப்பு சட்டம் பாஞ்சதுன்னு பாத்தியா ? இதோட முடியப்போறதில்ல.   தமிழகத்தில் ராமதாஸ் கைதுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் அத்தனைக்கும் காரணம் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருன்னு காரணம் காட்டி, வன்னியர் சங்கத்துக்கும் அரசு தடை விதிக்கப் போகுது.  தடை விதிச்சா, அந்த சங்கத்தோடு சொத்துக்கள் முடக்கப்படும். வன்னியர் சங்க நிர்வாகிகள் முக்கியமானவங்க கைது செய்யப்படுவாங்க.  பாட்டாளி மக்கள் கட்சியோட பலமே வன்னியர் சங்கம்தான். வன்னியர் சங்கத்தை முடக்கினா ராமதாஸோட ப்யூசை பிடுங்கின மாதிரிதான். ”

முதல் ரவுண்டை ஊறுகாய் துணையோடு முடித்திருந்த கணேசன் ”தமிழு, தேர்தல்ல யாரு கூட கூட்டணி வைப்பார் மருத்துவர் ? ”

”கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் தேர்தல்ல திமுகவோடோ அதிமுகவோடோ கூட்டணி வைக்க மாட்டேன்னு வீராப்பா இன்னைக்கு பேட்டி குடுத்துருக்காரு.  ஆனா, திமுக பக்கம் போறதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. ”

”என்னப்பா சொல்ற ? திருமாவளவன் மாதிரி கருணாநிதிக்கு விசுவசமான அடிமை கிடைக்க மாட்டார்ன்ற அளவுக்கு கருணாநிதியோட அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் துணை போயிட்டு இருக்காரு.  இனி திருமாவளவனும், ராமதாஸும் ஒரு கூட்டணியில இருக்கவே முடியாதுன்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு.  அப்படி இருக்கறப்போ எப்படி திமுக கூட்டணியில ராமதாஸ் வருவார்ன்று சொல்ற ? ”

”திருமாவளவன் மேல கருணாநிதி ஏகத்துக்கும் கடுப்புல இருக்காருண்ணே..  ராமதாஸ் விஷயத்துல, ரெண்டு மூணு வாட்டி, ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை பாராட்டி திருமாவளவன் பேசுனதும், அறிக்கை விடறதும் தமிழினத் தலைவருக்கு சுத்தமா பிடிக்கல. இதனாலத்தான் திருமாவளவன் கூட்டுன சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டுக்கு பெரியார் திடலை குடுக்க வேணாம்னு வீரமணிக்கிட்ட சொல்லியிருக்கார்.  ஆனா கடைசி நேரத்துல மறுத்தா நல்லா இருக்காதுன்னு வீரமணி ஏதோ சாக்கு சொல்லி தவிர்த்துட்டார்.

17-08-12-_Thirumavalavan_Birthday-5_1

இந்த கோவத்துலதான், டெசோ அமைப்பு சார்பா கச்சத்தீவை மீட்பது தொடர்பா வழக்கு தொடுக்கறதா அறிவிக்கப்பட்ட முடிவை மீறி, தன் பெயர்லயே வழக்கு தொடுத்திருக்காரு.”

”இவ்வளவு அல்பமா இருக்காரேப்பா… !!! ”

”என்னண்ணே பண்றது.. ? இது அரசியல். எல்லாம் நடக்கும்.  திருமாவளவனும், அதிமுக பக்கம் போறதுன்ற முடிவுக்கு வந்துருக்கறதா சொல்றாங்க. அதிமுக தரப்புல 2 சீட் தர்றதுக்கு ஓ.கே சொல்லியிருக்காங்க போல இருக்கு. அதனால அவரும் அந்த மூட்லதான் இருக்காரு.”

”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில திருமா கூடவே கருணாநிதி தன்னோட ஏஜென்டை வச்சுருக்காரே… அவரு என்னப்பா   சொல்றாரு ? ”

”யாரு ரவிக்குமாரைத்தானே கேக்கறீங்க.. ? அவரு சமீப காலமா கலைஞர் முன்னைப் போல இல்ல… ரொம்ப மோசம்னு பேசிக்கிட்டு வர்றாரு…”

”என்ன ஆச்சு… திமுக ஆதரவு நிலைப்பாட்ல இருந்து மாறிட்டாரா ? ” என்று வியப்படைந்தார் கணேசன்.

”இல்லண்ணே கட்சிக்குள்ளலேய என்ன சந்தேகப்பட்றாங்கன்னா… இப்படிச் சொன்னா திருமா என்ன ரியாக்சன் குடுக்கறாருன்னு பாத்து, கருணாநிதிக்கிட்ட சொல்றதுக்காக இப்படி வார்த்தையை விடுவாரு. இவரு எப்பவுமே கலைஞர் விசுவாசின்னு சொல்றாங்க

அது மட்டுமில்லாம ஆளுங்கட்சியும் கவனமாத்தான் காய்களை நகர்த்துது. வன்னியர் ஓட்டுக்கள் பிரிஞ்சு போகும்ங்ற விஷயம் ஜெயலலிதாவுக்கு தெரியாம இல்ல.  இதனால ராமதாஸ் கிட்ட இருந்து பிரிஞ்சு வந்து தனிக் கட்சி ஆரம்பிச்சிருக்கிற வேல்முருகன்கிட்ட பேச்சுவார்த்தை தொடங்கிடுச்சு.

வேல்முருகன், இரட்டை இலை சின்னத்துல போட்டியிட்டா வன்னியர்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டாங்களா என்ன ?”

“ராமதாஸ் கதையை மொத்தமா முடிச்சுடுவாங்க போலருக்கே ? “ என்றான் வடிவேலு.

“அவர் கதை முடிஞ்ச கதை மச்சான். “

“ஆளுங்கட்சி நியூஸ் சொல்லு மச்சான்.. திமுக பத்தி எங்க பத்திரிக்கைக்கு கவலையே இல்ல.. ஆளுங்கட்சி பத்தி நியூஸ் இருந்தா குடு. “ என்றான் ஜானி ஜான் கான் சாலையில் வேலை பார்க்கும் ரத்னவேல்.

DSC_0030

“ஆளுங்கட்சியில செய்திக்கா பஞ்சம். ஆளுங்கட்சியில இருக்கறவங்க மேலயும் செய்தி போடறதுக்கு இப்படி யோசிக்கறீங்களே… சைதை துரைசாமி பத்தி எழுதுவீங்களா ?  எப்படியாவது முதல்வரை பாத்துடனும்னு முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் ரோட்ல பிச்சை எடுக்கற மாதிரியே போய் நிக்கறாரு.  மனு குடுக்கறவனுங்கதான் இப்படி நிக்கறாங்கன்னா, மேயரா இருந்துக்கிட்டு போய் நிக்கறாரு. போன வாரம் ஒரு நாள் அந்தம்மா வண்டிய நிறுத்தி “ஏன் இப்படி நிக்கறீங்க… போய் கார்ப்பரேஷன் வேலையப் பாருங்கன்னு சத்தம் போட்ருக்கு.  ஆனா இவரு ஊரு பூரா, அம்மா என்னை அன்பா விசாரிச்சாங்க. வேலையெல்லாம் எப்படிப் போகுதுன்னு கேட்டாங்கன்னு பொய் சொல்லிக்கிட்டு திரியறாரு.

இவரும் கலைராஜனும் சேந்து தியாகராய நகர் பகுதியில அனுமதி இல்லாம கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பது தொடர்பா உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவைத் தொடர்ந்து அங்க இருக்க கடை அதிபர்கள் கிட்ட 12 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்காங்க.  தி.நகர்ல ஆம்னி பஸ்களை அனுமதிச்சதுலையும் இந்த ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு.  இந்த நியூஸை போடுவீங்களா உங்க பத்திரிக்கையில ? “

“நான் எங்க, எடிட்டர்கிட்ட கேட்டுப் பாக்கறேன். “ என்று பம்மினான் ரத்னவேல்.

“மச்சான் இந்த நியூஸ் உங்க பத்திரிக்கையில வராது மச்சான். நான் சொல்றேன்.  ஏன்னா உங்க பத்திரிக்கை அலுவலக கட்டிடமே அனுமதி இல்லாம கட்டுனது.  போய் மீசைக்காரரை கேளு.  அனுமதி வாங்கிட்டு கட்டுனாரா இல்லையான்னு.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு அட்டையில போட்டுக்கறதோட சரி.  உங்க பவுசு தெரியாதா.  சும்மா இருடா “

“அவனை விடு. தலைமைச் செயலக செய்தி  இருக்கா ? “என்றான் பீமராஜன்.

“நான் வேலை செய்யறதே அதுக்குப் பக்கத்துல இருக்கற பார்லதானே.. அது இல்லாம இருக்குமா ? “ என்றவாறு கணேசனைப் பார்த்தான்.  அவர் க்வார்டர் வோட்காவை முடிக்கும் தருவாயில் இருந்தார்.

“இந்த வாரம் தலைமைச் செயலக அரசியல்வாதிகள் பத்தியும் செய்தி கிடையாது. தலைமைச் செயலக அதிகாரிகள் பத்தியும் செய்திகள் கிடையாது “

“வேற யாரைப்பத்திடா… ? “ என்று ஆர்வத்தோடு கேட்டான் பீமராஜன்.

“ரமேஷ்னு ஒருத்தரைப் பத்தி. அடிக்கடி நம்ப கஸ்டமருங்க இந்த ரமேஷ்ன்ற பேரை உச்சரிப்பாங்க.  சரி… யாராவது அதிகாரியா இருப்பாருன்னு நெனச்சுக்கிட்டு இருந்தா இவரு பத்திரிக்கையாளர். “

“பத்திரிக்கையாளரா ? “ என்று வியப்படைந்தான் பீமராஜன்.

“ஆமாம் மச்சான். அதுவும் சாதாரண பத்திரிக்கை இல்ல.  ஊர்ல இருக்கற அவ்வளவு பேரையும் குறை சொல்ற துக்ளக் பத்திக்கையில இருக்கறவர். அவரு பேரே துக்ளக் ரமேஷ். “

“என்ன பண்றாராம் அவரு… ? “

“என்ன பண்ணலைன்னு கேளு.  இந்த ரமேஷுக்கு வேலை என்னன்னா, ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் மந்திரிங்களோட சேர்ந்து வழியில நிக்க வேண்டியது. என்னைக்காவது ஒரு முறை அந்த அம்மா, இவரை பக்கத்துல கூப்புட்டு, என்ன ரமேஷ் எப்படி இருக்கீங்கன்னு கேப்பாங்க.  அவ்வளவுதான். இதைப் பயன்படுத்திக்கிட்டு இவர் நடத்தற வசூல் இருக்குதே… சொல்லி மாளாது.  அதிமுகலதான் என்னைக்கு யார் மந்திரின்றதே நிச்சயமில்லையா.  இந்த ஆளைப்பாத்து அப்படி பயப்படுவாங்க மந்திரிங்க.

911790_10151561774908911_1202467980_n

துக்ளக் ரமேஷ்

கண்ட நேரத்துக்கு மந்திரி அறைக்குள்ள நுழையறது, அங்க இருக்கற பி.ஏக்களை மிரட்றது, மந்திரிங்கக்கிட்ட சொல்லி வேண்டியவங்களுக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறது, ட்ரான்ஸ்பர் வாங்கிக் குடுத்துட்டு அதை வைச்சு வசூல் பண்றதுன்னு இவரு அட்டகாசம் தாங்க முடியலை.

இப்போ பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குதா..  எந்தெந்த துறையோட மானியக் கோரிக்கை வருதோ.. அந்தந்தத் துறையோட அமைச்சரைப் பாத்து 20 முதல் 50 ஆயிரம் வரை வசூல் பண்ணிக்கிட்டு இருக்காரு. அமைச்சருங்களும், இவரு முதல்வருக்கு நெருக்கமானவர்.. ஏதாவது போட்டுக் குடுத்துடுவாரோன்னு கேக்கறதை குடுக்கறாங்க.

இப்படி மாமூல் வசூல் பண்றது இல்லாம, விளம்பர ஏஜென்சி நடத்தற மாதிரி, பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் தர்ற உரிமையையும் இவரே யாரையும் கேக்காம எடுத்துக்கறாரு.  மந்திரிங்க நாளிதழ் விளம்பரம் கொடுக்கும்போது, இவரே அதை வாங்கி பத்திரிக்கைக்கு குடுத்து, கமிஷன் வாங்கிக்கறாரு.. “

“என்னப்பா இவ்வளவு கேவலமானவரா இருக்காரு.. ? “ என்றார் கடைசி ரவுண்டில் இருந்த கணேசன்.

“இது பரவாயில்லண்ணே… போன வாரம் காவல்துறை மானியக் கோரிக்கை நடந்துச்சு.  அப்போ சத்யாலயா ராமகிருஷ்ணன்னு ஒரு பத்திரிக்கையாளர் லாபியில உக்காந்திருந்தாரு.  அவரைப் பாத்த முதலமைச்சர் அவரை அழைச்சு எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களான்னு ஒரு 10 நிமிஷம் பேசியிருக்காங்க.  இது துக்ளக் ரமேஷுக்கு புடிக்கலை.  முதல்வர்கிட்ட பேசற ஒரே பத்திரிக்கையாளர் நம்பதான்.  இந்த ஆளு எப்படிப் பேசலாம்னு பொறாமையில… சட்டசபை செயலர்கிட்ட போயி, லாபியில எதுக்கு பத்திரிக்கையாளர்களை உக்கார அனுமதிக்கறீங்கன்னு புகார் சொல்லி, சபை நடந்துக்கிட்டு இருக்கும்போதே, அவைக் காவலர்களை விட்டு அழைச்சு அவரை வெளியேத்தியிருக்காரு.. “

“ஏம்பா… இவரோட பத்திரிக்கை ஆசிரியர் சோ… வாய் கிழிய பேசுவாரே… ஆனா இப்படிப்பட்ட ஊழல் பேர்விழியை வச்சுருக்காரே…. ? என்றார் கணேசன்.

“வாய் கிழிய பேசற சோவுக்கு ஏத்த ஜால்ராவா இருக்கறதாலதான் இந்த மாதிரி ஆளை அனுமதிச்சுக்கிட்டு இருக்காரு. ஆனா இவரை நம்பி பணம் குடுக்கறாங்க பார் மந்திரிங்க.. அவங்களைச் சொல்லணும்.“

“ராஜ்யசபா எம்.பி. பதவி நெறய்ய பேருக்கு முடிஞ்சுதே.. அடுத்து யாருக்கு அதிமுகவுல சீட் கிடைக்கும் ? “ என்று கேட்டுக் கொண்டே பீர் பாட்டிலை திறந்தான் வடிவேலு.

“அதிமுகவுல மைத்ரேயனுக்கு இரண்டாவது வாய்ப்பு உறுதி.  முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரும், இன்னொரு முன்னாள் டிஜிபி நட்ராஜும் எப்படியாவது ராஜ்ய சபா எம்.பி ஆயிடலாம்ன்ற கனவுல இருக்காங்க. ரெண்டு பேருமே, எனக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. “

“கெடைக்குமா என்ன ? “என்று தமிழைப் பார்த்து சந்தேகத்தோடு கேட்டான் வடிவேலு.

“ஆசைப்படுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா என்ன ? “ என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தான் தமிழ்.

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் பலத்த மாற்றங்கள் இருக்கும்.  பல தலைகள் உருளும்னு சொல்றாங்க.


அடுத்து காவல்துறை செய்திகள்.  உளவுத்துறையில இருக்கற நம்ப கஸ்டமர் பல தகவல்களை சொன்னார். சென்னை மாநகர உளவுத்துறை சரிவர மேற்பார்வை செய்யப்படறதில்லையாம். சென்னை நகரம் முழுக்க உளவுத்தகவல்களை சேகரிக்க வேண்டிய காவலர்களும் தலைமைக் காவலர்களும்,  ஃபீல்டுக்கே போறதில்லையாம்.  பெரும்பாலான தகவல்களை போன்லயே கேட்டு சொல்லிட்டு கமிஷனர் ஆபீஸே கதின்னு கெடக்கறாங்களாம்.  கமிஷனர் ஆபீஸ்ல வர்ற புகார்கள் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துல அவர்கள் தலையிட்டு வர்றாங்க.  இதையெல்லாம் மேற்பார்வை செய்ய வேண்டிய ஜார்ஜ், உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவை முழுமையா நம்பிக்கிட்டு இருக்காரு.  ஆனா, அவரு ஜார்ஜைப் பத்தியே உளவு பாத்து, ஜாங்கிட் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு.. “

“ஏம்பா… இவரு ஜார்ஜுக்கும், ஜாங்கிட்டுக்கும் ஆகாது. நமக்கு நம்பிக்கையான ஆளுன்னுதானே ஜார்ஜ், வரதராஜுவை திருநெல்வேலியில இருந்து கொண்டு வந்தார் ?  நீ என்ன தலைகீழா சொல்ற ? “

Varadaraju_IPS

“கொண்டு வந்தார்தான்.  ஆனா, வரதராஜுவுக்கு ஜாங்கிட்கிட்ட இருக்கற விசுவாசம் இன்னும் அப்படியே இருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப நாள் புறநகர்ல வேல பாத்துருக்காங்கள்ல ?

“ஆமா எப்போ பாத்தாலும் ஜாங்கிட் பத்தியே தகவல் சொல்றியே… ஏன் உன் கஸ்டமருக்கு மத்த அதிகாரிங்களப் பத்தி தெரியாதா ? “என்றான் பீமராஜன்.

“கஸ்டமர் எல்லாத்தைப் பத்தியும்தான் சொல்றாரு.. ஆனா இவரைப் பத்தி எழுதத்தான் எந்த பத்திரிக்கையும் தயாரா இல்லையே.. அதனாலத்தான் நீங்களாவது எழுதுவீங்கன்னு உங்கக்கிட்ட சொல்றேன். ஜாங்கிட்டைப் பத்தி எந்தத் தகவலும் எந்தப் பத்திரிக்கையிலும் வரமாட்டேங்குதே…

இப்போ பாருங்க போன வாரம், மு.க.ஸ்டாலின், ஜாங்கிட்டை சந்திச்சு பேசியிருக்காரு. “

“அவரு எதுக்குடா ஜாங்கிட்டை சந்திக்கிறாரு.. ? “

“அவரும் ஜாங்கிட்டும் எவ்வளவு நெருக்கம்னு வெளி உலகத்துக்கு தெரியாது.  ஸ்டாலினோட பினாமி ராஜா சங்கரும், ஜாங்கிட்டும் ரொம்ப ரொம்ப நெருக்கம்.  ஜாங்கிட்டோட ஏராளமான பணம் ராஜா சங்கர் மூலமா வெளிநாடுகள்லயும், இங்கயே ராஜா சங்கரோட தொழில்கள்ளயும்  முதலீடு செய்யப்பட்டிருக்கு. எப்படி அந்த தொடர்பு விட்டுப் போகும் ? “

“பிசினெஸ் பார்ட்னர்ஸ்னு சொல்லு.  சரி இப்போ எதுக்கு சந்திச்சாங்க ? “

“ஸ்டாலின் ஜாங்கிட்கிட்ட, தன்னோட பையன் பேர்ல இருக்கற கார் இறக்குமதி வழக்கிலேர்ந்து எப்படியாவது உதயநிதியை காப்பாத்தனும்னு சொல்லியிருக்காரு. ஜாங்கிட்டும், ஒண்ணும் கவலைப் படாதீங்க. சிபிஐயில சென்னையிலயும், டெல்லியிலயும் எனக்கு நெறய்ய அதிகாரிகளைத் தெரியும்.  என்னை மீறி ஒன்னும் நடக்காது.  உங்க வழக்கறிஞர் இது சம்பந்தமா கோர்ட்ல ஏதாவது பேப்பர் தாக்கல் பண்றதுக்கு முன்னாடி, என்னை கன்சல்ட் பண்ணச் சொல்லுங்க. சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரும் எனக்கு நல்லா பழக்கம்னு  சொல்லியிருக்காரு. “

DSC_4709_1

“சிபிஐயில இவரு சொன்னா கேப்பாங்களா என்ன ? “

“ஏம்ப்பா.. அப்படி சொல்லிக்க வேண்டியதுதான்.. சிபிஐயில வேலை பாக்கற அதிகாரிங்க இவருக்கு ஜுனியர் அதிகாரிங்க.  காலையில பத்து மணிக்கு போயி பாத்துட்டு, ஒரு பத்து நிமிஷம் மொக்கை போட்டுட்டு, வெளியில வந்து, ஸ்டாலினுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் பேசிட்டேன். ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு சொன்னா ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? “

“அப்புறம்.. அடுத்து “ என்று கேட்டு விட்டு காலி பாட்டிலை பார்த்தார் கணேசன்.

“என்னண்ணே…. சரக்கு பத்தலையா.. ? “

“ஆமாம்பா.. ஒரு ஹாஃப் வாங்கிட்டு வந்துருக்கலாம்… சப்புனு இருக்கு “ என்று அலுத்துக் கொண்டார்.

“இருங்க வர்றேன்  “ என்று சொல்லி விட்டு மொட்டை மாடியில் இருந்து இறங்கிய தமிழ் சிறிது நேரத்தில் இன்னொரு க்வார்டர் ரமானோவோடு வந்தான்.

“சூப்பர்பா நீ…. ரொம்ப நன்றிப்பா “ என்றவாறு வாஞ்சையோடு ஒரு குழந்தையை வாங்குவது போல அதை வாங்கி மடியில் வைத்துக் கொண்ட கணேசன், சரி அடுத்த மேட்டருக்கு வாப்பா “ என்றார்.

“ராமஜெயம் கொலை வழக்கை தமிழக அரசே, சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடப்போகுதாம்ணே… சிபி.சிஐடிக்கு மாத்தி ஒரு வருஷமா எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால, முதல்வருக்கு, திமுகவிலயே உள்ளவங்க போலீசோட சேந்து இந்த வழக்கை ஒழுங்கா விசாரிக்க விடாம தடுக்கறாங்கன்னு நெனைக்கறாங்க. அதனால அந்த வழக்கை சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடலாமான்ற யோசனையில இருக்காங்க

இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கையாள்வதில உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும், டிஜிபி ராமானுஜத்துக்கும் முட்டிக்கொண்டு இருக்கறதாவும் சொன்னாரு நம்ப ஆளு. “

“அவ்வளவுதானா போலீஸ் நியூஸ் “ என்னறான் பீமராஜன்.

“சேஷசாய் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையரா இருந்தப்போ பல வழக்குகள்ல வசூல் வேட்டை நடத்தியிருக்காரு.  ஆனா சொன்னபடி அவரால பல விஷயங்களை செஞ்சு குடுக்க முடியலை.  அவருக்கிட்ட பணம் குடுத்து ஏமாந்தவங்க அவரை இப்போ தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் “

“திமுக செய்தி ? “ என்றான் ரத்தினவேல்.

“கருணாநிதி ஆ.ராசாவைக் கூப்பிட்டு, உடன்பிறப்பே… கொஞ்ச நாளைக்கு மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் விமர்சிக்கறதை நிறுத்தி வையி… தயாளு அம்மாள் சாட்சி சொல்ல வரவேண்டியதில்லைன்னு போட்ட மனுவில சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு குடுக்கற வரைக்கும் வாயைத் தொறக்காத உடன்பிறப்பேன்னு சொல்லியிருக்காரு. “

“உன் வக்கீல் கஸ்டமர் வந்தாரா ? “ என்று தமிழ் வாயைப் பார்த்தான் வடிவேலு.

“வந்தாரு வந்தாரு.. நீதிபதிகள் தேர்வு பத்திதான் ரொம்ப பரபரப்பா வழக்கறிஞர்கள் மத்தியில விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு.”

”அதான் போன வாரமே யார் யாரெல்லாம் நீதிபதிகளாகப் போறாங்கன்னு சொன்னியே.. அதுல ஏதாவது மாற்றம் இருக்கா ? ”

”அந்த லிஸ்ட்ல மாற்றம் இல்ல. ஆனா அந்த லிஸ்ட்ல இருக்கற ஆளுங்க பத்திதான் ஒவ்வொரு செய்தியா கசிஞ்சுக்கிட்டு இருக்கு.

முனிருத்தீன் ஷெரீஃப் னு ஒருத்தர் பேரு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. அவருக்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளோட நெருக்கமான தொடர்பு இருக்குனு சொல்றாங்க.  சவுதி அரேபியாவுல இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்னு ஒரு வங்கி இருக்கு. அந்த வங்கி சவுதியில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால நடத்தப்பட்ற வங்கி. அந்த வங்கியோட தென்னிந்தியாவோட உறுப்பினரா இருக்கார்.  இந்திய தேசிய லீக் கட்சியில நிர்வாகியா இருக்கறார். முஸ்லீம்கள்ல பல பேர், இந்திய சட்டத்தை ஏத்துக்காம இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படிதான் நடக்கனும்னு சொல்றாங்க. ஷரியத் சட்டத்தின்படி, சென்னையிலேயே ஷரியத் நீதிமன்றங்கள் ரகசியமா நடந்துக்கிட்டு இருக்கு. சென்னை அண்ணா சாலையில புகாரி ஹோட்டல் எதிரில் இப்படி ஒரு ஷரியத் கோர்ட் நடக்கறது வழக்கம். இந்த நீதிமன்றம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ல நடக்கும். அந்த ஷரியத் கோர்ட்ல இந்த முனிருத்தீன் ஷெரிப் உறுப்பினரா இருக்கார்.  தமிழ்நாடு முஸ்லீம் சர்வீசஸ் அமைப்புன்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பும் ஒரு அடிப்படைவாத அமைப்புதான்.  இந்த அமைப்போட பொதுச் செயலாளராவும் இருக்கார் முனிர் ஷெரிப்.

இந்திய ஜனநாயக முஸ்லீம் கட்சின்னு ஒரு கட்சியை அக்ரம் கான்னு ஒரு நபர் நடத்திக்கிட்டு இருக்கார். அந்த அக்ரம் கான் சென்னை நகரத்துல கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் எல்லாம் பண்றவர்.  இவர் மேல கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில இருக்கு.  இந்த அக்ரம் கானோட கட்சியிலயும் முனிர் ஷெரிப் உறுப்பினரா இருந்துருக்கார். இதைத் தவிர்த்து இன்னும் பல தகவல்களை மத்திய உளவுத்துறை இவரைப் பத்தி சேகரிச்சிருக்கு.  அதனால இவர் நீதிபதியாகறது சந்தேகம்தான்னு சொல்றாங்க.”

”மீதி பேரெல்லாம் ஓக்கேவா தமிழ் ? ” என்றான் பீமராஜன்.

”இருக்கற பேர்லயே சிறந்தவர் தங்கசிவம் தான்”

”ஏன் அவர் நல்ல வக்கீலா ? ”

”ஆமா.. நல்ல வக்கீல்தான்.  மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்குகள்ல மட்டும்தான் ஆஜராவார். அவருக்கு முழு நேரத் தொழிலே ரியல் எஸ்டேட்தான். கிழக்குக் கடற்கரைச் சாலையில நீச்சல் குளத்தோடு கூடிய ஒரு பங்களா வெச்சுருக்கார். அந்த பங்களாவுல, முக்கிய பிரமுகர்களை கவனிக்கறதுதான் இவரோட வேலை. ”

”ஏம்பா… இதை விட நீதிபதியாகறதுக்கு வேற என்ன தகுதி   வேணும் ? ”

”அட கம்முனு இருங்கண்ணே. கிண்டல் பண்ணிக்கிட்டு. பல நீதிபதிகளுக்கு இவர் ப்ரோக்கராவும் செயல்பட்டிருக்கார்னு தகவல் சொல்றாங்க. இந்த தங்கசிவத்தோடு நெருங்கிய நண்பர், சைதாப்பேட்டையில் இருக்கறார் அவர் பேசு கிருஷ்ணன். அவர் நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்தவரு. இந்த கிருஷ்ணன், சைதை துரைசாமியோட ஆளு.  சைதை துரைசாமியோட நல்லவங்க சகவாசம் வைக்க முடியுமா ?”

”இப்படிப்பட்ட நபரை எதுக்காக பரிந்துரை பண்ணாங்க.. யார் பரிந்துரை பண்ணாங்க ? ”

”தலைமை நீதிபதி கூட இப்போ முதல் டிவிஷன் பென்ச்ல இருக்கற நீதிபதி பால் வசந்தகுமார்தான் இவரை பரிந்துரை பண்ணியிருக்கார். இதுல கொடுமை என்னன்னா, பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள்லயே இவர்தான் சின்ன வயசு 46 வயசு.  வழக்கமா சென்னை உயர்நீதிமன்றத்துல 50 வயசுக்கு முன்னாடி யாரையும் நீதிபதியாக்கற வழக்கம் கிடையாது. ஆனா இவர் 46 வயசுலயே பரிந்துரை செய்யப்பட்டிருக்கார். இப்போ நீதிபதியானா நிச்சயமா உச்சநீதிமன்ற நீதிபதியாவார்.”

”நீதிபதி பால் வசந்தகுமார் நல்ல நீதிபதியாச்சே.. அவர் எதுக்காக இப்படிப்பட்ட ஒரு நபரை பரிந்துரை பண்றார் ? ”

DSC_0044

நீதிபதி பால் வசந்த குமார்.

”என்னண்ணே புரியாத மாதிரி கேக்கறீங்க… ?  தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது இல்லையா ? உயர்நீதிமன்றத்துல கேலக்சின்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பு நாடார்களுக்கான அமைப்பு.  நாடார் சமூகத்தைச் சேர்ந்தவங்க அத்தனை பேரோட நலன்களையும் இந்த அமைப்பு கவனிச்சுக்கும்.  நீதிபதி பால் வசந்தகுமாரும் கேலக்சி மெம்பர். தங்கசிவமும் கேலக்சி மெம்பர். ”

”இதுக்காகவா தங்கசிவத்தை நீதிபதியாக்கனும் ? ”

”தங்கசிவம் எப்படிப்பட்ட நபர்னு சென்னை உயர்நீதிமன்றம் முழுக்க தெரியும்.  இந்த விஷயம் நீதிபதி பால் வசந்தகுமாருக்கு மட்டும் தெரியாமப் போயிடுமா என்ன ?  உயர்நீதிமன்றத்துல பேசிக்கிற விஷயம் என்னன்னா, நீதிபதி பால் வசந்தகுமாரோட மகள் மருத்துவக் கல்லூரியில படிக்கிது. பல்கலைக்கழகம் கொண்டு வந்த திருத்தங்களின்படி, நீதிபதியோட மகள் உரிய மதிப்பெண்களைப் பெறலை. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்துல அந்தப் பெண்ணும், வேறு சில மாணவர்களும் வழக்கு தொடர்ந்தாங்க.  அந்த வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியத்தக்கிட்ட வந்துருக்கணும். ஆனா, அந்த வழக்கு நிதிபதி ஜோதிமணிக்கிட்ட விசாரணைக்கு வர்ற மாதிரி ஏற்பாட பண்ணதா சொல்றாங்க. ”

”அவரும் நீதிபதிதானே… அவர் விசாரிச்சா என்ன ? ”

”நீதிபதி ஜோதிமணியும் கேலக்சி உறுப்பினர். அதுதான் அதுல சிறப்பு. அது மட்டுமில்ல. அந்த வழக்குல, நீதிபதி பால் வசந்த குமாரின் மகளுக்கு தங்கசிவம்தான் வழக்கறிஞர். ”

”சரி.. இதையெல்லாம் உளவுத்துறை விசாரிக்காதா ?  இதையெல்லாம் விசாரிச்ச உளவுத்துறை அதிகாரிங்க பேசிக்கிட்ட விஷயத்தைக் கேட்டுட்டுத்தானேண்ணே உங்ககிட்ட சொன்னேன். நான் பார்ல வேலை செய்யறேன். எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? ”

”தம்பி.. எனக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சு.. நான் போகட்டுமா.. ? ”என்றார் கணேசன்.

”வாங்கண்ணே எல்லாருமே போலாம்… ரொம்ப லேட்டாயிடுச்சு…” என்று அனைவரும் உறங்கச் சென்றனர்.

 
நேர்மையே உன் விலை என்ன? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 47
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 11 மே 2013 08:45

gold-ETFs

அரசுப் பணியில் அதிகாரிகளாக சேரும் தொடக்க காலத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானோர் சேர்கிறார்கள்.  சேரும்போதே பல கோடிகளை ஆட்டையைப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு சேர்பவர்கள்  விதிவிலக்குகள்.  ஆனால் அரசு இயந்திரம் என்ற அமைப்பு உங்களை நேர்மையற்றவர்களாகவும், ஊழல் பேர்விழிகளாகவும் மாற்றும் வல்லமை படைத்தது.  அரசு இயந்திரம் என்ற அமைப்பு வழங்கும் வசதிகளும், வாய்ப்புகளும் மிக மிக அதிகமான போதை தரக்கூடியன.  தண்ணீருக்குள் நீந்தும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அது போல அரசு ஊழியன் எப்போது பணம் திருடுகிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறது அர்த்தசாஸ்திரம்.

அது போல எந்தச் சிக்கல்களிலும் சிக்காமல் ஒரு அரசு அதிகாரி கோடிகளைக் குவிக்கும் சூழலே இன்று நிலவுகிறது.  நேர்மையான அதிகாரியைப் பார்த்து இந்த சமூகம் சிரிக்கிறது. எள்ளி நகையாடுகிறது.  “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டத்தைக் கட்டுகிறது.  திருட்டு வழியில் கோடிகளைக் குவித்து சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளுக்கு “திறமைசாலி” என்று அங்கீகாரம் வழங்குகிறது.  இப்படி இருக்கையில் எதற்காக ஒரு அதிகாரி நேர்மையாக இருக்க வேண்டும் ? ஒரு அதிகாரி நேர்மையாக வாழ்ந்து அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவன் குடும்பத்தினர் கூட ஒத்துழைக்க மாட்டார்கள்.  பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என்று யாருமே நேர்மையானவர்களை விரும்புவதில்லை.  “இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்து என்ன பிரயோஜனம்… இதக் கூட செஞ்சு தர முடியாதா ?” என்று அலுத்துக் கொள்வார்கள்.  உறவினர்கள் கேட்கிறார்களே என்று, பெற்றோர் கேட்கிறார்களே என்று, மனைவி கேட்கிறாளே என்று, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்று மெல்ல மெல்ல ஊழல் சுழலில் சிக்கி சீரழியும் அதிகாரிகள் இங்கே ஏராளம். எப்போது ஊழல் பேர்விழியாக மாறினோம் என்பதே தெரியாமல் ஊழல்வாதிகளாக மாறி அருட்பெருஞ்சோதியில் கலந்து விடும் அதிகாரிகளே அதிகம்.

முடியாது நான் நேர்மையாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிது. அந்த அதிகாரிகள் சந்திக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.  பணியாற்றும் துறையில் உள்ள அத்தனைபேரும் வெறுப்பார்கள்.  “இவனும் திங்க மாட்றான்… மத்தவனையும் திங்க விடமாட்றான்… பெரிய மகாத்மா காந்தின்னு இவனுக்கு மனசுல நெனைப்பு..” என்று உங்களோடு பணியாற்றுபவர்களும், உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களும் நேர்மையான அதிகாரியைத் தூற்றுவார்கள். வெறுப்பார்கள்.  இவ்வளவு சிரமத்துக்கு இடையே ஒரு அதிகாரி எதற்காகத்தான் நேர்மையாக இருக்க வேண்டும் ?  மனம்போன போக்கில் உலகத்தோடு ஒட்டி ஒழுகிச் செல்லலாம் என்று ஏன் முடிவெடுக்கக் கூடாது ?

ஆனால் அரிதிலும், அரிதான சில அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை.  நான் இப்படித்தான் இருப்பேன்.. நான் பிழைக்கத் தெரியாதவனாகவோ, ஏமாந்தவனாகவோ, உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாமல், பல கற்றும் கல்லாதவனாகவோ இருந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படிப்பட்ட அதிகாரிகளே, இந்த தளம் நடத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உந்துதலாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அதிகாரியைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

தியாகராஜன்.  சென்னைதான் அவருக்கு சொந்த ஊர்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார். பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து விட்டு, சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் பொருளாதாரமும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் படிக்கிறார்.

1974ம் ஆண்டு ஜுன் மாதத்தில் MMTC (Metals and Minerals Trading Corporation) என்று அழைக்கப்படும் உலோகம் மற்றும் கனிம வர்த்தக நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக சேர்கிறார். 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்எம்டிசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை கவனித்துக் கொள்ளும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது.  1991 வரை, இந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்கான ஏகபோகமாகவே செயல்பட்டு வந்தது. 1991ல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை செயற்பாட்டுக்கு வந்தபிறகு, இந்நிறுவனத்தின் பணிகள் குறைகின்றன.  1991க்கு முன்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பேலன்ஸ் ஷீட்டும் எம்எம்டிசி நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் ஏறக்குறைய சரிசமமாக இருந்த அளவுக்கு இந்நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.

இந்த நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், நிறுவனத்தோடு சேர்ந்து தானும் வளர்கிறார்.  தனது கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக எம்எம்டிசி நிறுவனத்தில் பதவி உயர்வு பெறுகிறார்.  . 1984ம் ஆண்டு இளநிலை உதவியாளராக இருந்தவர் அதிகாரியாக பதவி உயர்வு பெறுகிறார். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் உருவாகிறார்.  எம்எம்டிசி அதிகாரிகள் சங்கத்தில் அகில இந்தியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்

1997ம் ஆண்டு எஸ்.என்.மாலிக் என்பவர் எம்எம்டிசி நிறுவனம் 400 கோடி நஷ்டத்தை சந்திப்பதற்கு காரணமாக இருந்தார்.  அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது.  இந்த முடிவை எதிர்த்து அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த தியாகராஜன், அகில இந்திய அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, கருப்பு தினம் அனுசரித்து மாலிக்குக்கு கிடைக்கவிருந்த பணி நீட்டிப்பை தடுத்து நிறுத்தினார்.

தற்போது ரயில்வே போர்டு உறுப்பினர் பதவி பெறுவதற்காக 10 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று, 90 லட்சம் முன்பணமாக கொடுத்து சிக்கிய விவகாரம், முக்கியப் பதவிக்கான நியமனங்களில் நடைபெறும் பேரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் காலம் காலமாக இந்த நியமனங்கள் பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தின்படியே நடந்து வந்துள்ளது.  எம்எம்டிசி நிறுவனத்தின் நியமனங்களும் கோடிக்கணக்கான பணம் மற்றும் செல்வாக்கு அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. எந்தப் பதவியில் யார் இருந்தால் வளைந்து கொடுப்பார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே முக்கியப் பதவிகளுக்கு நியமனங்கள் நடைபெறுகின்றன.

தற்போது ஊழலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்து வரும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான் ஊழல் புகாருக்கு ஆளாகியிருந்த எஸ்.டி.கபூர் என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார் அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.  இந்த பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு மத்திய கண்காணிப்பு ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து ஈராக் நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.  கோதுமைக்கு பதிலாக கச்சா எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம்.  எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கோதுமை ஏற்றுமதி செய்கிறேன் என்று ஒரு நபர் வருகிறார்.  அந்த நபரை அனுப்பியது, அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன். டெல்லியில் விவசாய எம்.எம்.டிசியின் விவசாய விளைபொருட்கள் துறையின் பொது மேலாளராக இருந்த தியாகராஜன், இந்த ஏற்றுமதியால் எம்.எம்.டி.சி நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் வரப்போவதில்லை. ஆகையால் தேவையற்ற முறையில் நாம் இந்த ஏற்றுமதியில் ஈடுபடவேண்டாம் என்று கூறுகிறார்.  அவர் ஆலோசனைப்படி, எம்எம்டிசி நிறுவனம் அந்த ஏற்றுமதியில் ஈடுபடவில்லை.  பின்னாளில் Food For Oil Scam என்று ஐக்கிய நாடுகள் சபை நியமித்த பால் வோல்க்கர் கமிட்டியின் அறிக்கையில் எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயர் இல்லாமல் தவிர்க்கப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட முடிவால்தான்.

எண்பதுகளின் இடையில் எம்எம்டிசி நிறுவனம் தங்க இறக்குமதியில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்குகிறது.   பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், பல கோடிகளை இந்நிறுவனம் எளிதாக முதலீடு செய்ய இயலும் என்பதால், மிக எளிதாகவே தனக்கென்று ஒரு சந்தையை அமைத்துக் கொள்கிறது எம்.எம்.டிசி நிறுவனம்.  எம்.எம்.டிசி நிறுவனத்திலேயே தங்க இறக்குமதி தொடர்பான பதவிக்கு எப்பொழுதுமே போட்டி அதிகம்.

files.php_

சென்னையில் பொது மேலாளராக தியாகராஜன் பணியாற்றியபோது அவருக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் குருசாமி.  தியாகராஜன் அங்கே பொதுமேலாளராக இருந்ததால், தங்கம் தொடர்பான வேலைகள் அவரிடம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக எம்.எம்.டிசியின் பெல்லாரி அலுவலகத்தில் பொதுமேலாளராக இருந்த ராமச்சந்திரன் என்பவரை சென்னைக்கு மாற்றி அவரை தங்கம் தொடர்பான பணிகளைக் கவனிக்கும் பொது மேலாளராக நியமிக்கிறார் குருசாமி.  ராமச்சந்திரனின் நியமனமே தன்னை தங்கம் தொடர்பான பொறுப்புகளைக் கவனிக்க விடாமல் தடுக்க வேண்டுமே என்பதற்காகத்தான் என்பது தியாகராஜனுக்குத் தெரிந்தாலும், அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.  30 ஜுலை 2008 அன்று பணி ஓய்வு பெற்றதும், அது வரை சென்னை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீண்டும் பெங்களுருக்கே அனுப்பப்படுகிறார்.  ஓய்வு பெற்ற குருசாமி, சுரானா கார்ப்பரேஷன் என்ற மார்வாடியின் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.    இதன் பின்னணியில் இருந்த சதித்திட்டம் எதுவும் அப்போது தியாகராஜனுக்கு தெரிந்திருக்கவில்லை.

Untitled-1_1

பதவி உயர்வில் தியாகராஜன், கொல்கத்தா எம்எம்டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவியின் பொறுப்பேற்கலாம் என்று காத்திருந்தால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அதிகாரி விடுவிக்கப்படாமல் அந்தப் பதவியிலேயே தொடர்கிறார்.  ஏன் தாமதம் பொறுப்பை ஒப்படையுங்கள் என்று கேட்டால், டெல்லியிருந்து உத்தரவு வரவில்லை என்று காத்திருப்புக்கு காரணம் சொல்கிறார்.  தியாகராஜனும் காத்திருக்கிறார்.  ஒரு மாதம், இரண்டு மாதம் என்று ஐந்து மாதங்கள் கடந்து விடுகின்றன.  பொறுமை இழந்த தியாகராஜன் எம்.எம்.டிசி நிறுவனத்தின் சேர்மேனுக்கு தகவல் சொல்கிறார். ஐந்து மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறேன். எனக்கு என்னதான் வேலை என்று சொல்லுங்கள் என்கிறார். உடனடியாக பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, தலைமை அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

புதிதாக பொறுப்பேற்ற தியாகராஜன், எம்.எம்.டிசி நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட முடிவு செய்து, கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்எம்டிசி கிடங்கைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி தனக்குக் கீழ் உள்ள அதிகாரியைப் பணிக்கிறார்.  துறைமுகத்துக்குள் நுழைந்து கிடங்குகளைப் பார்வையிடுவதென்றால் துறைமுக அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.  இரண்டு நாட்களாகின்றன, மூன்று நாட்களாகின்றன. தியாகராஜனுக்கு கிடங்குகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.  என்னவென்று தனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் விசாரித்தால் ஏதோ சாக்கு போக்கு சொல்கிறார்.  நாளைக்குள் துறைமுக அனுமதிச் சீட்டு வரவில்லையென்றால், இதற்குப் பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கடுமையாகச் சொன்னதும், மறுநாள் அனுமதி கிடைக்கிறது.

கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்.எம்.டிசி கிடங்கைப் பார்வையிடச் சென்ற தியாகராஜனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் கிடங்கில், இருப்பில் இருக்க வேண்டிய ஒரு லட்சம் டன் வாசனைப் பொருட்கள் / தானியங்கள் (Pulses) இல்லை.  அந்த சரக்கின் மொத்த மதிப்பு 120 கோடி.  கிடங்கைப் பார்வையிட்ட தியாகராஜன், உடனடியாக  தலைமை அலுவலகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்புகிறார்.  தலைமை அலுவலகம் அதிர்ச்சிக்குள்ளாகி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது.   அந்தச் சரக்குகளுக்கு உரிய தொகையை செலுத்த வேண்டிய இரண்டு சப்ளையர்கள், உடனடியாக 120 கோடியை எம்.எம்.டிசிக்கு செலுத்துகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன், சென்னை எம்.எம்.டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார்.  எந்த சென்னை அலுவலகத்தில் இவர் தங்கம் தொடர்பான வேலைகளைக் கவனிக்கக் கூடாது என்று ஒதுக்கப்பட்டாரோ, அந்த நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்களுக்கும் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜுலை 2011ல் சென்னை அலுவலகத்துக்குப் பொறுப்பேற்றதும் அவருக்கு ஒரு அனாமதேய கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில் தங்க வியாபாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக தனக்குக் கீழ் பணியாற்றும் நிதிப் பொது மேலாளரை அழைத்த தியாகராஜன், என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார்.  விசாரித்தால் 116 கோடி ரூபாய் வெளிநாட்டு தங்க சப்ளையருக்கு முன்தொகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.  116 கோடி ரூபாய் முன்பணமாக எப்படிக் கொடுக்க முடியும்… தலைமை அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் கொடுப்பதற்கு விதிகளிலேயே இடமில்லாதபோது, எப்படி இது நடந்தது என்று வியப்படைந்த தியாகராஜன், தனது நிதி பொது மேலாளரிடம் ஒரு மாதத்துக்குள் எங்கே தவறு, என்ன தவறு என்பதை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கடந்தால் நான் நேரடியாக விசாரிக்கத் தொடங்குவேன் என்று கடுமையாகக் கூறுகிறார்.  ஒரு மாதம் கடந்தும் எந்த விபரமும் அவருக்கு வழங்கப்படாததால், நேரடியாக விசாரணையைத் தொடங்குகிறார்.

விசாரணையைத் தொடங்கினால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலிருக்கிறது.  எம்.எம்.டி.சி நிறுவனத்தோடு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் சிவ் சஹாய் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இரண்டும், எம்எம்டிசி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு இருந்த தலைமைப் பொது மேலாளர் குருசாமியின் ஒத்துழைப்போடு, எம்.எம்.டிசியின் நிதியைப் பயன்படுத்தி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி சூதாடி, லாபம் ஈட்டலாம் என்று திட்டமிட்டதும், ரூபாயின் மதிப்பு திடீரென்று உயர்ந்ததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதும், இந்த நஷ்டத்தை யார் ஏற்பது என்று சிவ் சஹாய் மற்றும் சுரானா நிறுவனங்கள் தவிர்த்ததும் இரண்டு நிறுவனத்திடமும், இத்தொகையை வசூலிக்காமல், எம்.எம்.டிசிக்கு நஷ்ட கணக்கு எழுதப்பட்டிருப்பதையும் தியாகராஜன் கண்டுபிடிக்கிறார்.

Untitled-2_1

தில்லி தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுதுகிறார். இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த General Manager (Bullion) விசாரித்து விட்டு எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அறிக்கை அளிக்கிறார். மீண்டும் ஒரு General Manager (Audit) வருகிறார்.  அவரும் ஆல் ஈஸ் வெல் என்கிறார்.  அவரையடுத்து வந்த General Manager (Bullion Accounts) கணக்கு வழக்குகள் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கின்றன என்கிறார்.   இந்த நேரத்தில்தான், எம்.எம்.டி.சி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபிக்கு அனுப்பவேண்டி வருகிறது.  அதை அனுப்பவேண்டிய எம்.எம்.டி.சியின் ஆடிட்டர், இந்த ஊழல் குறித்தும் செபிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்.

இதற்கிடையே, ஊழல் தொடர்பாக மேலும் சில ஆதாரங்களை கண்டறிந்த தியாகராஜன், 2 ஜனவரி 2012 அன்று மீண்டும் ஒரு அறிக்கையை புதுதில்லிக்கு அனுப்புகிறார்.  இந்த இரண்டாவது அறிக்கைக்குப் பிறகே தலைமை அலுவலகம், இது குறித்து விசாரிப்பதற்கென்று வெங்கட்ரங்கா என்ற பிரத்யேகமான ஒரு ஆடிட்டரை அனுப்புகிறது.  ஆடிட்டரின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, சிபிஐ வழக்கு பதிவு செய்து புலனாய்வை தொடங்குகிறது.

Untitled-4

GM-Gurumurthy

கைது செய்யப்பட்ட குருமூர்த்தி

இந்த வழக்கு குறித்தும் இதில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம் குறித்தும் சவுக்கில்  “ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினிஷிங் ?” மற்றும் சுரானாஸ் கோல்ட் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் யார் தெரியுமா ? எம்.எம்.டிசி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமைப் பொது மேலாளர் தியாகராஜன்தான்.

IMG_0001111

IMG_0003

IMG_0002

இவர் சமீபத்தில் 39 வருட அரசுப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெறும் நாள் அன்று, இவர் அறை வாசலில், பழைய பிய்ந்த செருப்புகள் இருந்தன.  யாருடைய செருப்புகள் இவை என்று விசாரித்தால், அந்த அலுவலகத்தின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் (Sweeper) அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருக்கின்றனர் என்று கூறினார்கள்.   சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எதற்காக ஒரு தலைமைப் பொதுமேலாளரை வாழ்த்த நேரில் வரவேண்டும் என்று விசாரித்தால், 10 வருடங்களுக்கு முன், துணைப் பொது மேலாளராக சென்னை அலுவலகத்தில் தியாகராஜன் பணியாற்றியபோது, எம்.எம்.டி.சியின் அனைத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கும், காலை முதல் அவர்கள் அலுவலகம் விட்டு செல்லும் வரை, கேன்டீனில் அனைத்தும் இலவசம் என்று உத்தரவிட்டார். எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பதவி உயர்வு வரும், ஏராளமான சம்பளம் வாங்குகிறேன்.   ஆனால் 30 ஆண்டுகளாக பெருக்குவதையும் சுத்தம் செய்வதையும் தவிர இவர்களுக்கு எந்த பதவி உயர்வும் கிடையாது.  இவர்களிடம் சுத்திகரிப்புப் பணியைத் தவிர்த்து, தபால் எடுத்துச் செல்வது, வங்கிக்குச் செல்வது என்று ஏராளமான வேலைகளை அலுவலகத்தில் வாங்குகிறார்கள்.  இவர்களுக்கு என்னால் வழங்க முடிந்த குறைந்தபட்ச சலுகை இதுதான் என்றார்.

இப்படி ஏழை உழைப்பாளி மக்களுக்கு சலுகை வழங்கிய அதே தியாகராஜன்தான், விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து, ஒரு நாள் உணவுக்காக எம்.எம்.டிசியின் கணக்கில் 1500 ரூபாயை கணக்கெழுதும் அதிகாரிகளின் கொள்ளையை தடுத்து நிறுத்தினார்.  ஒரு நாளைக்கு சாப்பிடுவதற்கு 1500 ரூபாய் எப்படி ஆகும் என்று அதற்கு தடை விதித்தார்.  இதேபோல தனியார் டாக்சிகளை வாடகைக்கு எம்.எம்.டி.சி பணிக்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்ற விதியைப் பயன்படுத்தி சொந்த வேலைக்காகவும், குடும்பத்தினர் ஊர் சுற்றுவதற்காகவும் டாக்சிக்களை அமர்த்தி, அந்தத் தொகையை எம்.எம்.டிசியிடம் இருந்து திரும்பப் பெறும் வழக்கத்தையும் ஒழித்துக் கட்டினார்.

நிறைவாகத்தான் பணியாற்றியிருக்கிறார்.  இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு குறைந்தது ஒரு சிறப்பான விழா நடத்தி, அவரை வாழ்த்தி ?? அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா ?   செய்யவில்லை.

என்ன நடந்தது தெரியுமா ?  ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் இவர் பணியில் குறைபாடு இருந்தது என்ற காரணத்தினால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.  என்ன குற்றம் புரிந்தார் என்றால், நிதிப் பரிவர்த்தனைகளை சரி வர மேற்பார்வை செய்யவில்லை என்பதே அது.

நிதிப்பரிவத்தனைகள் சரியாக நடக்கவில்லை என்பதை கண்டுபிடித்ததே இவர்தானே….  இவர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில்தானே இன்று சிபிஐ விசாரணை நடந்து வருகிறது ? இவர் புகாரில்தானே சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது ? அப்படி இருக்கையில் நிதிப் பரிவர்த்தனைகளை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்பது எந்த விதத்தில் நியாயமாகும் ?  இவருக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் யாரை சாட்சியாக போட்டிருக்கிறார்கள் தெரியுமா ? சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருக்கும் முன்னாள் எம்.எம்.டிசி அதிகாரிகள் குருசாமி மற்றும் குருமூர்த்தி.  சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால், சிபிஐயிடம் இருந்து தியாகராஜனை ஓய்வு பெற அனுமதிக்கலாமா, நடைபெற்று வரும் விசாரணையில் தியாகராஜன் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்று தலைமை அலுவலகத்தில் கேட்கிறார்கள்.  சிபிஐ தனது அறிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே அனுப்பி, தியாகராஜன் மீது எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை என்று அறிக்கை அளிக்கிறது.  இதற்குப் பிறகும் துறை நடவடிக்கை என்றால் ?

சரி என்னதான் நடந்திருக்கும்… ஓய்வு பெறும் நாள் அன்று துறை நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை என்ன ?  அதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?

இந்த இடத்தில்தான் 400 கிலோ தங்கத்தைப் பறிகொடுத்த சுரானா நிறுவனம் வருகிறது.  நல்லா ஸ்மூததா போயிக்கிட்டிருந்த பிசினெஸ்ஸை இந்த ஆள் கெடுத்து விட்டார்.  இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பார்த்து மற்ற அதிகாரிகளும் கெட்டுப்போய், அவர்களும் நேர்மையாக நடந்து கொள்ளத் தொடங்கினால், நாட்டுக்கே கேடு,, இது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்பதால், தியாகராஜன் போன்ற அதிகாரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்…. தியாகராஜனின் மீதான நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவரை எப்படியாவது சிக்கலில் இழுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.  எம்.எம்.டி.சியின் தலைவர், அந்தத் துறையின் கண்காணிப்பு அதிகாரியிடம், தியாகராஜன் மீது துறை நடவடிக்கை எடுக்க அறிக்கை அளிக்கும்படி கேட்கிறார்.  அவர், சிபிஐ இவர் மீது நடவடிக்கை எடுக்க அதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளித்துள்ள நிலையில், விசாரணை நடத்தாமல் என்னால் எந்த அறிக்கையும் வழங்க இயலாது. மேலும் நாளை ஓய்வு பெற உள்ளவருக்கு எதிராக இப்போது அறிக்கை அளிக்க இயலாது என்று கூறி விடுகிறார்.

வேறு வழியின்றி, கண்காணிப்பு அதிகாரியின் அறிக்கை ஏதுமில்லாமல், சிபிஐ-ன் அறிக்கை ஏதுமில்லாமல், எந்தவிதமான உருப்படியான  விசாரணையும் நடத்தாமல், தான்தோன்றித் தனமான ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை வழங்கியிருக்கிறார் எம்.எம்.டிசி தலைவர்.  இந்த நடவடிக்கை வரிஏய்ப்பு செய்து, ஊழல் அதிகாரிகளை வளர்த்தெடுக்கும் ஒரு மார்வாடியின் செல்வாக்கால் என்பது எத்தனை வேதனையான விஷயம் ?

ஓய்வு பெற்ற அன்று எம்.எம்.டி.சி தலைவர் தேசி-க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார் தியாகராஜன்.

அன்பார்ந்த திரு தேசி…

இந்த நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்து 38 வருடங்கள், 9 மாதங்கள் சேவை செய்த பிறகு இன்று மதியம் ஓய்வு பெறுகிறேன். எனது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்துக்காக எப்படி எனது வேர்வையையும், ரத்தத்தையும் அளித்து உழைத்திருக்கிறேன் என்பது இந்நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும்.  நீங்கள் நேற்று அனுப்பிய அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு மொட்டையான குற்றப்பத்திரிக்கையை நேற்று வேதனையோடு பெற்றேன். என்னிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணைக்கு நான் அனுப்பிய விளக்கம் 13 மாதங்களாக உங்களிடம் உறங்கிக் கொண்டு இருக்கிறது.  நீங்கள் நினைத்திருந்தால், அந்த விசாரணையை எப்போதோ முடித்திருக்கலாம். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறை சென்று, இன்று ஜாமீனில் உலவிக்கொண்டிருக்கும் நபர்களை என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாகப் போட்டிருக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது.  இதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிறுவனம் தொடர்பான வழக்குகளுக்கான ஆவணங்களை சேகரிப்பதற்காக 44 நபர்களை நியமித்து, அவர்கள் இரவு பகலாக, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தொழிற்சாலை ஊழியர்கள் போல பணியாற்றி வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல.  இப்படி பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்று மிரட்டி வருகிறீர்கள்.  உங்களின் இந்த நடவடிக்கைகள் ஊழல் பேர்விழிகளின் நலனுக்காகவேயன்றி, இந்நிறுவனத்தின் நலனுக்கானது அல்ல.

நீங்களும் ஒரு நாள் ஓய்வு பெறுவீர்கள் தேசி அவர்களே.  கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.  சத்தியமே வெல்லும்.

அன்புடன்

தியாகராஜன்.

DSC_0978

தியாகராஜன்

இதுதான் நேர்மைக்கு கொடுக்கும் விலை.

தனக்கு வரவேண்டிய ஓய்வு காலப் பணப்பயன்கள் தியாகராஜனுக்கு நிறுத்தப்பட்டிருக்கலாம்.  பிழைக்கத் தெரியாத மனிதன் என்று அவர் சக தோழர்கள் அவரை எள்ளி நகையாடலாம்.  நண்பர்கள் இகழலாம்.   இவரைப்போன்ற நபர்களைப் பற்றித்தான் அய்யன் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

 
டாஸ்மாக் தமிழ் 2 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 129
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 07 மே 2013 01:20

 “எல்லோருக்கும் வணக்கம்“ என்றபடியே உள்ளே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் தமிழ்.

tas_boy_1

“வணக்கம் தமிழ் உக்காருப்பா. நம்ப ஐட்டம் கொண்டு வந்தியா“ என்றார் கணேசன்.

“இந்தாங்கண்ணே“ என்று ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து அளித்தான்.

“சரக்கெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல நியூஸை சொல்லுய்யா.. நாளைக்கு இஷ்யூ டேட்“ என்று கோபப்பட்டான் வடிவேலு.

“இரு மாமா… இப்போத்தானே வந்துருக்கேன்.. “ என்று கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான் தமிழ்.

“டேய்… கடுப்பக் கௌப்பாதடா“ என்றான் பீமராஜன்….

“கூல் கைஸ்… லெஸ் டென்ஷன் மோர் நியூஸ்…“ என்று விட்டு தொடங்கினான். தமிழ்.

“மொதல்ல திமுக நியூஸ்தான்.   கழக உடன்பிறப்பு ஒருத்தர் வந்து கலைஞரோட திறமையை அப்படியே சிலாகிச்சு பேசுனாரு. “

“அவர் பன்திறன் வித்தகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.. எந்தத் திறமையை சிலாகிச்சு பேசுனாரு“ என்றான் ரத்னவேல்.

“அவர் குடும்பத்தை காப்பாத்தற திறமையைப் பத்தித்தான்.   கனிமொழியை எப்படி கவனமா காப்பாத்துனாரு பாத்தியான்னு பெருமை பட்டார். எப்படி காப்பாத்துனாருன்னு கேட்டேன். விலாவரியா சொன்னார்.   சினியுக் பிலிம்ஸ் நிறுவனம்தான் ஷாஹீத் பல்வாவோட பினாமி கம்பெனி.  அந்தக் கம்பெனிக்கிட்ட இருந்துதான் 200 கோடியை கலைஞர் டிவிக்காக லஞ்சமா கனிமொழி பெற்றார்னு சிபிஐ வழக்கு.  போன வாரம் இந்த வழக்குல சாட்சி சொன்ன கலைஞர் டிவியோட பொது மேலாளர் ராஜேந்திரன் கனிமொழி 20.06.2007 அன்னைக்கே ராஜினாமா பண்ணிட்டார். ஆனா 200 கோடி சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கிட்ட வாங்கணும்னு எடுத்த முடிவு 13.02.2009 அன்னைக்கு நடந்த கலைஞர் டிவி போர்டு மீட்டிங்ல எடுக்கப்பட்டது. அந்த மீட்டிங்ல கலந்துகிட்டது தயாளு அம்மாளும், சரத் குமாரும்தான்.  கனிமொழி ராஜினாமா பண்ணதுக்குப் பிறகு கலைஞர் டிவி ப்ரோக்ராம்ஸ் கூட பாக்கறது கெடையாதுன்ற ரேஞ்சுக்கு சாட்சி சொல்லியிருக்கார். 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங் மினிட்ஸ்ல தயாளு அம்மாதான் கையெழுத்து போட்ருக்காங்கன்னும் சொல்லிருக்காரு“

001_1

“இதுல என்னய்யா சாமர்த்தியம் இருக்கு ?  பொண்ணுக்கு பதிலா பொண்டாட்டி மாட்டப்போவுது“ என்றார் கணேசன்.

“கொஞ்சம் பொருண்ணே….   கனிமொழி இந்த வழக்குல குற்றவாளி.  ஆனா தயாளு அம்மா சாட்சி.  கனிமொழி மேல ஆதாரங்கள் இல்லாத காரணத்தால அவர் மீதான வழக்குலேர்ந்து விடுதலை வாங்கிடுவாங்க.  அதே நேரத்துல தயாளு அம்மா இந்த வழக்குல சாட்சி கூட சொல்லப்போறது இல்ல.  அவங்களுக்கு ஞாபக மறதியை உருவாக்குர அல்ஸைமெர்ஸ் வியாதி இருக்குன்னு டெல்லியில மனு தாக்கல் பண்ணிடுவாங்க.  இதுக்கு சிபிஐயும் சப்போர்ட் பண்ணும்.  மொத்த குடும்பத்தையும் காப்பாத்தியாச்சா.. இது சாமர்த்தியம் இல்லையா ? “

“ஏம்பா… அப்போ ராஜா கதி ? “  என்றான் வடிவேலு.

“என்ன மாமா நீ…. கருணாநிதி குடும்பத்தை விட்டுக் குடுத்ததா வரலாறே கிடையாதே… குடும்பம்னு வர்றப்போ… ராசாவவது.. ராணியாவது…  கனிமொழி ஜாமீன் மனு விசாரணையப்போ ஜெத்மலானி என்ன ஆர்க்யூ பண்ணார்னு மறந்துட்டியா ?  எல்லாத்தையும் பண்ணது ராஜாதான்னு ஆர்க்யூ பண்ணாரே ஞாபகம் இல்லையா… ? “ என்று விட்டு அடுத்த செய்திக்குத் தாவினான்.

“ஜெயா டிவியில மன்னார்குடி மாபியாவின் பிரதிநிதியா இருந்தவங்க பேரு அனுராதா.  டிசம்பர் 2011ல மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்ட பிறகு, அனுராதாவும் வெளில போயிட்டாங்க.  அதுக்குப் பிறகு மன்னார்குடியோட கட்டுப்பாடு ஜெயா டிவியில சுத்தமா இல்லை. அனுராதா வெளில போன பிறகுதான் செக்ல கையெழுத்து போட்ற பொறுப்பு ஜெயலலிதாவோட செயலாளரா இருக்கற பூங்குன்றன்கிட்ட வந்தது. போன வாரம், திடீர்னு பூங்குன்றனுக்கு இருந்த அதிகாரத்தை பறிச்சுட்டு அந்த அதிகாரம் சசிகலாவுக்கு குடுத்துருக்காங்க.“

“இப்போ ஏம்பா இந்த மாற்றம் ? “

“அண்ணே… சசிகலாவோட கை மீண்டும் ஓங்குதுன்றதத்தான் இது காட்டுது. மீண்டும் சின்னம்மாவின் ஆட்சி…“

“ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில எப்பவுமே ஒரு நிலையில்லாத பதற்றம் இருக்கும்.  அதிமுகல யார் பதவியில இருக்காங்க… யார் அதிகாரத்தோட இருக்காங்கன்றது யாருக்குமே தெரியாது.. அதே மாதிரிதான் ஜெயா டிவியிலயும்.  அதுவா ஒரு போக்குல போயிக்கிட்டு இருக்கும்.  கே.பி.சுனிலோட அதிகாரத்தையெல்லாம் பறிச்ச பிறகு, ரபி பெர்னார்டை தலைமை அதிகாரியா போட்டாங்க… ரபி பெர்நார்ட் வந்த பிறகு எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு.. ரபி பெர்நார்ட், நேமாலஜி… கோமாலஜி, ரியல் எஸ்டேட் இந்த ப்ரோக்ராமையெல்லாம் ஜெயா ப்ளஸ்லேர்ந்து நிறுத்தனும்னு முடிவு எடுத்துருக்காராம்..

5834PNov-09-c-BIG

இப்போ ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில பரபரப்பு பேச்சு என்னன்னா… 300 பேரை ஆட்குறைப்பு பண்ணணும்னு ஜெயலலிதா முடிவெடுத்துருக்கறதா பேசிக்கிட்டு இருக்காங்க..

ஜெயலலிதா நிச்சயமா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்க..  ஜெயா டிவியில வந்த லாபம்னு கொடுத்த பணத்தை அப்படியே சேனல்ல முதலீடு பண்ணுங்கன்னு சொன்னவங்க.. எப்படி ஆட்குறைப்பு நடவடிக்கையில எறங்குவாங்க… யாரோ இந்த மாதிரி செய்தியை ஜெயா டிவி முழுக்க பரப்பியிருக்கறதா சொல்றாங்க…“

“காங்கிரஸ் நியூஸ் இல்லையா மாப்ளை ? “ என்றான் ரத்னவேல்..

“ஏன் இல்லாம… காங்கிரஸ் கதைதான் ஊர் பூரா நாறுதே.. பவன் குமார் பன்ஸால் அமைச்சரோட தலையை காவு வாங்காமல் விடமாட்டேன்னு பிஜேபி ஒத்தக் கால்ல நிக்குது…  ஆனா காங்கிரஸ் எரும மாட்டு மேல மழ பெஞ்சமாதிரியே இருக்குது… எந்த அமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டாங்கன்னு உறுதியா சொல்லிட்டாங்க“

“எப்படி மாமா ராஜினாமா செய்வாங்க..  முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு ? “ என்றான் பீமராஜன்.

“நீ சொன்ன மாதிரி எருமை மாடு மாதிரியே ஆயிட்டாங்க மாமா…. வாசனோட வலது கரம் யுவராஜாவை காலி பண்ண மாதிரி, சிதம்பரத்தோட வலது கரத்தையும் காலி பண்ண வேலை நடக்குது மாமா“ என்று நிறுத்தினான் தமிழ்.

“அவருக்கு யாருப்பா ரைட் ஹேன்ட் ? “ என்று கேட்டுக் கொண்டே அடுத்த ரவுன்ட் வோட்காவை எடுத்து வாயில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு, ஊறுகாயை ஒரு விரலில் எடுத்து சுவைத்தார் கணேசன்.8-2-2010-11-pc-leads-cong-effort-to-woo-ba

“செல்வப்பெருந்தகை அண்ணே…  யுவராஜாவை மட்டும் சஸ்பெண்ட் பண்ணீங்கள்ல…. செல்வப்பெருந்தகை யோக்கியதையைப் பாருங்கன்னு, செல்வப் பெருந்தகையோட பழைய வரலாறை எடுத்து ராகுல்கிட்ட புகாரா அனுப்பியிருக்காங்களாம். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்குல செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருக்குன்னு விரிவா ஒரு அறிக்கையை அனுப்பியிருக்காங்க… ராகுல் காந்தியும் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை வைச்சு, இதை விசாரிக்கிறாராம்…“

 

“காங்கிரஸ் கட்சியில இதெல்லாம் நடக்காம இருந்தாத்தானே ஆச்சர்யம்“ என்றான் வடிவேலு.

“ஆமாம்டா.. அது காங்கிரஸ் கட்சியில் கலாச்சாரம் அல்லவா ? “ என்று விட்டு தொடர்ந்தான் தமிழ்.

“டாக்டர் ராமதாஸை போட்டு ஜெயலலிதா பொரட்டி எடுக்கறதுக்கு ரெண்டு காரணம் சொல்றாங்க.  சித்திரை முழு நிலவு விழா நடந்த அன்னைக்கு ஜெயலலிதாவோட கார் சிறுதாவூர் போயிருக்கு.  அப்படிப் போகும்போது, குடி போதையில இருந்த பாமக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவைப் பாத்து ஆபாச சைகை காமிச்சுருக்காங்க… இது ஒரு  காரணம். ரெண்டாவது காரணம், அந்த அம்மாவோட கான்வாய்ல கடைசி வாகனம் ஒரு 20 வினாடி தாமதமா வந்துருக்கு. அந்த வாகனத்தை வழி மறிச்ச பாமக தொண்டர்கள், கொடி கம்பத்தை எடுத்து அந்த வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியிருக்காங்க. ஏற்கனவே கான்வாயை விட்டுட்டதால அந்த வாகனத்துல இருந்த போலீஸ் காரங்க கௌம்பிப் போயி உளவுத்துறைக்கு தகவல் சொல்லியிருக்காங்க..  இது சி.எம். கவனத்துக்கு போனதும்தான் வேகமான நடவடிக்கைகள்னு சொல்றாங்க..“

“அந்த ஆளுக்கு வேணும்டா இதெல்லாம். “ என்றான் ரத்னவேல்.

“ராமதாஸோட சிக்கல் என்னன்னா…. எந்த அரசியல் கட்சியும் அந்த ஆளு கௌப்பி விடுற ஜாதிப் பிரச்சனையை விரும்பல…  எந்த அரசியல் கட்சியும் இதை விரும்பாததாலத்தான் அவர் எடுத்த முடிவுக்கு பெரிய அளவுல ஆதரவு இல்ல… இப்போ ராமதாஸ் எடத்தை புடிக்கறதுக்கு பி.டி அரசக்குமார்னு ஒருத்தர் கௌம்பியிருக்காரு.. “

“அது யாருடா அது புது டிக்கெட்டு ? “

“இந்த ஆளோட பழைய பேரு பி.டி.குமார்.  அரசக்குமார்னு பேரு மாத்துனா சி.எம் ஆயிடுவன்னு யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னு மாத்திக்கிட்டாரு.  அந்த ஆளு ஒன்னாம் நம்பர் ஃப்ராடு. அந்த ஆளுக்கு வேலையே கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன்..  லோன் வாங்கித் தர்றேன்னு ஏமாத்தறதுதான். 2001ம் வருஷம் ஜனவரி மாசம்.. தேனாம்பேட்டையில இருக்கற ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு போறாரு பி.டி.குமார்.  அந்த வருஷம் நடந்த தேர்தல்ல கருணாநிதி வெறும் ஜாதிக் கட்சியோட மட்டும் கூட்டணி வைச்சாரு.  அப்போ பி.டி.குமார் தீவுத்திடல்ல ஒரு ஊர்வலம் நடத்திட்டு, நானும் பெரிய தலைவர்னு காமிச்சுக்கிட்டாரு..  ரேமன்ட்ஸ் கடையில 60 ஆயிரத்துக்கு துணி எடுத்தாரு.  எடுத்துட்டு 10 ஆயிரம் கொடுத்துட்டு, கொஞ்சம் துணியை கையில எடுத்துட்டு, மீதித் துணியை அதே கடையில இருக்கற டைலரிங் செக்சன்ல குடுத்து அளவு குடுத்துட்டு போயிட்டாரு.

DSC_0052

ஒரு வாரம் கழிச்சு துணி ரெடியாயிடுச்சுன்னு போன் பண்ணிச் சொன்னா, ஆபீஸ்ல வந்து வச்சுடுங்கன்னு சொன்னாரு.  ஆபீஸ்க்கு போனா, அண்ணன் வெளியில போயிருக்காரு… வச்சுட்டுப் போகச் சொல்றாருன்னு சொன்னாங்க.  அதோட எப்போ போன் பண்ணாலும், அண்ணன் வெளியில போயிருக்காருன்னு ஏமாத்தறதே வேலையாப் போச்சு.

அந்த கடையோட ஒனர் ஒரு மார்வாடி.  நேரா ஒரு நாள் சொல்லாம கொள்ளாம பி.டி.குமார் ஆபீஸ்கே போயிட்டாரு… போனதும் குமார்கிட்ட பணத்தை கேட்டாரு-

உடனே குமாரு, டேபிள்ல ரெண்டு மூணு பத்திரிக்கையை எடுத்து போட்டாரு… பாத்தீங்களா… நான் பத்திரிக்கை நடத்தறேன்…  உங்க கடையில வரி சரியா கட்டறதில்லன்னு தகவல் வந்துருக்கு… நான் அதப்பத்தி எழுதப்போறேன்னு சொன்னார்.. உடனே மார்வாடிக்கு பயம் வந்துடுச்சு.. 50 ஆயிரம் போன போயிட்டுப் போகுதுன்னு அப்படியே கௌம்பிட்டார்.

இப்படிப்பட்ட ஃப்ராடுதான் இந்த பி.டி.குமார்.   இவரு இப்போ ராமதாஸ்க்கு ஆதரவா அனைத்து சமுதாயக் கூட்டமைப்புன்னு தொடங்கி ப்ரெஸ் மீட்டுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு… இந்தத் தகவல் அறிஞ்ச உளவுத்துறை, இவர் மேல இதுக்கு முன்னாடி இருக்கற மோசடிப் புகார்களையெல்லாம் தேடி எடுத்துக்கிட்டு இருக்காங்க…. வாலை ஆட்டுனார்னா ஒட்ட கட் பண்ணிட்றதுன்ற முடிவுல இருக்காங்க.. “

“காவல்துறை செய்தி என்னப்பா ? “ என்றார் கணேசன்… அப்போது மூன்றாவது ரவுன்டில் இருந்தார்.

“இந்த வாரமும் ஜாங்கிட் பத்திதாண்ணே….  தன் மேல அரசு போட்டுருக்கற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை எப்படியாவது ஊத்தி மூடணும்னு ரொம்ப மெனக்கிட்றார்….“

“ஆமாப்பா தினமணில கூட மீசை முனுசாமி அண்ணாச்சி இது பத்தி செய்தி போட்ருந்தாரு… ஆமா அதுல மூன்றெழுத்து ஜா அதிகாரி, நான்கெழுத்து ஜா அதிகாரி, ஐந்தெழுத்து ஜா அதிகாரின்னு போட்ருந்துச்சே… யாருப்பா அது“

“மூன்றெழுத்து ஜா அதிகாரி ஜார்ஜ்.  நான்கெழுத்து ஜா அதிகாரி ஜாங்கிட். ஐந்தெழுத்து அதிகாரி ஜாபர் சேட்.  ஜாங்கிட்தான் போன வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையில இருக்கற உயர் அதிகாரியைப் போய் சந்திச்சுருக்காரு.   தன் மீதான புகார்களெல்லாம் பொய்ப்புகார்.  அதனால விசாரணையில தனக்கு உதவி செய்யணும்னு சொல்லியிருக்கார்…. இவரு நேராப்போனது இல்லாம, நேர்மையான அதிகாரியா அறியப்பட்ற இன்னொரு அதிகாரியும், ஜாங்கிட்டுக்காக ரெக்கமண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்.. “

“அது யாருப்பா அது ? “

“டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால்.. இவரு ரொம்ப நல்ல அதிகாரி… ஆனா ஜாங்கிட்டுக்காக பரிஞ்சு பேசறார். பாவம் ஹெல்ப் பண்ணுங்கன்னு லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் வெங்கட்ராமன்கிட்ட   பேசியிருக்காராம்.. “

Jangid_SR

“ஜாங்கிட் போட்ட மணப்பாக்கம் லே அவுட்ல வீட்டு மனை வாங்கியிருக்காரு… அது மட்டுமில்லாம ஜாங்கிட்டுக்கு பக்கத்து வீடு… அப்புறம் பேச மாட்டாரா ? “

“கண்டிப்பா பேசுவார். நம்ப ஏற்கனவே பேசிக்கிட்டு இருந்த மாதிரி 1979 பேட்ச் அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்.பி பதவி உயர்வு கெடைக்கிற மாதிரி தெரியலை.  பதவி உயர்வு வராததுக்கு டிஜிபி ராமானுஜம்தான் காரணமா யார் காரணம்னே புரியாம பொலம்பிக்கிட்டு இருக்காங்க. அவங்க நெலைமைதான் இப்படின்னா, 2009 பேட்ச் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளும் பதவி உயர்வு வராமல் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க.. “

“நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனைபா “ என்றார் கணேசன்.

“அண்ணே அவங்களோட அப்பாயின்ட் ஆனவங்கள்லாம் மத்த மாநிலத்துல ரெண்டு வருஷம் முன்னாடியே எஸ்.பி ஆயிட்டாங்க.  ஆனா இவங்களுக்கு மட்டும் இன்னும் பதவி உயர்வு குடுக்கலை.  என்ன காரணம், எங்க தாமதமாகுதுன்றது யாருக்குமே புரியலை…“

“கோர்ட் நியூஸ் இருக்கா மச்சான்… ? “ என்றான் பீமராஜன்.

“ஏகப்பட்ட நியூஸ் இருக்கு மச்சான்.. ஹைகோர்ட்ல பரபரப்பா பேசப்படுறது ஜட்ஜ் லிஸ்ட்தான்.  இந்த வருஷ கடைசிக்குள்ள 20 காலியிடம் ஏற்படுது.  இப்போவே நெறய்ய காலியிடம் இருக்கு. அதுக்கு 15 பேரை பரிந்துரை பண்ணி சுப்ரீம் கோர்டுக்கு லிஸ்ட் போயிருக்குன்றதுதான் பரபரப்பான பேச்சு…. “

“யாரு மச்சான் அந்த 15 பேரு ? “

புஷ்பா, கோமதிநாயகம், வேலுமணி, தங்கசிவம், முனீர் ஷெரீப், ரவிக்குமார் பால், பரமசிவம், வி.பி.ராஜேந்திரன், வைத்தியநாதன், பி.என்.பிரகாஷ், ஜெயக்குமார், அருண்குமார், வி.எஸ்.ரவி, கலையரசன், கல்யாணசுந்தரம்.  இதுல வி.எஸ்.ரவி மற்றும் கலையரசன் மாவட்ட நீதிபதியா இருந்து பதவி உயர்வுல வர்றவங்க.. மற்றவங்க எல்லாம் வழக்கறிஞர்கள். இதுல வைத்தியநாதன்ன்றவரு பத்தி போன வாரமே சொல்லியிருந்தேன். இப்போ வழக்கறிஞர்கள் போர்க்கொடி புடிக்கறது பி.என்.பிரகாஷ்க்கு எதிரா….

இந்த பி.என்.பிரகாஷ் நல்ல வழக்கறிஞர், சட்டம் தெரிஞ்சவர். ஆனா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்ன்றதுதான் இவர் மேல இருக்கற புகார். பல போலீஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வக்கீல்.  வேளச்சேரி என்கவுன்டர்ல கூட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வாதாடினார்.   இதெல்லாம் வெளியில தெரிஞ்ச செய்தி.  தெரியாத செய்தி என்னன்னா இவர் ஜெயலலிதாவுக்காக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்துல வக்காலத்து பைல் பண்ணியிருக்கார்.

நரேந்திர மோடிக்கு ரொம்பவும் பழக்கம் இவர்.  ஈஷா மையத்துக்கும் இவர்தான் வழக்கறிஞர்.  ஆர்எஸ்எஸ் உறுப்பினரா இருக்கற இவரை மாதிரி ஆளுங்களை எப்படி நீதிபதியாக்கலாம்னு ஒரு க்ரூப் வக்கீலுங்க மனு குடுக்கப்  போறாங்க. இப்போ தமிழக அரசோட சட்டத்துறை செயலாளரா இருக்கற டாக்டர் ஜெயச்சந்திரன் இவருக்கு நெருங்கிய நண்பர். ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பாத்துருக்காங்களாம்.“

“அதிமுக வக்கீலுங்க யார் பெயரும பரிந்துரை செய்யப்படலையா ? “ என்றான் வடிவேலு.

“கோமதி நாயகம் தானே கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரா  இருக்கார்… அவரு அதிமுக கேன்டிடேட்தான்.. ஆனா அரவிந்த் பாண்டியன், தம்பிதுரையெல்லாம் ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.. ஆனா அவங்க பேர் டெல்லிக்கு போகல…“

“தம்பிதுரை மேல ஒரு ஜாமீன் மேட்டர்ல தப்புப் பண்ணிட்டதா புகார் இருக்கே அவரை எப்படி ஜட்ஜ் ஆக்குவாங்க ? “

“அதெல்லாம் உண்மைதான்.. ஆனா ஆசை யாரை விட்டது.. “ என்று தொடர்ந்தான் தமிழ். ஏற்கனவே மீன் கொழம்பு ஒழுங்கா வைக்கலன்னு அலுவலக உதவியாளரை சஸ்பென்ட் பண்ணிய நடுவர் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு… அந்த அம்மா மேல நடவடிக்கை எடுத்தும் ஊழியர்களை பழிவாங்கற வேலையை எந்த நீதித்துறை நடுவரும் விடற மாதிரி தெரியலை.

திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டுல முன்சீபா இருந்தவங்க பேரு உமா மகேஸ்வரி.   வழக்கமாவே அவங்க கீழே வேலை செய்யற ஊழியர்களை மரியாதைக் குறைவா பேசறது வழக்கம்தான்… அவங்க வீட்டுல அலுவலக உதவியாளரா இருந்த ராஜுன்றவரை போன வாரம் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.  சஸ்பென்ட் பண்றதுக்கு சொன்ன காரணம்தான் கொடுமை… ஞாயிற்றுக்கிழமை வீட்டு வேலை செய்யறதுக்கு வராததால சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க.  இந்த ராஜுவுக்கு ஒரு மாசத்துல பதவி உயர்வு வர வேண்டியது… அதிகாரம் கையில கெடச்சா அதை உதவி பண்ண பயன்படுத்தலன்னாலும், உபத்திரவம் பண்றதுக்கு பயன்படுத்தாமயாவது  இருக்கலாம்ல ? “

“ மீடியா நியூஸ் இல்லையா ? “ என்றான் ரத்னவேல்.

“புதிய தலைமுறை தொலைக்காட்சியில உச்சக்கட்ட குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. இது பத்தி விரிவா அடுத்த வாரம் சொல்றேன். தூங்கப் போலாமா… மணி 3 ஆயிடுச்சு“ என்றான் தமிழ்.

அதற்குள் சரக்கை முடித்து விட்டு ஒரு மோன நிலையில் இருந்த கணேசனும் அதை ஆமோதித்தார்.

 
«முதல்முந்தைய12345678910அடுத்தகடைசி»

பக்கம் 1 / 97

தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday355
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week69607
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month272339
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12794458